அழகு என்றாலே அவள்தானே என்று அவனுக்குத் தோன்றியது.
பெண்ணின் முகத்தை நிலவுடன் ஒப்பிட்டு அழகு என்று கூறுவார்கள். நிலவு என்ன அவ்வளவு அழகா? அங்கங்கே கருப்படித்து. இல்லை.. இல்லை... இனி ஒரு விதி செய்வோம், அழகென்றால் அவள் முகத்துடன்தான் ஒப்பிடவேண்டும். அங்கே பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியரை ஜன்னலின் வழியே பார்த்தபோது, அவள் சிரிக்கையில் அவளின் கன்னக் குழியில் பல்லாங்குழி விளையாடலாமே என்ற யோசனை அவனுக்கு உதித்தது.
வெண்ணிற முத்துகள் அவள் பற்கள் போல இருக்கும். கண்களினால் அனைவரையும் தன்பால் இழுத்து விடுவாளே, கள்ளி. அவளருகே செல்லுவதையே கர்பக்ரகதினுள் செல்லும் பக்தன் போல பெருமையாய் நினைக்கும் கூட்டத்தின் நடுவே, அன்று என்னருகில் பேருந்தில் அமர்ந்தாலே. என்ன வாசனை பவுடர் போட்டிருந்தாள், நானும் கடையில் விற்கும் அனைத்து பவுடர்-உம் வாங்கிப் பார்த்துவிட்டேனே. ஒரு வேலை பாண்டிய மன்னனின் சந்தேகம் போல பெண்களின் உடலுக்கும் எதாவது வாசம் உண்டா?
சுண்டினால் ரத்தம் வருமாமே அந்த வெள்ளைக் காரர்களுக்கு, வரச்சொல்லுங்கள் பாப்போம். இவளுக்கு சுண்டுவோம் என்ற எண்ணம் எழுந்தாலே ரத்தம் வருமே. சில்லறையை கொட்டியது போல சிரிப்பது அழகாம். சில்லறையை கொட்டி பாருங்கள் தெரியும் அதன் நாராசம். சத்தம் இல்லாமல் இவள் வடிக்கும் புன்னகையைப் ரசிக்க நான் முன்னூறு வருடம் தவம் கிடக்க தயார்.
அன்று மழையில் நனைந்து வந்த அவளின் கார்மேக கூந்தலில் இருந்து சொட்டிய துளிகள், மழையினுள் மழையாகவே தெரிந்ததே. ஒளியிலே தெரிந்த தேவதையில்லை இவள், இருளில் ஒளி தருகின்ற தேவதை.
'ஓகே பசங்களா, என்ன அழக பத்தி எழுதீட்டீங்களா? நேரம் முடிஞ்சது, பேப்பர் குடுங்க' என்ற ஆசிரியரிடம் தான் யோசித்த அனைத்தையும் எழுதாமல் வெறும் பேப்பரை கொடுத்துவிட்டு அவளை நோக்கினான், கவிதை எழுதிய மகிழ்வோடு.
Box Office Report -Aug 24
2 hours ago
3 Comments:
<<<
அழகென்றால் அவள் முகத்துடன்தான் ஒப்பிடவேண்டும். அங்கே பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியரை ஜன்னலின் வழியே பார்த்தபோது, அவள் சிரிக்கையில் அவளின் கன்னக் குழியில் பல்லாங்குழி விளையாடலாமே என்ற யோசனை அவனுக்கு உதித்தது.
>>>
ஓஓஓஓஓ.....
டீச்சர்மேலயேவா? ;)
மஸ்தான், உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு
Good Start.... Keep going... Expecting a lot from you..
Post a Comment