Tuesday, March 16, 2010

தாக்க... தாக்க... - த சாக்ஸ் அட்டாக் : பகுதி - 1


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜிகர்தண்டா




.....அம்ரிதா கல்லூரி... கோவையிலிருந்து 20 கீ.மீ...தூரத்தில்....

[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]

டிஷும்... டிஷும்ம்..... வகுப்பறையை வாசல் வழியாக வெளியே வந்து விழுந்தான். இப்போதே தெரிந்திருக்கும் இவன்தான் நம்ம ஹீரோ அப்படினு. தொப்பென்று விழுந்தவன்... திடீரென கண்களை திறக்கிறான்...

ஹீரோ: சார்... இப்போ சாங்க்தான....
நான்: யோவ்... உன் மூஞ்சிக்கு பாட்டு வேறயா...அப்படியே படுத்த மாதிரியே... மூஞ்சிய திருப்பீட்டு பேசு...

இனிமேல் வருவதை நம்ம காக்க காக்க சூர்யா மாதிரி படிக்கவும்.

"அந்த கடலை ஒழிப்பு வேல எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது, இப்போ என்னால என் சாக்ஸ் ஆபத்துல இருக்கு... எழுந்திரிக்கணும்... முடில.. என் மூக்குல நாத்தம் புடிச்ச சாக்ஸ் போட்டு போய்ட்டான்.. மூளையே கொழம்பீடுச்சு... நாத்தம்.. செம நாத்தம்... என் சாக்ஸ், அத நான் காப்பத்தணும்..எழுந்திரி... எழுந்திரி..."

[லோ...சீ....மீ...ஓஒ....வூஊ...]

'என் பேரு அன்புச்செல்வன்... அழுக்கு சாக்ஸ் அன்புச்செல்வன்..கடலை ஒழிப்பு சங்க உறுப்பினர்...பேருக்கு முன்னாடி இருக்கே அதுதான் என் தவம்... கடலை போடறவன கண்டாலே எனக்கு பிடிக்காது.. எங்க டீம்ல நாலு பேரு.. சாக்கடை ஸ்ரீகாந்த், இஞ்சி இடுப்பழகன் இளமாறன், ஆக்சிஜென் அருள். எங்கள கடலை ஒழிப்பு சங்கத்துல போட்டபோதுதான், வாஸ் பேசின் வாசுதேவன் வந்தாரு. பாம்பே ஐ. ஐ. டி ல கடலைய ஒழிச்சவர்... முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்டு மயக்கம் போட வெச்சவரு... ஹி இஸ் கொன்ன லீட் அஸ்'

எங்க மீட்டிங் போது நான் சொன்னேன்...
'சார்... நம்ம காலேஜ்-ல இருக்கற மிகப்பெரிய கடலை பசங்க லிஸ்ட் இது. வெறும் சட்டிலையே சும்மா கருப்பு புகை வர அளவுக்கு கடலை வறுப்பாங்க. கடலை குமார் - இவன் எப்பவுமே பொண்ணுங்க கூடதான் இருப்பான். மைதா மனோகர் - இவர் கொழு கொழுன்னு இருக்கறதால பொண்ணுங்களுக்கு பிடிக்கும். செல்போன் சிவகுமார் - இவன் செல்போன்-ல மரண கடலை போடுவான். இவங்க எல்லாம் வரப்போற அன்னுவல் டே-ல மரண கடலை போடபோறதா தகவல் வந்துருக்கு. நாலு மாசம் துவைக்கத சாக்சோட வேட்டைக்கு நாங்க தயார்'

அப்போதான் வாசுதேவன் சொன்னார். 'நான் முப்பது பேரு மூஞ்சில சாக்ஸ் போட்ருக்கேன். அதுல ஒருத்தன் மட்டும் கடலை போடல, சப்ஜெக்ட் டிஸ்கஸ் பண்ணினோம் அப்படினு என் மேல கம்ப்ளைன்ட் குடுத்தான்... எல்லாரும் அத பத்தி மட்டும்தான் பேசினாங்க... சோ நீங்க ஜாக்கிரதையா சாக்ஸ் போடணும்'

நாங்க நாலு பேரு.. எங்கள அன்டச்சபில்ல்ஸ் அப்படினு சொல்லுவாங்க... அப்படி நாறும் எங்க சாக்ஸ்...

லேப்-ல மைதா மனோகர் இருக்கறத எங்களுக்கு தகவல் வந்தது... சுத்திப் போய் எல்லாரும் அவன் மூஞ்சில சாக்ஸ் போட்டு அவன மயக்கம் போட வெச்சோம். இதுதான் எங்களுக்கு பெரிய வெற்றி...இதே மாதிரியே பிளான் பண்ணி, நாங்க கடலை குமார போட்டு தள்ளினோம், அவன சங்கத்துக்கு முன்னாடி நிறுத்தலாம்னு எல்லாரும் சொன்னாங்க, நான்தான் அதெல்லாம் வேஸ்ட் அப்படினு தூரத்துல இருந்தே சாக்ஸ் தூக்கி போட்டு மயக்கம் போட வெச்சேன். என்னதான் என்னோட ஒரு சாக்ஸ் போனாலும், நம்ம லட்சியத்த அடைஞ்சோம் இல்ல அப்படினு அவங்ககிட சொல்லி பெருமைப்பட்டேன். அவங்களுக்கும் அதுல ஒரு சந்தோஷம். இந்த டைம்-ல தான் அவள பாத்தேன், ஆயா... டாய்லெட் கழுவுற ஆயா..

ஷி இஸ் எ பேண்டசி..ல..ல லா....
ஒரு ஊரில் அழுக்கே உருவாய் ஒருத்தி இருந்தாலே...
அவள் அருகே போனால் நாத்தத்தில் துரத்தி அடிப்பாளே...

அவகிட்ட எனக்கு பிடிச்சதே அவ போட்டுட்டு வர அந்த அழுக்கு சாக்ஸ்தான், எப்போ துவைச்சாளோ தெரில... ஆனா எங்க சாக்ஸவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா நாத்தம்தான்.

இந்த டைம்ல, செல்போன் சிவகுமார் வீக்-எண்டு ஊருக்கு போறபோது, கவிதா கூட போறத எங்களுக்கு தகவல் வந்தது. உடனே நாங்க நாலு பேரும், எங்ககிட்ட இருக்கற அழுக்கு சாக்ஸ் எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் போனோம். அங்க அவன் எங்கள பாத்ததும் உஷார் ஆயிட்டான். ஆனா நாங்க அவன தொரத்தி புடிச்சோம்.

ஸ்ரீகாந்த்: 'அன்பு இவன போட்றனும் அன்பு'
நான்: 'டேய் சிவகுமார், தப்பிக்கலாம்னா பாத்தா... டேய் அருள்.. ஒன்னு போடறா...'
இளமாறன்: ஐயோ... சாக்ஸ் போட சொன்னா நீ என்னத்தடா போட்ட... நாத்தம் தாங்கல.. சாக்ஸ் போடறா....
சிவகுமார்: ஹா...ஹையோ... இதுக்கு அந்த சாக்சே பரவா இல்லையே... ஹாஆஅ.... [மயக்கம் போடுகிறான்]

இப்படி சில சமயம் அருள் சாக்ஸ்க்கு வேல இல்லாம பண்ணுவான், அதுக்குதான் அவன் பேரு ஆக்சிஜன் அருள்.

இதெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது.... டைரக்டர் கட் சொல்லி... அடுத்த பதிவுல படிங்க அப்படினு சொன்னா எப்படி இருக்கும் அப்படினு யோசிச்சாரு....


Wednesday, March 10, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 2


என்னடா கொசுவத்தி போட்டு போனவன் ஆளக் காணோம் என்று எண்ணி, சந்தோஷப் பட்ட அனைவருக்கும் இன்று கனவில் என் கொசுவத்தியே வரக்கடவது என்று தண்ணீர் தெளித்து சாபம் விடுகிறேன்......

நான்: மே ஐ கம் இன்..
டாக்டர்: நீயா....
நான்: வொய்... நீங்கதான வர சொன்னீங்க...
டாக்டர்: சாரி... சரி வா.. நாம அந்த ரூம் போகலாம்...

உள்ளே சென்ற பின்..

டாக்டர்: ஸ்டார்ட் பண்ணிதொல..

எட்டாவது மற்றும் ஒன்பதாவதில் எங்கள் பள்ளி ஆசிரியை, விசுவின் அரட்டை அரங்கம் புகழ், வத்சலா மிஸ், அன்னுவல் டே-க்கு டிராமா போடுவாங்க. எல்லா வருஷமும் நமக்கு ஒரு ரோல் இருக்கும். நானும் இந்த வருஷம் நமக்கு ஒரு டூயட் இருக்காதா அப்படின்னு ஏங்கி போவேன். அவங்க எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் பெண்கள் முன்னேற்ற டிராமாவ போட்டு அதுல படிக்காத முட்டாப்பயலா நான்...அறிவாளியா வீட்டு வேல செய்யற தங்கச்சி... எப்படிதான் கண்டிபிடிக்கராங்களோ....நாம வந்தாலே முட்டாப்பய வேஷம்தான்... இல்லாட்டி கோர்ட் சீன்ல தோத்து போற ஒரு லாயர்... என்ன கொடும.. இந்த டென்ஷன் தீர நான் பத்தாவது பள்ளிக்கூடம் மாறிட்டேன். எங்க அப்பா வேல பாக்கற ஸ்கூல்... பாய்ஸ் ஸ்கூல். பத்தாவதுல எந்த விஷயமும் மாட்டல... நானும் எந்த விஷயத்துலயும்மாட்டல...

பதினொன்னாவது... வந்த உடனே.. டியுஷன்..."நதிர்தனா... திரனனா..நா...." அப்படினு இப்போ பேமஸ் ஆனா மியுசிக், அப்போவே எனக்குள்ள ஓடிச்சு. முன்னாடி ரோல, பொண்ணுங்க, பின்னாடி ரோல பசங்க... எங்கத்த படிக்கறது... காலைல தலைக்கு குளிச்சுட்டு வர அவங்க தலைல இருந்து சொட்டற தண்ணில அப்படி நாம மனசு குளுந்து போய்டும். ஆனா ஒண்ணுங்க... பசங்க எல்லாம் மாங்கு மாங்குன்னு சைக்கிள்-ல வருவோம்.. அவங்க சும்மா டர்ன்னு வண்டில வந்துடு போயிட்டே இருப்பாங்க.. நாங்களும் வேகமா தொரத்துவோம், ஆனா பவுண்டரி போற பந்த தொரத்தர இந்திய கிரிக்கெட் வீரர் மாதிரி சொங்கி போய்டுவோம். இப்படியா சைக்கிள்-ல சாகசம் காட்றது... அப்படி இப்படினு போயிடு இருந்தது வாழ்க்கை... ஆனா, ஒரு இடத்துல மட்டும் நான் சண்டித்தனமே பண்ண மாட்டேன். கணக்கு டியுஷன் ல... ஏன்ன எங்க அப்பதான் எனக்கு கணக்கு டியுஷன் எடுத்தார்... பள்ளிகூடத்தில்கூட அவர்தான் எனக்கு கணக்கு. அதனால், கணக்கு டியூஷனில் யாரையும் கணக்கு பண்ண முடியவில்லை. சில பொண்ணுங்கள அவங்க அப்பா கூட்டிட்டு போக வருவாரு... அப்போ அவங்க கீழ வெயிட் பண்ணினா.. நாங்க அப்படியே சைக்கிள் பக்கதுல நின்னு பேசிட்டே இருப்போம்.. அதும் ஸ்டடீஸ் பத்திதான்... சில நேரங்கள்ல, மழை விழற ஸ்பீட் வெச்சு, க்ராவிடி கால்குலேட் பண்ற லெவெலுக்குபோவோம்.

இப்படியா பதினொன்னு, பன்னிரண்டு எல்லாம் நல்லபடியா போக. முதல் நாள் கவுன்சிலிங். எனக்கு முன்னால் நின்ற பெண், 'விச் காலேஜ் யு ஹவ் ஆப்டேட் ஃபார்' என்றாள்.. எனக்கு அவளது வேக இங்கிலீஷ் புரியவில்லை. 'மீ.. மீ... அம்ரிதா கோயம்புத்தூர்' என்று கூறி ஒரு புன்னகை பூத்தேன். அப்படியே அவள் கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்டேன்.. நம்ம இங்கிலீஷ் சும்மாவா... 'வெங்கடேஸ்வரா' என்றாள்... 'குட் காலேஜ்' என்று சர்டிபிகேட் குடுத்தேன்.... புன்னகைத்தாள்... அந்த புன்னகை என்னும் மின்னலில் ஒடிந்த இதயம், இன்றும் விரிசல்களுடனே இருக்கிறது.

முதல் வருடம், மின்னலே பார்த்துவிட்டு கல்லூரிக்குள் சென்றேன். அங்கு பெண்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றேன். அதிகம் பெண்களுடன் பேசும் பசங்க... அப்பாஸ் போலவும்... நான் மாதவன் போலவும் எனக்கு நெனப்பு... (நெனப்பு - கவனிக்க) என்னதான் நாம அடக்கி வெச்சாலும். சுஜாதா சொல்ற மாதிரி அந்த ஹைட்ரோஜென், ஆக்சிஜென் மாதிரி இருக்கற ஹார்மோன் எக்ஸ்ட்ரா டைம் வேல பாக்க ஆரமிசிடுச்சு. வந்த முதல் நாளே நானும் என் நண்பனும், என் வகுப்பில் இருந்த பெண்களுக்கு மார்க் போட ஆரமித்தோம்.. 'மச்சி.. ஒரு நாப்பது..' என்று அவன் சொல்ல... 'மச்சி.. நீ வாத்தியார போனா எல்லாரும் பாஸ் ஆயிடுவாங்க' என்று நாங்கள் கலாய்க்க. இப்படியான வறண்டு போன பாலைவனத்தில்தான் நான் நான்கு வருடம் படித்தேன்.

லேப்பில் சில அழகான பெண்கள் அருகே இருக்கும் கணினியில் அமர்ந்தால் போதும். நாங்கள் பேசும் பாஷையே வேறு மாதிரி ஆகிவிடும். 'மச்சி.. இந்த ப்ரோக்ராம் python -ல பண்ணலாம்' என்று ஏதோ தெரிந்த மாதிரி அடித்து விடுவோம். வகுப்பில் ப்ரொபசர் எதாவது கேள்வி கேட்டல் எழுந்து நின்றுகொண்டே இருப்போம். வெளியே போக சொன்னாலும். கெத்து காமித்து வெளியே போவோம்.
ஆக எனது டீன் ஏஜ் வாழ்க்கை கெத்திலே தொடங்கி கெத்திலே முடிந்தது......

டாக்டர்: போதும்.... நிறுத்து...
நான்: சார்.. எனக்கு என்ன பண்றதுன்னு நீங்கதான் சொல்லணும்...
டாக்டர்: [இப்போ நான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படணும்] தம்பி... நீ உன் மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு அழுத்தி வெச்சுருக்க.. அத நீ ஏன் புஸ்தகமா போட கூடாது...
நான்: என்ன சார் சொல்றீங்க...
டாக்டர்: இல்ல.. இத நீ ஒரு சுயசரிதம எழுதினா... வருங்கால சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுபாங்க இல்ல...
நான்: அப்படியா சொல்றீங்க...

இப்படியாக எனது கொசுவத்தி சுற்றியது... டீன் ஏஜ் முடிந்தது... இதன் பிறகு நடந்த விஷயங்களை... எனது சரித்தர புத்தகம் வெளிவரும்போது படித்து தெரிந்துகொள்ளுங்கள். முதல் பதிவு பார்த்தவுடனே... பெரிய பெரிய பதிப்பகத்தில் இருந்து ஏகப்பட்ட கால்கள், நீங்க உங்க சுயசரிதம் எழுதுங்க என்று. அதனால் 'சத்யாவிற்கு சோதனை' என்ற எனது சுயசரிதம் சீக்கிரம் வெளிவரும் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

கொஞ்சம் லேட்தான் என்றாலும், கொசிவத்தியை சுத்த, கார்கில் ஜெய் அவர்களை அழைக்கிறேன்.


Tuesday, February 16, 2010

ஜொள்ளாத மனமும் ஜொள்ளும் - என் டீன் கதை - 1

சங்கிலிப் பதிவிற்கு என்னை அழைத்த அனன்யா அக்காவிற்கு முதலில் நன்றி....



சரி மேட்டேர்க்கு வருவோம்.. ஒப்பனிங்க்ல ஒரு ஆஸ்பத்ரிய காமிக்கறோம்....
நர்ஸ்: நெக்ஸ்ட்....
நான்: யா இட்ஸ் மீ...
நர்ஸ்: யூ கேன் கோ இன்...
நான்: நோ வே!!!
நர்ஸ்: வொய்!!!
நான்: யூ ஆர் ஸ்டான்டிங் ஆன் த வே...
நர்ஸ்: ஓ.. சாரி...
நான்: சரி...

டாக்டர்: கம் இன்...
நான்: சார், நாம தமிழ்ல பேசுவோமே...
டாக்டர்: வொய் நாட், சொல்லுங்க என்ன பிரச்சனை?
நான்: நைட் தூங்கும் போது ஒரே ஃபிகரா வருது டாக்டர்
டாக்டர்: என்ன மாதிரி ஃபிகர்
நான்: சின்ன வயசுல பாத்த பிகர் மாதிரி இருக்கு
டாக்டர்: நீங்க சின்ன வயசுல மாத்ஸ்-ல ரொம்ப நல்ல மார்க் வாங்கிருபீங்க போல இருக்கே... வாங்க நாம கண்டுபிடிப்போம். ஹிப்னடைஸ் பண்ணி பாப்போம்.
நான்: சார்.. நான் சொல்றது அந்த ஃபிகர் இல்ல....
டாக்டர்: ஐ நோ எவரிதிங்... யூ கம்... திஸ் இஸ் எ சிம்பிள் ப்ரோப்ளம்...

இப்போ நாம ஹிப்னடைஸ் ரூமிற்கு போகிறோம்.
டாக்டர்: நீங்க இப்போ மெதுவா தூங்க போறீங்க. அப்புறம் கதை சொல்லுவீங்க.
நான்: சார்... நான் தூங்க... நீங்கதான் கதை சொல்லணும்.. நான் எதுக்கு சொல்லணும்...
டாக்டர்: யோவ்.. பேசாம படுய்யா...
நான்: [டொயின்]...

டாக்டர்: இப்போ நீங்க உங்க பதிமூனாவது வயசுல இருந்து பத்தொன்பதாவது வயசு வரைக்கும் என்ன நடந்ததுனு சொலுங்க....
நான்:
நான் இப்போ எட்டாவது படிக்கறேன், கோ எஜுகேஷன். எங்க பாத்தாலும் சும்மா பொண்ணுங்க லட்டு மாதிரி இருக்கு. 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போன அங்க ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடித்தான்' மாதிரி, அந்த ஸ்கூல்-ல ஒரு ஒரு கிளாஸ்-லயும் ஒரு பாய்ஸ் செக்ஷன், அதுல நான். பக்கத்து கிளாஸ் ல பொண்ணுங்க. மத்த பசங்க எல்லாம் பக்கத்து கிளாஸ்-க்கு டவுட் கேக்க அடிக்கடி போவாங்க. நாம என்ன டவுட் வந்தாலும் அந்த பக்கம் போக மாட்டோம், சுனா பானா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன். ஆனாலும் அந்த கவிதா, தீபா, தனலக்ஷ்மி, வித்யா அவங்களுக்கு மட்டும் நம்ம கெத்துல இருந்து கொஞ்சம் விதி விலக்கு. நான் சின்ன வயசுல இருந்தே ஒரு பெரிய தி. மு.க ஆதரவாளன். ஹிந்தி அப்படினாலே நமக்கு அலர்ஜி. எங்க அக்காக்கு ஹிந்தின்னா உசுரு. அத அமிர்கான் படம் பாக்கறதோட நிறுத்தாம, என்னவோ டெல்லி போற தூதர் மாதிரி பரிட்சையா எழுதி தள்ளிட்டா. அம்மாவும், அப்பாவும் ஹிந்தி படி ஹிந்தி படின்னு ஒரே டார்ச்சர். எனக்கு 18-ஆம் தேதி ஹிஸ்டரி ஹோம் வொர்க் இருக்கு, என்று நானும் நம்ம கவுண்டர் ரேஞ்சுக்கு முயற்சி பண்ணினேன். மூச்சு முட்ட முட்ட முயற்சி பண்ணியும் முடியாமல் அங்க போய் சேர்ந்தாச்சு. ஆ... என்ன.. இவளா... நம்ம தனலக்ஷ்மி... அவ முன்னாடி கெத்து காமிக்க... ஹிந்தி ஜி நமக்கு முன்னாடியே தெரிந்தவர் அதனால்... "ஜி...மே ஃபிர் ஆத்தா ஹூன்... அப் ஜாதா ஹூன்...ஜூனுன் சீரியல் கா டைம் ஹை" என்று குதிரையை ஓட்டிவிட்டு, அவளைப் பார்த்து செஞ்சுரி அடித்த சச்சின் போல புன்னகையை உதிர்த்தேன். அப்புறம் காப்பி அடித்து எப்படியோ பாஸ் செய்துவிட்டேன்.

எட்டாவது படிக்கையில் என் அக்கா பனிரெண்டாவது, எனவே அப்பாவிடம் டியுஷனுக்கு வரும் பெண்களிடம் நம் தவறாக பார்த்தல் விஷயம் நேராக நளினி காதுக்கு போய்டும்... அவளை ஏன் நளினி-ன்னு சொல்றேன்ன இப்போ வர சீரியல்ல எல்லாம் அவள்தானே வில்லி... எங்க அக்காவும் அப்படிதான்... ஆனால், நான் ஒன்பதாவது போனவுடன்... அப்பா எப்போடா சண்டே வெளியில் போவார் நாம டெஸ்ட்க்கு சுபெர்விஷன் போகலாம் என்று காத்துக் கொண்டிருப்பேன்... சுபெர்விஷன் பார்க்கும் போது அப்படியே தாத்தா கடையில் இருந்து சுட்டு வந்த இங்கிலீஷ் புத்தகத்தை கையில் வைத்து பொம்மை பார்த்துக் கொண்டிருப்பேன். கெத்துதான்... டக்கென்று நிமிர்ந்து பசங்களை நோட்டம் விடுவேன்...உசாரா இருக்கேனாம்... அப்படி பார்த்துவிட்டு பெண்களின் பக்கம் ஒரு நோட்டம்... அவர்கள் நாம் உசாரா இருக்கறத கவனிச்சாங்கள அப்படினு... அப்போ வாங்க ஆரமிச்ச பல்பு... ரொம்ப நாள் தொடர்ந்தது.

ஒன்பதாவதில் சண்டை போட்டு ஒரு ஹெர்குலஸ் MTB சைக்கிள் வாங்கியாகிவிட்டது. பின்ன அக்காவுக்கு BSA SLR வாங்கின சும்மா இருப்போமா... நம்ம மருவாதைக்கு இழுக்கு இல்ல.. எங்க ஸ்கூல்ல ஒரு கயிறு இருக்கும், பிரேயர் ஸ்டார்ட் பண்ண அப்புறம் யார் வந்தாலும் அந்த கயிறுக்கு பின்னால நிக்கணும். நாம ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய், சைக்கிள் கயிறுக்கு பின்னாடி நிப்பாட்டிட்டு அங்கே நின்னுட்டு ஆட்டோ-ல வர போற பொண்ணுங்கள பாக்கற சுகம் இருக்கே... அட அட அட... யப்பா... டைம் மெஷின் சீக்கரம் கண்டு புடிங்கப்பா...உலகத்துல முதல்ல ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு போனான்.. கார்த்திக் 1998 கு போனான்னு சரித்திரம் சொல்லட்டும். அப்போ பிரேயர் ஆரம்பிச்சுடும், லேட்டா வர மாப்பிளங்க அப்போதான் வருவாங்க, டேய் மச்சான் உனக்காகத்தான் வெயிட் பண்ணினேன் என்று ஒரு பீலாவை அவிழ்த்துவிட்டு பிரேயர் முடிந்ததும் கிளாஸ்-க்கு போவோம். அப்படியே கெத்தா உள்ள போறது, லேட்னாலேகெத்துதானே . அப்போதுதான் அந்த மேட்டர் நடந்தது. எனக்கு ஒரு பொண்ணு லெட்டர் குடுத்தது. அட உண்மையாதாங்க... பண்பாடு கருதி அந்த தோழியின் பெயரை நான் சொல்லவில்லை. அதும் கவிதைன்ன பாருங்களேன்...

'தரிசு நிலமாக இருந்த என்னை,
விளை நிலமாகிவிட்டு-
வேலி போட மறுப்பது ஏன்?'

படிச்சு பார்த்துட்டு மனதிற்குள், 'டேய் நீ இவளோ நாள் பட்ட பாடு வீண் போகலடா...' என்று என்னையே பாராட்டிக் கொண்டு அவளிடம்...'கவித நல்லாயிருக்கு, எதாவது போட்டியா?' என்றேன். 'போடா வெண்ணை' என்று அவள் சென்று விட்டாள். ம்ம்ம்.. இதெல்லாம் சரித்திரம்.

என்னதான் மனதிற்குள் நான் ஒரு பெரிய மன்மதன் என்று நினைத்தாலும், வெளியில் நான் ஒரு பெரிய பழம்தான். சாதா பழம் இல்லை பலாப்பழம். நெஞ்சு வரை பேன்ட் போட்டு இன் பண்ணிக்கொண்டு, பட்டையை இட்டுக்கொண்டு சாயிந்தரம் ஆனால் வேத கிளாஸ் போவதும். வர இறுதியில் கீ-போர்டு கிளாஸ் போவதுமாய் எனது நேரம் கழியும். அப்போதெல்லாம் கிளாஸ் போகும்போது, எங்க தெருவில் பசங்க விளையாடுவாங்க. என்னடா நம்ம வாழ்க்கை மட்டும் இவ்வளவு கொடுமையா போச்சே அப்படினு பீல் பண்ணுவேன்.

டாக்டர்: தம்பி... இந்த எபிசொட்-க்கு இந்த மொக்க போதும்... அடுத்த வாரம் இன்னொரு செஷனுக்கு வா... இப்போ நீ கெளம்பு...
நான்: சார்.. நான்
தூங்கும்போது என்ன சொன்னேன்...
டாக்டர்: டேய்.. நீ இன்னும் கெளம்பலையா....
நான்: [எஸ்கேப்]......


Friday, January 29, 2010

'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்

இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக.



இன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே? சச்சின் எங்கே? கங்குலி எங்கே? மணிரத்தினம் எங்கே? வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ? அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது? வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.





இதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...




இதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு?


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online