[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]
டிஷும்... டிஷும்ம்..... வகுப்பறையை வாசல் வழியாக வெளியே வந்து விழுந்தான். இப்போதே தெரிந்திருக்கும் இவன்தான் நம்ம ஹீரோ அப்படினு. தொப்பென்று விழுந்தவன்... திடீரென கண்களை திறக்கிறான்...
ஹீரோ: சார்... இப்போ சாங்க்தான....
நான்: யோவ்... உன் மூஞ்சிக்கு பாட்டு வேறயா...அப்படியே படுத்த மாதிரியே... மூஞ்சிய திருப்பீட்டு பேசு...
இனிமேல் வருவதை நம்ம காக்க காக்க சூர்யா மாதிரி படிக்கவும்.
"அந்த கடலை ஒழிப்பு வேல எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது, இப்போ என்னால என் சாக்ஸ் ஆபத்துல இருக்கு... எழுந்திரிக்கணும்... முடில.. என் மூக்குல நாத்தம் புடிச்ச சாக்ஸ் போட்டு போய்ட்டான்.. மூளையே கொழம்பீடுச்சு... நாத்தம்.. செம நாத்தம்... என் சாக்ஸ், அத நான் காப்பத்தணும்..எழுந்திரி... எழுந்திரி..."
[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]
'என் பேரு அன்புச்செல்வன்... அழுக்கு சாக்ஸ் அன்புச்செல்வன்..கடலை ஒழிப்பு சங்க உறுப்பினர்...பேருக்கு முன்னாடி இருக்கே அதுதான் என் தவம்... கடலை போடறவன கண்டாலே எனக்கு பிடிக்காது.. எங்க டீம்ல நாலு பேரு.. சாக்கடை ஸ்ரீகாந்த், இஞ்சி இடுப்பழகன் இளமாறன், ஆக்சிஜென் அருள். எங்கள கடலை ஒழிப்பு சங்கத்துல போட்டபோதுதான், வாஸ் பேசின் வாசுதேவன் வந்தாரு. பாம்பே ஐ. ஐ. டி ல கடலைய ஒழிச்சவர்... முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்டு மயக்கம் போட வெச்சவரு... ஹி இஸ் கொன்ன லீட் அஸ்'
எங்க மீட்டிங் போது நான் சொன்னேன்...
'சார்... நம்ம காலேஜ்-ல இருக்கற மிகப்பெரிய கடலை பசங்க லிஸ்ட் இது. வெறும் சட்டிலையே சும்மா கருப்பு புகை வர அளவுக்கு கடலை வறுப்பாங்க. கடலை குமார் - இவன் எப்பவுமே பொண்ணுங்க கூடதான் இருப்பான். மைதா மனோகர் - இவர் கொழு கொழுன்னு இருக்கறதால பொண்ணுங்களுக்கு பிடிக்கும். செல்போன் சிவகுமார் - இவன் செல்போன்-ல மரண கடலை போடுவான். இவங்க எல்லாம் வரப்போற அன்னுவல் டே-ல மரண கடலை போடபோறதா தகவல் வந்துருக்கு. நாலு மாசம் துவைக்கத சாக்சோட வேட்டைக்கு நாங்க தயார்'
அப்போதான் வாசுதேவன் சொன்னார். 'நான் முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்ருக்கேன். அதுல ஒருத்தன் மட்டும் கடலை போடல, சப்ஜெக்ட் டிஸ்கஸ் பண்ணினோம் அப்படினு என் மேல கம்ப்ளைன்ட் குடுத்தான்... எல்லாரும் அத பத்தி மட்டும்தான் பேசினாங்க... சோ நீங்க ஜாக்கிரதையா சாக்ஸ் போடணும்'
நாங்க நாலு பேரு.. எங்கள அன்டச்சபில்ல்ஸ் அப்படினு சொல்லுவாங்க... அப்படி நாறும் எங்க சாக்ஸ்...
லேப்-ல மைதா மனோகர் இருக்கறத எங்களுக்கு தகவல் வந்தது... சுத்திப் போய் எல்லாரும் அவன் மூஞ்சில சாக்ஸ் போட்டு அவன மயக்கம் போட வெச்சோம். இதுதான் எங்களுக்கு பெரிய வெற்றி...இதே மாதிரியே பிளான் பண்ணி, நாங்க கடலை குமார போட்டு தள்ளினோம், அவன சங்கத்துக்கு முன்னாடி நிறுத்தலாம்னு எல்லாரும் சொன்னாங்க, நான்தான் அதெல்லாம் வேஸ்ட் அப்படினு தூரத்துல இருந்தே சாக்ஸ் தூக்கி போட்டு மயக்கம் போட வெச்சேன். என்னதான் என்னோட ஒரு சாக்ஸ் போனாலும், நம்ம லட்சியத்த அடைஞ்சோம் இல்ல அப்படினு அவங்ககிட சொல்லி பெருமைப்பட்டேன். அவங்களுக்கும் அதுல ஒரு சந்தோஷம். இந்த டைம்-ல தான் அவள பாத்தேன், ஆயா... டாய்லெட் கழுவுற ஆயா..
ஷி இஸ் எ பேண்டசி..ல..ல லா....
ஒரு ஊரில் அழுக்கே உருவாய் ஒருத்தி இருந்தாலே...
அவள் அருகே போனால் நாத்தத்தில் துரத்தி அடிப்பாளே...
அவகிட்ட எனக்கு பிடிச்சதே அவ போட்டுட்டு வர அந்த அழுக்கு சாக்ஸ்தான், எப்போ துவைச்சாளோ தெரில... ஆனா எங்க சாக்ஸவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா நாத்தம்தான்.
இந்த டைம்ல, செல்போன் சிவகுமார் வீக்-எண்டு ஊருக்கு போறபோது, கவிதா கூட போறத எங்களுக்கு தகவல் வந்தது. உடனே நாங்க நாலு பேரும், எங்ககிட்ட இருக்கற அழுக்கு சாக்ஸ் எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் போனோம். அங்க அவன் எங்கள பாத்ததும் உஷார் ஆயிட்டான். ஆனா நாங்க அவன தொரத்தி புடிச்சோம்.
ஸ்ரீகாந்த்: 'அன்பு இவன போட்றனும் அன்பு'
நான்: 'டேய் சிவகுமார், தப்பிக்கலாம்னா பாத்தா... டேய் அருள்.. ஒன்னு போடறா...'
இளமாறன்: ஐயோ... சாக்ஸ் போட சொன்னா நீ என்னத்தடா போட்ட... நாத்தம் தாங்கல.. சாக்ஸ் போடறா....
சிவகுமார்: ஹா...ஹையோ... இதுக்கு அந்த சாக்சே பரவா இல்லையே... ஹாஆஅ.... [மயக்கம் போடுகிறான்]
இப்படி சில சமயம் அருள் சாக்ஸ்க்கு வேல இல்லாம பண்ணுவான், அதுக்குதான் அவன் பேரு ஆக்சிஜன் அருள்.
இதெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது.... டைரக்டர் கட் சொல்லி... அடுத்த பதிவுல படிங்க அப்படினு சொன்னா எப்படி இருக்கும் அப்படினு யோசிச்சாரு....
8 Comments:
ஆக்ஸிஜன் அருளோ அணுகுண்டு அருளோ, சிரிச்சு சிரிச்சு வயத்த வலிக்கறது! சூப்பர்!
பட்ட பெயரோட , சாக்ஸ் வச்சு , ஒவ்வொரு வறுவர்களையும் நெடி யோட வேட்டையாடிய விதம் நல்ல காமெடி .. கடைசியில சேம் சைடு பாம் ........ என்னத்தடா .......போட்டே..... சலிப்பு சூப்பர் .... ஒரே ஜிகர்தனா ...... ஜிகர்தனாதான் ( பை தி பை , இங்க வெள்ளைக்காரங்க பத்து நாள் குளிக்ககூட மாட்டங்க ஆனா சாக்ஸ் நெடிய ஈசியா கண்டு புடிச்சிருவங்க அது அவங்கனால தாங்கவே முடியாது ... செண்டு , பவுடர் போட்டாலும் எல்லாம் சேர்ந்து இன்னமும் மோசமாய்டும் .... அதுக்காகவே 14 ஜோடி சாக்ஸ் வாங்கி காலையில ஒண்ணு மத்தியானம் ஒண்ணுன்னு மாத்திட்டு திரியறோம் )
சூப்பர் பாஸ்... கலக்கல்
super... really very funny...
//இவன் செல்போன்-ல மரண கடலை போடுவான்// -- could add like 'ivan charge theerara maadhiri mattum illa, dial pade theenju pogara maadhiri kadala varuppan.. cellphonoda speakerke same blood vandhudunna paaththukkunga.. andha raththaththa paththuthan ivan pottu thallidanumnu oru veri vandhadhu'
arumai super
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//இப்படி சில சமயம் அருள் சாக்ஸ்க்கு வேல இல்லாம பண்ணுவான், அதுக்குதான் அவன் பேரு ஆக்சிஜன் அருள்//
ஹ ஹாஅஹா
அட நீங்கள் நான் போட்டுள்ள ஆண்கல் பகுதியில் சாக்ஸ் டிப்ஸ படிக்கலையா?
Post a Comment