என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அனன்யா அக்காவிற்கு எனது முதல் சலாம். பரிட்சை முடிந்து பலவிஷயங்களை பற்றி எழுதலாம் என்றால், எல்லா எண்ணங்களும் தலைக்கு மேலே போக, பவுன்சர் பார்த்த இந்திய அணி போல குதித்துக் கொண்டிருந்த எனக்கு லட்டு மாதிரி பந்து போட்டதால் அவருக்கு நன்றி. சிக்சர் அடிக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அம்பயர் ரெடி???
அனன்யா அக்கா என்னிடம் சொன்னார்கள், மொத்தம் பத்து படம். நாம ஒவ்வொரு genre க்கும் பத்து படம் எழுத சொன்ன எழுதலாம். மொத்தம் பத்து படம்ன்னா, கஷ்டம்தான். முயற்சி பண்ணுவோம்ன்னு களத்துல குதிச்சாச்சு. இருங்க கால் மேல கால் போட்டுக்கறேன்.. டாப் டென் மூவீஸ்-ன்ன சும்மாவா...
வணக்கம் நேயர்களே, ஜிகர்தண்டா டாப் டென் மூவீஸ்-ல எந்த எந்த படங்கள் எந்த எந்த இடத்த பிடிச்சுருக்குன்னு பாக்கறதுல ஆவலா இருப்பீங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம். இதுதான் வரிசைன்னு இல்ல. இந்த பத்து படங்கள் எனக்கு பிடிச்சது, எந்த வரிசைல பாத்தாலும் எனக்கு பிடிக்கும். என்னடா எல்லாமே சீரியஸ் படமா இருக்கே இவன் சீரியஸ் ஆலோ நெனைக்காதீங்க, சினிமால எனக்குன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்புகளை தீர்த்து வைத்த படங்கள் இவைன்னு சொல்லலாம்.
திருவிளையாடல் (1965)அனன்யா அக்கா என்னிடம் சொன்னார்கள், மொத்தம் பத்து படம். நாம ஒவ்வொரு genre க்கும் பத்து படம் எழுத சொன்ன எழுதலாம். மொத்தம் பத்து படம்ன்னா, கஷ்டம்தான். முயற்சி பண்ணுவோம்ன்னு களத்துல குதிச்சாச்சு. இருங்க கால் மேல கால் போட்டுக்கறேன்.. டாப் டென் மூவீஸ்-ன்ன சும்மாவா...
வணக்கம் நேயர்களே, ஜிகர்தண்டா டாப் டென் மூவீஸ்-ல எந்த எந்த படங்கள் எந்த எந்த இடத்த பிடிச்சுருக்குன்னு பாக்கறதுல ஆவலா இருப்பீங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம். இதுதான் வரிசைன்னு இல்ல. இந்த பத்து படங்கள் எனக்கு பிடிச்சது, எந்த வரிசைல பாத்தாலும் எனக்கு பிடிக்கும். என்னடா எல்லாமே சீரியஸ் படமா இருக்கே இவன் சீரியஸ் ஆலோ நெனைக்காதீங்க, சினிமால எனக்குன்னு ஒரு சின்ன எதிர்பார்ப்புகளை தீர்த்து வைத்த படங்கள் இவைன்னு சொல்லலாம்.
அருமையான படம், சிவாஜி கணேசன் நடிப்பும் இந்த படத்தில் வரும் இசையும் நம்மை வேறு உலகிற்கு அழைத்து செல்லும். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு திருவிளையாடலும் மிகவும் சுவாரசியமாகவும், இனிமையாகவும் இருக்கும். நான் சிறு வயதில் ஒரு முறையும், சிலநாட்களுக்கு முன்னாலும் ரசித்த படம். எவர் கிரீன் வரிசையில் அனைவரின் மனத்திலும் இருக்கும் படம். திருவாளர் நாகேஷின் நடிப்பு, படத்தின்சிறப்பாம்சம். படங்களின் வரிசையில் திருவிளையாடல் இன்னும் விளையாடுகிறது.
கமலஹாசன் காமெடி இரண்டையும் தனியே ரசித்தால் கூட ஆனந்தமாய் இருக்கும், இரண்டும் ஒன்று சேர்ந்து கூத்தடித்தால். அந்த வரிசையில் இந்த படம் ஒரு தனி முத்திரை பதித்த படம். குடும்பத்தில் சபலத்தால் ஏற்படும் பிரச்சனைகளை, காமெடியாய் சொல்லும் படம். சிரிக்க ஒரு வாய்ப்பு. சதிலீலாவதி சிரிலீலவதி.
தலைவரின் நடிப்பு திறனை அற்புதமாக வெளிக்கொண்டுவருமாறு படங்கள் எடுப்பதில் மகேந்திரன் ஒரு முக்கிய இடம் வகிப்பவர். முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களில் தலைவர் வாழ்ந்திருப்பார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து, மெதுவாக நகரும் படம். மனதை கனக்க வைக்கும் காட்சிகள். முள்ளும் மலரும், வாசம்.
நட்பு என்பது வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம். உலகமறியாமல் இடுகாட்டில் காலம் கழித்த முரட்டு விக்ரம், உலகை ஏமாற்றி திரியும் சாமர்த்திய சூர்யாவிடம் நட்புடன் இருப்பதும். அவர்கள் வாழ்வில் நடக்கும் சுவையான விஷயங்கள். சூர்யாவின்மரணத்திற்கு பிறகு, வில்லனை பழிவாங்குவதும் மனதை நெகிழவைக்கும். பிதாமகன், தலைமகன்.
அன்பே சிவம் (2003)
உலகின் பெரிய இரண்டு விஷயங்கள், நாடுகளுக்குள் போரை மூட்டிய கருத்துகளை கமலஹாசன் மற்றும் மாதவன் பரிமாறிக்கொள்வதும். சுயநல மாதவன் இறுதியில் பல விஷயங்களை அந்த பயணத்தின்போது அறிந்து கொள்வதும், நாமும் அவர்களுடன் பயணிப்பதைப் போன்றதொரு எண்ணத்தை தரும். அங்கங்கே வந்து செல்லும் சிறு வேடங்களும் சரி, தங்களது பணியை உணர்ந்து நடித்திருப்பர். அன்பே சிவம், என்றும் முதன்மை...
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே நமக்கு சிவாஜி கணேசனின் முகம்தான் ஞாபகத்திற்கு வரும், அந்த அளவிற்கு இந்த படத்தில் வாழ்ந்திருப்பார். சுதந்திர போரட்டத்தை இப்படித்தான் பண்ணியிருப்பார்கள் என்று நமக்கு அறிவித்த படங்களுள் தலயாய படம். சாம்பார் இல்லாமல் விருந்தா, அதுபோல இந்த படம் இல்லாமல் சிறந்த பத்தா?
நாயகன் (1988)
மணிரத்னம், கமலஹாசன் இணைந்து பணியாற்றிய படம். டைம் பத்திரிகையில் "All time best" படங்களின் வரிசையில் இன்னும் இருக்கிறது. என் வரிசையில் இல்லாமல் போகுமா?
வேதம் புதிது (1987)
வேதம் புதிது (1987)
சாதிகள் இல்லையடி பாப்பா... என்று பாரதி அன்று சொல்லிவிட்டு சென்றாலும், இன்றும் அது எல்லா இடத்திலும் உள்ளது. இதை மையமாக வைத்து பாரதிராஜா அவர்கள் இயக்கிய படம். சத்யராஜ் நடித்த படங்களுள் எனக்கு மிகவும் பிடித்த படம்.
தளபதி (1991)
கர்ணன், துரியோதனன் கதையா அடிப்படையாய் கொண்டு மணிரத்னம் இயக்கிய படம். நட்பு... நட்பிற்கு ஒரு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்தும் அருமையாக விளக்கப்பட்ட படம். ரஜினி, மம்மூட்டி அவர்களின் நடிப்பு நவீன கால கர்ணன் துரியோதனனை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.
மூன்றாம் பிறை (1982)
ஸ்ரீதேவி மனநோயாளியாக நடித்த படம். கடைசி காட்சி மூலம் தேசிய விருதை தட்டிச்சென்றார் கமல். ஸ்ரீதேவியை வடநாட்டிற்கு தியாகம் செய்ய உதவிய படம். இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். அனைவரது மனதையும் நெகிழ வைத்தபடம்.
ஸ்ரீதேவி மனநோயாளியாக நடித்த படம். கடைசி காட்சி மூலம் தேசிய விருதை தட்டிச்சென்றார் கமல். ஸ்ரீதேவியை வடநாட்டிற்கு தியாகம் செய்ய உதவிய படம். இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். அனைவரது மனதையும் நெகிழ வைத்தபடம்.
இதில் இன்னொரு விஷயம், இந்த பத்து படங்களில் இசை ஒரு முக்கிய இடத்தைபிடித்துள்ளது. அதில் இசைஞானி ஏழு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இதைப்பற்றி உங்களது கருத்துகளை எழுதுங்கள். அடுத்து இதை நான் தொடரஅழைப்பது
கார்கில் ஜெய்
5 Comments:
எப்படி என்று தெரியவில்லை....பெரும்பாலனவர்களின் ரசனைக்கும் இந்த பத்து படங்கள்... உகந்த படங்கள்...
மகிழ்ச்சி....
திருவிளையாடல்--- தருமி...சிவாஜி.
சதிலீலாவதி --சத்திவேல் டாக்டர்
அன்பேசிவம் -- நல்லா..
நாயகன் ...தென்பாண்டி சீமையிலே...
வீ.பா.கட்....கிஸ்தி ...வரி...
வே.புதிது...கண்ணுக்குள் நூறு நிலவா...
தளபதி.....தேவா...சூர்யா..
மூன்றாம் பிறை ... சுப்ரமணீ....
பிதாமகன் ....இளங்காற்று வீசுதே.....
மூம் மம்...... செந்தாழாம் பூவில்....
இந்த பட்டியல் மாற இன்னமும் 50 வருடமாவது ஆகும் என நினைக்கிறேன்...
ஜிகர்,
சபாஷ்!!! சரியான செலக்ஷன்! பட்டைய கிளப்பிட்டே கண்ணா!
சதிலீலாவதி = கிச்சு கிச்சு
வே.புதிது= சோஷியல் மெஸேஜ்
மூ.பிறை=சீனு-விஜி!!! ஆஹா..
திருவிளையாடல்=அமோகம்(இந்தப்படம் எல்லாரும் போடுறாங்கன்னு தான் நான் அவாய்டு பண்ணிட்டேன், அத்திம்பேர் ஃபேவரைட்ஸ் லிஸ்டுல போட்டாச்சு போட்டாச்சு! சாரி ரெண்டு நாளா துபாய் வாசம். அதான் இப்போ பார்த்தேன். பத்து அங்கிள் தான் அலர்ட்டினார். தாங்க்ஸ் பத்து அங்கிள்@
ஜிகர்தண்டாவின் பத்து படஙக்ளும் ம்ம் அருமை
மேலே சொன்ன பத்து படங்களில், ஆறு படங்களில் மட்டுமே இளையராஜா இசை அமைத்து உள்ளார்.
சதிலீலாவதி, முள்ளும் மலரும், பிதாமகன், வேதம் புதிது, மூன்றாம் பிறை, நாயகன், தளபதி என் கணக்கில் ஏழு வருகிறதே....
Post a Comment