இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக. இதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...
இன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே? சச்சின் எங்கே? கங்குலி எங்கே? மணிரத்தினம் எங்கே? வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ? அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது? வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.
இதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு?
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
4 Comments:
ஜிகர்தண்டா, தீபிகா என்னையும் அதிர்ச்சி அடையச்செய்தது உண்மைதான். பழைய உணர்வு ஏற்படவில்லை என்பதே என் கருத்தும்கூட. இரண்டாம் பகுதி கடைசி கட்டம் காதில் ரத்தம் கசியச்செய்தது. ரொம்ப மத்த கலாச்சாரங்களை வரவேற்று கடைசியில் நம் core values மறக்கப்பட்டிருப்பதாகவே எனக்கும் தோன்றியது.
karthik,
very good writing.. you improved too much... loved it.
ஏதோ ஆரம்பிக்கும்போதே பச்சை சட்டை ரஹ்மான் , மசூதி பின்புறத்தில் என்று ஆரம்பித்து பின்பு நடிகர்ளைக் காண்பித்து ஒருமாதிரியாக பச்சன் குடும்பத்தை வைத்தே ஒரு கால்வாசி ஒட்டிஇருக்கின்றனர். தெலுங்குப் பாட்டில் முதியோர் இல்லத்தை காண்பித்ததில் என்ன தவறு என்று புரியவில்லை.. that may be plain truth..
Thanks Chitappu...
Post a Comment