தலைப்பை பார்த்துவிட்டு அவசர அவசரமாய் ஓடிவந்த ரசிகப் பெருமக்களுக்கு, நான் சொல்லியிருப்பது ஒரு குடும்பப் படத்தை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது அனைத்தும் நான் பார்த்த மலையாள படங்களை வைத்து எழுதியது. இது சிரிக்க மட்டுமே, யாரையும் புண்படுத்த அல்ல.
தேவையான பொருட்கள்:
முற்றத்துடன் கூடிய வீடு - 1
ஹேண்டி கேம் - 1 (நீங்கள் சாதாரணமாக உபயோகிக்கும் டிஜிட்டல் கேமரா கூடப்போதும்)
மோகன்லால் - 1 (மம்மூட்டி இருந்தாலும் ஓகே)
சுகுமாரி - 1
தங்கை - தேவைக்கேற்ப்ப
வெளிச்சம் - முற்றம் இருந்தால் தேவையில்லை.
செய்முறை:
1. ஹேண்டி கேம் நல்ல முறையில் இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். சுகுமாரியை சமையற்கட்டில் உட்கார்ந்து பத்திரத்தை வெறித்துப் பார்க்க சொல்லவும். அங்கு சென்று அவரை ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும்.
2. தங்கைகளை படிக்குமாறு சொல்லி வேறு ஒரு அறையில் உட்கார வைக்கவும். அதையும் ஒரு ஐந்து நிமிடம் படம் பிடிக்கவும். அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் படமாக இருக்கும் இல்லையேல் போட்டோ போல இருந்துவிடும். கவனம் தேவை.
3. வெளியே இருந்து மம்மூட்டியயோ, மோகன் லாலையோ வரச்சொல்லவும். வந்ததும் அவர்கள் தூணருகே நின்று ஒரு முறை இருமச்செய்யவும், அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு எந்த சத்தமானாலும் பரவாயில்லை. இதில் ஒரு ஐந்து நிமிடம்.
4. சுகுமாரியும், தங்கைகளும் வெளியே வந்தபின். நமது ஹீரோவை சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏதாவது பேசச் சொல்லவும். (மற்றவர்களுக்கு வசனம் எழுத வேண்டும், மம்மூட்டியும், மோகன் லாலும் நிறைய படங்களில் இதுபோல் வந்துள்ளதால் வசனம் அவர்களுக்கு தேவையில்லை)
'ஞான் பரயும்ம்...ஈ லோகத்தில் எண்ட சஹோதரிகளுக்கு கல்யாணம் ஆயிட்டில்லா...' என்பது போன்ற வசனங்களை பேசிவிட்டு கண்ணில் நீர்விட்டு வெளியே செல்ல வேண்டும்.
கட் சொல்லிவிடவும்.... அவ்வளவுதான்... இதை பத்து படங்களுக்கு பரிமாறலாம்.
இதற்காகும் செலவுக் கணக்கைப் பாப்போம்:
1. உடை: ஹீரோ வேட்டி சட்டை அணிவதால் அவர்களது உடையே போதும். சுகுமாரிக்கும் ஹீரோ வீட்டில் இருந்து ஒரு பழைய வேட்டியை எடுத்துவரச் சொல்லி சேலையைப் போல் உடுத்த சொல்லிவிடலாம். அவரிடமே ஏதாவது பழைய ப்ளவுஸ் இருந்தால் போட்டு வர சொல்லலாம். தங்கைகளுக்கு அவர்கள் அணிந்து வரும் தாவணியும், பாவாடை சட்டையும் போதுமானது. ஆகவே உடை செலவு இல்லை.
2. போக்குவரத்து: சுகுமாரியை தெரிவு செய்ததே அவர் அதே ஊரில் இருப்பதால்தான். அவருக்காகும் டவுன் பஸ் செலவு ஒரு ஐந்து ரூபாய். ஹீரோவிடம், சார் வீடு மாறி நுழைஞ்சதா நினைச்சுக்குங்க என்று கூறி சமாளித்து அவரது காரிலேயே அனுப்பிவிடலாம். தங்கைகள் அதே ஊர்காரர்களாய் இருந்தால் அந்த செலவும் இல்லை.
3. இதர செலவுகள்: தயாரிப்பாளர் வீட்டில் இருந்தே சாயாவை பிளாஸ்கில் போட்டு கொண்டுவந்தால் அந்த செலவு குறையும். கூட வந்த ஆட்களையும் அதையே கொடுத்து சமாளிக்கலாம். ஆக செலவுகள் கம்மியாகும்.
இதனால் மலையாள படங்களின் சீன்களுக்கு ஆகும் செலவு சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை.
மலையாள படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்த நினைக்கும் நம்மவர்கள், அங்கிங்கு பேருந்து செல்வதை காண்பியுங்கள். அருமையான வளர்ச்சி... மலையாள சினிமாவை வளர்த்த பெருமை உங்களை சேரும்.
இதையும் மீறி வெளிநாட்டில்தான் பணத்தைக் கொட்டித்தான் படம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், நீங்கள் பாலிவுட்டில் முயற்சி செய்யவும்.
அடிதடி, பன்ச் டயலாக் போன்ற மசாலா சமாச்சாரங்கள் வேண்டும் என்றால் தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கு முயற்சி செய்யவும்.
"அழகான" ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் கன்னட படங்களுக்கு செல்லவும்.
கேபிள் சங்கர் அண்ணன் மாதிரி போடலாம்ன்னு பாத்தேன். ஏதோ என்னால முடிஞ்சுது....
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
13 Comments:
hilarious.
குடும்ப படத்துல பாட்டு சீனெல்லாம் இல்லையா?
@அப்பாதுரை; வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..
இது சீரியஸ் சீனாச்சே... :)
டைரக்டர் கேமரா பின்னாடி இருந்து, லா...லா..லா.. அப்படினு சொல்லாம்.
அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் படமாக இருக்கும் இல்லையேல் போட்டோ போல இருந்துவிடும். கவனம் தேவை.- kaarthik, absolutely hilarious.. அழகான ஹீரோக்கள்னா கன்னட படங்களா? எங்க தல புனீத்தைபத்தி தப்பா பேசினா அங்கே ஆட்டோ வரும்னு ரொம்ப தாழ்மையா தெரிவிச்சுக்கறேன்.btw, அவரும் உன் போஸ்ட் படிச்சு ரொம்ப ரசிச்சு சிரிச்சார்.கலக்கிட்ட போ.
:))
கேபிள் சங்கர்
யப்பா ராசா....சிரிச்சு முடில... அவங்க இப்படி எடுத்தாலும் படத்துல சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் வைப்பதில்லை. இதனாலேயே நானும் அதிகம் மலையாளப்படங்கள் பார்ப்பதுண்டு.
மலையாள படம் சீன் - மளையாள சீன் படம் : ஒரு வார்தையை மாத்திப்போட்டா அர்த்தமே மாறிப்பபோயிடுது... அவ்வ்வ்வ்,
@அனன்யா அக்கா - பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி...நம்ப மேக்-அப் மேட்டர் மிஸ் ஆயிடுச்சு..
@கேபிள் அண்ணே - அட வந்துடீங்களா.. படம் பத்தி பதிவு போட்டாதான் வருவீங்க போல இருக்கு...
நாஞ்சில் எக்ஸ்பிரஸ் நம்ம பக்கம் வந்துடுச்சு டோய்... சரியா சொன்னீங்க அதான் தலைப்பு ஒரு தடவைக்கு ரெண்டு தடவ படிச்சுட்டு போட்டேன்... :)
நீங்கள் கிண்டல்செய்து எழுதியிருந்தாலும், மலயாளப் படங்களின் தரம், நல்ல கதை, வசனம், காட்சியமைப்பு, இன்னும் பல நல்ல விஷயங்கள் உள்ளன. சில படங்கள் மசாலா படங்களாகவும் உள்ளன. ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் நாம் தமிழ் திரையுலகினர் எடுத்து வரும் வாந்தி பேதிகளுக்கு, மலயாளப் படங்கள்(பெரும்பாலானவை)ஆயிரம் மடங்கு உயர்ந்தவைதான். நாம் அவர்களை கிண்டலடிக்க சிறிதும் தகுதியற்றவர்கள்.
ஹா ஹா ஹா ஹா சூப்பரு..
@அழகன்: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நான் சொன்னது போலவே இது சிரிக்க மட்டுமே, மலையாள படங்களின் தரத்திற்கு குறைவே இல்லை.
நான் அதிக மலையாள படங்கள் பார்த்ததும் இல்லை, சேனல் மாற்றும்போது வரும் சீன்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். அதைவைத்து எழுதியது.
தமிழ் படங்களை நம்மால் விமர்சனம் செய்ய கூடிய அளவு கூட இல்லை. நினைத்தவன் எல்லாம் ஹீரோ ஆகலாம், பெரிய வில்லனை தூசி போல அடித்து கிளப்பலாம்
என்றாகி விட்டது. அதைபத்தி எதற்க்காக பேசவேண்டும்.... :)
@அண்ணாமலையான் - வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சார்...
:)).சரியான வாலு:))
நன்றி வானம்பாடிகள் அண்ணே :)
சுருட்டி வெச்சுக்கணுமா இல்ல அப்படியே விட்டுறலாமா?
Siruchu Siruchu vayiru valikkuthu karthi...good one..:-)
இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு இதை இன்னொரு தடவை படிச்சு ரசிச்சு சிரிச்சேன். இது ஒரு எபிக் பதிவுடா ..
Post a Comment