Wednesday, March 10, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 2


என்னடா கொசுவத்தி போட்டு போனவன் ஆளக் காணோம் என்று எண்ணி, சந்தோஷப் பட்ட அனைவருக்கும் இன்று கனவில் என் கொசுவத்தியே வரக்கடவது என்று தண்ணீர் தெளித்து சாபம் விடுகிறேன்......

நான்: மே ஐ கம் இன்..
டாக்டர்: நீயா....
நான்: வொய்... நீங்கதான வர சொன்னீங்க...
டாக்டர்: சாரி... சரி வா.. நாம அந்த ரூம் போகலாம்...

உள்ளே சென்ற பின்..

டாக்டர்: ஸ்டார்ட் பண்ணிதொல..

எட்டாவது மற்றும் ஒன்பதாவதில் எங்கள் பள்ளி ஆசிரியை, விசுவின் அரட்டை அரங்கம் புகழ், வத்சலா மிஸ், அன்னுவல் டே-க்கு டிராமா போடுவாங்க. எல்லா வருஷமும் நமக்கு ஒரு ரோல் இருக்கும். நானும் இந்த வருஷம் நமக்கு ஒரு டூயட் இருக்காதா அப்படின்னு ஏங்கி போவேன். அவங்க எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் பெண்கள் முன்னேற்ற டிராமாவ போட்டு அதுல படிக்காத முட்டாப்பயலா நான்...அறிவாளியா வீட்டு வேல செய்யற தங்கச்சி... எப்படிதான் கண்டிபிடிக்கராங்களோ....நாம வந்தாலே முட்டாப்பய வேஷம்தான்... இல்லாட்டி கோர்ட் சீன்ல தோத்து போற ஒரு லாயர்... என்ன கொடும.. இந்த டென்ஷன் தீர நான் பத்தாவது பள்ளிக்கூடம் மாறிட்டேன். எங்க அப்பா வேல பாக்கற ஸ்கூல்... பாய்ஸ் ஸ்கூல். பத்தாவதுல எந்த விஷயமும் மாட்டல... நானும் எந்த விஷயத்துலயும்மாட்டல...

பதினொன்னாவது... வந்த உடனே.. டியுஷன்..."நதிர்தனா... திரனனா..நா...." அப்படினு இப்போ பேமஸ் ஆனா மியுசிக், அப்போவே எனக்குள்ள ஓடிச்சு. முன்னாடி ரோல, பொண்ணுங்க, பின்னாடி ரோல பசங்க... எங்கத்த படிக்கறது... காலைல தலைக்கு குளிச்சுட்டு வர அவங்க தலைல இருந்து சொட்டற தண்ணில அப்படி நாம மனசு குளுந்து போய்டும். ஆனா ஒண்ணுங்க... பசங்க எல்லாம் மாங்கு மாங்குன்னு சைக்கிள்-ல வருவோம்.. அவங்க சும்மா டர்ன்னு வண்டில வந்துடு போயிட்டே இருப்பாங்க.. நாங்களும் வேகமா தொரத்துவோம், ஆனா பவுண்டரி போற பந்த தொரத்தர இந்திய கிரிக்கெட் வீரர் மாதிரி சொங்கி போய்டுவோம். இப்படியா சைக்கிள்-ல சாகசம் காட்றது... அப்படி இப்படினு போயிடு இருந்தது வாழ்க்கை... ஆனா, ஒரு இடத்துல மட்டும் நான் சண்டித்தனமே பண்ண மாட்டேன். கணக்கு டியுஷன் ல... ஏன்ன எங்க அப்பதான் எனக்கு கணக்கு டியுஷன் எடுத்தார்... பள்ளிகூடத்தில்கூட அவர்தான் எனக்கு கணக்கு. அதனால், கணக்கு டியூஷனில் யாரையும் கணக்கு பண்ண முடியவில்லை. சில பொண்ணுங்கள அவங்க அப்பா கூட்டிட்டு போக வருவாரு... அப்போ அவங்க கீழ வெயிட் பண்ணினா.. நாங்க அப்படியே சைக்கிள் பக்கதுல நின்னு பேசிட்டே இருப்போம்.. அதும் ஸ்டடீஸ் பத்திதான்... சில நேரங்கள்ல, மழை விழற ஸ்பீட் வெச்சு, க்ராவிடி கால்குலேட் பண்ற லெவெலுக்குபோவோம்.

இப்படியா பதினொன்னு, பன்னிரண்டு எல்லாம் நல்லபடியா போக. முதல் நாள் கவுன்சிலிங். எனக்கு முன்னால் நின்ற பெண், 'விச் காலேஜ் யு ஹவ் ஆப்டேட் ஃபார்' என்றாள்.. எனக்கு அவளது வேக இங்கிலீஷ் புரியவில்லை. 'மீ.. மீ... அம்ரிதா கோயம்புத்தூர்' என்று கூறி ஒரு புன்னகை பூத்தேன். அப்படியே அவள் கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்டேன்.. நம்ம இங்கிலீஷ் சும்மாவா... 'வெங்கடேஸ்வரா' என்றாள்... 'குட் காலேஜ்' என்று சர்டிபிகேட் குடுத்தேன்.... புன்னகைத்தாள்... அந்த புன்னகை என்னும் மின்னலில் ஒடிந்த இதயம், இன்றும் விரிசல்களுடனே இருக்கிறது.

முதல் வருடம், மின்னலே பார்த்துவிட்டு கல்லூரிக்குள் சென்றேன். அங்கு பெண்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றேன். அதிகம் பெண்களுடன் பேசும் பசங்க... அப்பாஸ் போலவும்... நான் மாதவன் போலவும் எனக்கு நெனப்பு... (நெனப்பு - கவனிக்க) என்னதான் நாம அடக்கி வெச்சாலும். சுஜாதா சொல்ற மாதிரி அந்த ஹைட்ரோஜென், ஆக்சிஜென் மாதிரி இருக்கற ஹார்மோன் எக்ஸ்ட்ரா டைம் வேல பாக்க ஆரமிசிடுச்சு. வந்த முதல் நாளே நானும் என் நண்பனும், என் வகுப்பில் இருந்த பெண்களுக்கு மார்க் போட ஆரமித்தோம்.. 'மச்சி.. ஒரு நாப்பது..' என்று அவன் சொல்ல... 'மச்சி.. நீ வாத்தியார போனா எல்லாரும் பாஸ் ஆயிடுவாங்க' என்று நாங்கள் கலாய்க்க. இப்படியான வறண்டு போன பாலைவனத்தில்தான் நான் நான்கு வருடம் படித்தேன்.

லேப்பில் சில அழகான பெண்கள் அருகே இருக்கும் கணினியில் அமர்ந்தால் போதும். நாங்கள் பேசும் பாஷையே வேறு மாதிரி ஆகிவிடும். 'மச்சி.. இந்த ப்ரோக்ராம் python -ல பண்ணலாம்' என்று ஏதோ தெரிந்த மாதிரி அடித்து விடுவோம். வகுப்பில் ப்ரொபசர் எதாவது கேள்வி கேட்டல் எழுந்து நின்றுகொண்டே இருப்போம். வெளியே போக சொன்னாலும். கெத்து காமித்து வெளியே போவோம்.
ஆக எனது டீன் ஏஜ் வாழ்க்கை கெத்திலே தொடங்கி கெத்திலே முடிந்தது......

டாக்டர்: போதும்.... நிறுத்து...
நான்: சார்.. எனக்கு என்ன பண்றதுன்னு நீங்கதான் சொல்லணும்...
டாக்டர்: [இப்போ நான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படணும்] தம்பி... நீ உன் மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு அழுத்தி வெச்சுருக்க.. அத நீ ஏன் புஸ்தகமா போட கூடாது...
நான்: என்ன சார் சொல்றீங்க...
டாக்டர்: இல்ல.. இத நீ ஒரு சுயசரிதம எழுதினா... வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுபாங்க இல்ல...
நான்: அப்படியா சொல்றீங்க...

இப்படியாக எனது கொசுவத்தி சுற்றியது... டீன் ஏஜ் முடிந்தது... இதன் பிறகு நடந்த விஷயங்களை... எனது சரித்தர புத்தகம் வெளிவரும்போது படித்து தெரிந்துகொள்ளுங்கள். முதல் பதிவு பார்த்தவுடனே... பெரிய பெரிய பதிப்பகத்தில் இருந்து ஏகப்பட்ட கால்கள், நீங்க உங்க சுயசரிதம் எழுதுங்க என்று. அதனால் 'சத்யாவிற்கு சோதனை' என்ற எனது சுயசரிதம் சீக்கிரம் வெளிவரும் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

கொஞ்சம் லேட்தான் என்றாலும், கொசிவத்தியை சுத்த, கார்கில் ஜெய் அவர்களை அழைக்கிறேன்.


6 Comments:

பத்மநாபன் said...

ஹைட்ட்ரோஜென் .... நல்ல நக்கல் ... அதெல்லாம் நம்மள கேட்டுட்டா வருது .. பௌண்டரி தொரத்தல், நதிர்தனா .... க்ராவிடி கால்கூலஷேன் , பைதான் ..... ஒரே ரகளை ஜிகர் . டாக்டர் மேலதான் கோவம் வருது சீக்கரம் முடிக்க வச்சதுக்கு ...
புத்தகம் போடவச்சதுனால தப்பிச்சுட்டாரு .... அதென்ன ''சத்யா'' சோதனை ......

Ananya Mahadevan said...

பத்மனாபன் சாருக்கு கோடானுகோடி நன்றி.. வழிமொழிகிறேன்!

vasu balaji said...

ஆரம்பிச்சிட்டியா:)). ஸ்டார்ட் த மீஜிக்:))

அன்புடன் அருணா said...

இதென்ன சத்யாவுக்கு வந்த சோதனை!!??

Sivaprakash Panneerselvam said...

Karthi...kosuvathiya innum konja neram sutha vitrukkalam...adutha pathivu seekaram podunga...

ஜிகர்தண்டா Karthik said...

முதலில் அனைவரின் கேள்வி... "அதென்ன சத்யாவிற்கு சோதனை..."
அது டீன் ஏஜ் தாண்டி நடந்த கதை... என்னோட சுயசரிதத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும்.... :))


நன்றி பத்மநாபன் சார்....
நன்றி அனன்யா அக்கா
வானம்பாடிகள் அண்ணே... வந்துட்டோம் இல்ல.. இனிமேல் சும்மா அதிரும் பாருங்க...
நன்றி அருணா மேடம்
சிவா... நன்றி ஹை...

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online