இந்த காலத்துல நம்பி நல்ல பாட்டுன்னு ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல. நேற்று ‘வ குவாட்டர் கட்டிங்’ படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ’தேடியே..’ பாடல் நல்ல இருக்கேன்னு யூட்யூபில் தேடினேன். அப்போதான் தெரிஞ்சது அது சுட்ட பாடலென்று... அப்புறம்தான் இசையமைப்பாளர் யாருன்னு பார்த்தா நம்ம GV... அதாங்க தேவா இல்லாத குறைய தீத்து வைக்க வந்திருக்கும் வரப்பிரசாதம். சும்மா மரண காப்பி... இங்க கேளுங்க...
யூட்யூப் அது இதுன்னு இன்னிக்கு எப்படியோ மக்கள் கண்டுபுடிக்கறது தெரிஞ்சும் நம்ம GV சுட்றார்ன்னா.. அவர் தன்னம்பிக்கையை பாராட்டியேயாக வேண்டும். எதோ அந்த காலத்தில் தேவா மைக்கல் ஜாக்சனிடமிருந்து கொஞ்சம் ஆறிப்போன டீ, ஊசிப்போன வடை அந்த மாதிரி சுடுவார் மக்களுக்கும் தெரியாது, ஆனா நம்ம புள்ள சுடச்சுட போட்ற பணியாரத்த ஆட்டைய போட்றார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்துல ’உன் மேல ஆசதான்...’ பாட்டு சர்வம் படத்தின் ‘அடடாவா அடிக்கலாம்..’ மாதிரி இருந்தது. இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்திலும் சரி ஆயிரத்தில் ஒருவனிலும் சரி ’பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ பின்னணி சரமாரியாக தெரிந்தது. இது எல்லாம் தெரிந்தும் அவருக்கு எதுக்கு சான்ஸ். சினி ஃபீல்டில் இருக்கும் கேபிள் சார் மாதிரி ஆட்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
இதே போல யுவனும் வாமனன் படத்தில் ‘ஒரு தேவதை..’ பாடலை ஆஜா நச்லே படத்தில் வரும் ‘ஒரே பியா..’ என்னும் பாடலை தழுவி இசையமைத்திருப்பார். அதுவும் ஒரு சுடல்தான்.இதை இங்கே கேளுங்கள்.
எனக்கு தெரிஞ்சு நியாயமான இரண்டு இசையமைப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் DSP - அவர்களது இசையை மட்டுமே காப்பியடிப்பார்கள். எப்போதும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஒரே மாதிரிதான் இருக்கும்.
இப்படி ஆளளுக்கு சுட்டு சுட்டு பாட்டு போட்டா ஒரு மனுஷன் நம்பிக்கையோட ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல... இதுக்கு என்ன பண்ணலாம்.
டிஸ்கி: ’ஓரே பியா..’ பாடிய ராஹத் ஃபதே அலி கான், நுஸ்ரத் ஃபதே அலி கானின் சகோதரரின் மகன். முடிந்தால் அவரது அனைத்து படப்பாடல்கள் மற்றும் கவாலி பாடல்களை கேட்டுப் பாருங்கள்.
2 Comments:
ஓ அப்படியா சேதி? நான் கூட இந்தப்பாட்டு ரொம்ப அருமையா இருக்கேன்னு ரசிச்சு கேட்டுண்டு இருந்தேனே? கடைசியிலே சுட்ட பழமா? கஷ்டம்!
இருந்தாலும், யூட்யூபில் பார்த்து பதிவு தேத்தும் உன் கடமையுணர்ச்சியை என்னென்று சொல்லுவேன்?
இப்போ நிறைய டைம் இருக்கு போல இருக்கே? மஹா வெட்டியோ?
கடைசி வாரம்... புடுங்க வேண்டிய ஆணியெல்லாம் புடிங்கியாச்சு... தாய் மண்ணைத் தேடி வரும் ஆவலுடன் இருக்கறதால அந்த ஃபீலிங் மெய்டெயின் பண்ண பதிவுகள்... :)
Post a Comment