Tuesday, February 16, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 1

சங்கிலிப் பதிவிற்கு என்னை அழைத்த அனன்யா அக்காவிற்கு முதலில் நன்றி....



சரி மேட்டேர்க்கு வருவோம்.. ஒப்பனிங்க்ல ஒரு ஆஸ்பத்ரிய காமிக்கறோம்....
நர்ஸ்: நெக்ஸ்ட்....
நான்: யா இட்ஸ் மீ...
நர்ஸ்: யூ கேன் கோ இன்...
நான்: நோ வே!!!
நர்ஸ்: வொய்!!!
நான்: யூ ஆர் ஸ்டான்டிங் ஆன் த வே...
நர்ஸ்: ஓ.. சாரி...
நான்: சரி...

டாக்டர்: கம் இன்...
நான்: சார், நாம தமிழ்ல பேசுவோமே...
டாக்டர்: வொய் நாட், சொல்லுங்க என்ன பிரச்சனை?
நான்: நைட் தூங்கும் போது ஒரே ஃபிகரா வருது டாக்டர்
டாக்டர்: என்ன மாதிரி ஃபிகர்
நான்: சின்ன வயசுல பாத்த பிகர் மாதிரி இருக்கு
டாக்டர்: நீங்க சின்ன வயசுல மாத்ஸ்-ல ரொம்ப நல்ல மார்க் வாங்கிருபீங்க போல இருக்கே... வாங்க நாம கண்டுபிடிப்போம். ஹிப்னடைஸ் பண்ணி பாப்போம்.
நான்: சார்.. நான் சொல்றது அந்த ஃபிகர் இல்ல....
டாக்டர்: ஐ நோ எவரிதிங்... யூ கம்... திஸ் இஸ் எ சிம்பிள் ப்ரோப்ளம்...

இப்போ நாம ஹிப்னடைஸ் ரூமிற்கு போகிறோம்.
டாக்டர்: நீங்க இப்போ மெதுவா தூங்க போறீங்க. அப்புறம் கதை சொல்லுவீங்க.
நான்: சார்... நான் தூங்க... நீங்கதான் கதை சொல்லணும்.. நான் எதுக்கு சொல்லணும்...
டாக்டர்: யோவ்.. பேசாம படுய்யா...
நான்: [டொயின்]...

டாக்டர்: இப்போ நீங்க உங்க பதிமூனாவது வயசுல இருந்து பத்தொன்பதாவது வயசு வரைக்கும் என்ன நடந்ததுனு சொலுங்க....
நான்:
நான் இப்போ எட்டாவது படிக்கறேன், கோ எஜுகேஷன். எங்க பாத்தாலும் சும்மா பொண்ணுங்க லட்டு மாதிரி இருக்கு. 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடித்தான்' மாதிரி, அந்த ஸ்கூல்-ல ஒரு ஒரு கிளாஸ்-லயும் ஒரு பாய்ஸ் செக்ஷன், அதுல நான். பக்கத்து கிளாஸ் ல பொண்ணுங்க. மத்த பசங்க எல்லாம் பக்கத்து கிளாஸ்-க்கு டவுட் கேக்க அடிக்கடி போவாங்க. நாம என்ன டவுட் வந்தாலும் அந்த பக்கம் போக மாட்டோம், சுனா பானா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன். ஆனாலும் அந்த கவிதா, தீபா, தனலக்ஷ்மி, வித்யா அவங்களுக்கு மட்டும் நம்ம கெத்துல இருந்து கொஞ்சம் விதி விலக்கு. நான் சின்ன வயசுல இருந்தே ஒரு பெரிய தி. மு.க ஆதரவாளன். ஹிந்தி அப்படினாலே நமக்கு அலர்ஜி. எங்க அக்காக்கு ஹிந்தின்னா உசுரு. அத அமிர்கான் படம் பாக்கறதோட நிறுத்தாம, என்னவோ டெல்லி போற தூதர் மாதிரி பரிட்சையா எழுதி தள்ளிட்டா. அம்மாவும், அப்பாவும் ஹிந்தி படி ஹிந்தி படின்னு ஒரே டார்ச்சர். எனக்கு 18-ஆம் தேதி ஹிஸ்டரி ஹோம் வொர்க் இருக்கு, என்று நானும் நம்ம கவுண்டர் ரேஞ்சுக்கு முயற்சி பண்ணினேன். மூச்சு முட்ட முட்ட முயற்சி பண்ணியும் முடியாமல் அங்க போய் சேர்ந்தாச்சு. ஆ... என்ன.. இவளா... நம்ம தனலக்ஷ்மி... அவ முன்னாடி கெத்து காமிக்க... ஹிந்தி ஜி நமக்கு முன்னாடியே தெரிந்தவர் அதனால்... "ஜி...மே ஃபிர் ஆத்தா ஹூன்... அப் ஜாதா ஹூன்...ஜூனுன் சீரியல் கா டைம் ஹை" என்று குதிரையை ஓட்டிவிட்டு, அவளைப் பார்த்து செஞ்சுரி அடித்த சச்சின் போல புன்னகையை உதிர்த்தேன். அப்புறம் காப்பி அடித்து எப்படியோ பாஸ் செய்துவிட்டேன்.

எட்டாவது படிக்கையில் என் அக்கா பனிரெண்டாவது, எனவே அப்பாவிடம் டியுஷனுக்கு வரும் பெண்களிடம் நம் தவறாக பார்த்தல் விஷயம் நேராக நளினி காதுக்கு போய்டும்... அவளை ஏன் நளினி-ன்னு சொல்றேன்ன இப்போ வர சீரியல்ல எல்லாம் அவள்தானே வில்லி... எங்க அக்காவும் அப்படிதான்... ஆனால், நான் ஒன்பதாவது போனவுடன்... அப்பா எப்போடா சண்டே வெளியில் போவார் நாம டெஸ்ட்க்கு சுபெர்விஷன் போகலாம் என்று காத்துக் கொண்டிருப்பேன்... சுபெர்விஷன் பார்க்கும் போது அப்படியே தாத்தா கடையில் இருந்து சுட்டு வந்த இங்கிலீஷ் புத்தகத்தை கையில் வைத்து பொம்மை பார்த்துக் கொண்டிருப்பேன். கெத்துதான்... டக்கென்று நிமிர்ந்து பசங்களை நோட்டம் விடுவேன்...உசாரா இருக்கேனாம்... அப்படி பார்த்துவிட்டு பெண்களின் பக்கம் ஒரு நோட்டம்... அவர்கள் நாம் உசாரா இருக்கறத கவனிச்சாங்கள அப்படினு... அப்போ வாங்க ஆரமிச்ச பல்பு... ரொம்ப நாள் தொடர்ந்தது.

ஒன்பதாவதில் சண்டை போட்டு ஒரு ஹெர்குலஸ் MTB சைக்கிள் வாங்கியாகிவிட்டது. பின்ன அக்காவுக்கு BSA SLR வாங்கின சும்மா இருப்போமா... நம்ம மருவாதைக்கு இழுக்கு இல்ல.. எங்க ஸ்கூல்ல ஒரு கயிறு இருக்கும், பிரேயர் ஸ்டார்ட் பண்ண அப்புறம் யார் வந்தாலும் அந்த கயிறுக்கு பின்னால நிக்கணும். நாம ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய், சைக்கிள் கயிறுக்கு பின்னாடி நிப்பாட்டிட்டு அங்கே நின்னுட்டு ஆட்டோ-ல வர போற பொண்ணுங்கள பாக்கற சுகம் இருக்கே... அட அட அட... யப்பா... டைம் மெஷின் சீக்கரம் கண்டு புடிங்கப்பா...உலகத்துல முதல்ல ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு போனான்.. கார்த்திக் 1998 கு போனான்னு சரித்திரம் சொல்லட்டும். அப்போ பிரேயர் ஆரம்பிச்சுடும், லேட்டா வர மாப்பிளங்க அப்போதான் வருவாங்க, டேய் மச்சான் உனக்காகத்தான் வெயிட் பண்ணினேன் என்று ஒரு பீலாவை அவிழ்த்துவிட்டு பிரேயர் முடிந்ததும் கிளாஸ்-க்கு போவோம். அப்படியே கெத்தா உள்ள போறது, லேட்னாலேகெத்துதானே . அப்போதுதான் அந்த மேட்டர் நடந்தது. எனக்கு ஒரு பொண்ணு லெட்டர் குடுத்தது. அட உண்மையாதாங்க... பண்பாடு கருதி அந்த தோழியின் பெயரை நான் சொல்லவில்லை. அதும் கவிதைன்ன பாருங்களேன்...

'தரிசு நிலமாக இருந்த என்னை,
விளை நிலமாகிவிட்டு-
வேலி போட மறுப்பது ஏன்?'

படிச்சு பார்த்துட்டு மனதிற்குள், 'டேய் நீ இவளோ நாள் பட்ட பாடு வீண் போகலடா...' என்று என்னையே பாராட்டிக் கொண்டு அவளிடம்...'கவித நல்லாயிருக்கு, எதாவது போட்டியா?' என்றேன். 'போடா வெண்ணை' என்று அவள் சென்று விட்டாள். ம்ம்ம்.. இதெல்லாம் சரித்திரம்.

என்னதான் மனதிற்குள் நான் ஒரு பெரிய மன்மதன் என்று நினைத்தாலும், வெளியில் நான் ஒரு பெரிய பழம்தான். சாதா பழம் இல்லை பலாப்பழம். நெஞ்சு வரை பேன்ட் போட்டு இன் பண்ணிக்கொண்டு, பட்டையை இட்டுக்கொண்டு சாயிந்தரம் ஆனால் வேத கிளாஸ் போவதும். வர இறுதியில் கீ-போர்டு கிளாஸ் போவதுமாய் எனது நேரம் கழியும். அப்போதெல்லாம் கிளாஸ் போகும்போது, எங்க தெருவில் பசங்க விளையாடுவாங்க. என்னடா நம்ம வாழ்க்கை மட்டும் இவ்வளவு கொடுமையா போச்சே அப்படினு பீல் பண்ணுவேன்.

டாக்டர்: தம்பி... இந்த எபிசொட்-க்கு இந்த மொக்க போதும்... அடுத்த வாரம் இன்னொரு செஷனுக்கு வா... இப்போ நீ கெளம்பு...
நான்: சார்.. நான்
தூங்கும்போது என்ன சொன்னேன்...
டாக்டர்: டேய்.. நீ இன்னும் கெளம்பலையா....
நான்: [எஸ்கேப்]......


14 Comments:

Unknown said...

கார்த்திக், ஏன் இந்த கொலை வெறி? சிரிச்சு முடீல. ரொம்ப நல்லா இருக்கு. நான் இந்த போஸ்டே எழுதாத மாதிரி தான் நடந்துக்கணும். ஏன்னா உன்னோட போஸ்ட் அவ்ளொ சுவையா இருக்கு

Sivaprakash Panneerselvam said...

Good one karthi..

Paleo God said...

ரைட்டு.. நடத்துங்க :)

pudugaithendral said...

ஆரம்பமே அசத்தல்.

ரசிச்சு சிரிச்சேன். நீங்க கதை வசனம் எழுத போனால் நல்ல வளமான எதிர்காலம் இருக்கு.

என்னுடைய இன்றைய பதிவை படிச்சு தங்களின்பொன்னான கருத்தையும் சொல்லவேண்டும்.

pudugaithendral said...

ஜிகிர்தண்டா மதுரையில ஃபேமஸ். அப்ப நீங்க மதுரைக்காரரா?? நம்ம பக்கத்து ஊரு தான். புதுக்கோட்டை

ஜிகர்தண்டா Karthik said...

@சிவா...
நன்றி ஹை

@ஷங்கர்...
கண்டிப்பா... அடுத்த பதிவுக்கு வந்துருங்க...

@புதுகை தென்றல்
என்னடா... ஒரு நல்ல காத்து வீசுதே.. தூக்கம் வருதேன்னு பாத்தேன்.
தென்றல் நம்ம பக்கம் வந்துருக்கு.... வருக...வருக...

எனக்கும் கதை, வசனம் எழுதணும்னு ஆசைதான்...
இந்த மாதிரி எதாவது சான்ஸ் கெடச்சதான் உண்டு...

நான் இரும்பு நகரத்துக்காரன்... அதான் நம்ம ஸ்டீல் சிட்டி... சேலம்...

பத்மநாபன் said...

ஜிகர் ... உண்மைலேயே ஜிகர்தண்டா தான் ... அந்த சைக்கிள் போராட்டம் , டௌட்டு க்ளியர் பண்றது , இதல்லாம் இல்லாத வாழ்க்கை வேஸ்ட்ப்பா... அனுபவிச்சு அடிச்சிருக்கிங்க ... அந்த நினப்ப வச்சே
வாழ்க்கையை ஓட்டிரலாம் .... தேங்க்ஸ் .

ரோஸ்விக் said...

அடுத்த தூக்கம் எப்போ கார்த்திக்... இன்னும் சுவாரஸ்யமா கொண்டுபோங்க... டாக்டரை தூங்க வச்சிடாம.... :-)))

எல் கே said...

anne neenga namma oorkarara? teriyama pocche..

kargil Jay said...

adappavi.. siththappa blog -a follow pandraarnu oru maruvaathai illaama yenna ezhuthi irukka? athu mattum illama andha dhanalakshmiya neeyum paththiya? unakku yenna thairiyan? naan oruththan inga yedhukku irukkennu ninaichchuttu irukka ?

ஜிகர்தண்டா Karthik said...

வாங்க LK அப்ப ஊர்காரர் கோட்டால உங்க இணைய இதழ்ல இட ஒதுக்கீடு குடுங்க... :)

சித்தப்பு... அட நீங்க இத நம்பிடேளா.. சும்மா உளுளாய்க்கு..
யப்பா.. எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு... :)

நினைவுகளுடன் -நிகே- said...

ஆரம்பமே அசத்தல்.
நடத்துங்க :)

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

அழகான நகைச்சுவையுடன் ஆரம்பித்து - பதின்ம வயதின் நினைவுகளை அசை போட்டு - ஆனந்தித்து - இடுகை இட்டமை நன்று. நல்வாழ்த்துகள்

எங்கூரு ஜிகர்தண்டா ஸ்டீல் சிடிலேயும் கிடைக்குதா

ஜிகர்தண்டா Karthik said...

@நினைவுகளுடன்-நிகே - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..
@சீனா சார் - வாங்க வாங்க... பின்னூட்டத்திற்கு நன்றி... இது ஸ்டீல் சிட்டில இருக்கற அரிவாள் சிட்டியின் கிளை.

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online