இந்த காலத்துல நம்பி நல்ல பாட்டுன்னு ஒரு பாட்டு கேட்க முடியரதில்ல. நேற்று ‘வ குவாட்டர் கட்டிங்’ படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ’தேடியே..’ பாடல் நல்ல இருக்கேன்னு யூட்யூபில் தேடினேன். அப்போதான் தெரிஞ்சது அது சுட்ட பாடலென்று... அப்புறம்தான் இசையமைப்பாளர் யாருன்னு பார்த்தா நம்ம GV... அதாங்க தேவா இல்லாத குறைய தீத்து வைக்க வந்திருக்கும் வரப்பிரசாதம். சும்மா மரண காப்பி... இங்க கேளுங்க...
Monday, December 06, 2010
சுடச்சுட பாடல்
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 2:29 PM 2 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Friday, January 29, 2010
'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்
இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக. இதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...
இன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே? சச்சின் எங்கே? கங்குலி எங்கே? மணிரத்தினம் எங்கே? வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ? அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது? வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.
இதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு?
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 10:31 AM 4 பேர் கருத்து சொல்லிருக்காங்க
Labels: ஆதங்கம், இசை, இன்பர்மேசன், சீரியஸ்
Sunday, October 11, 2009
உள்ளம் இறங்கிவிடய்யா முருகா!!!
என்ன ஒரு பக்தி , முருகனே நேரில் வந்து விடுவானே இப்படி பாடினால்.
ராகம்: நீலமணி
எழுதியவர்: அனயம்பட்டி ஆதிசேஷய்யர்
அருணா சாயிராமிடம் பிடித்தே தமிழ் பாடல்களை அவர் மார்கழி மகா உற்சவத்தில் பாடுவது. எளியோருக்கும் புரியும் வகையில் இருக்கும் பாடல்கள்.
அச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 3:25 PM 0 பேர் கருத்து சொல்லிருக்காங்க
