இதுவரையில் காலேஜ்-இலும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி. நமக்கு தெரிஞ்ச தமிழ் பேசும் பசங்களோட இருந்துட்டு. இப்போ சுத்தி பாக்கற பக்கமெல்லாம் வா ஹை போ ஹை தான். தமிழ் நாட்டுல இருந்து நாம வரதுக்கு முன்னாடியே, வட நாடுலிருந்து நானூறு பேரு வந்துட்டாங்க. 'க்யா கொடுமை ஹை சரவணன் ஜி'
நம்ம ரூம்-ல ரெண்டு பேரு, பீட்டர் மணியும், அல்போன்ஸ் ராஜும். பீட்டர் மணி பெங்களூர், சென்னைல கொஞ்ச நாள் வேல பாத்தானாம். தமிழ் பேசறேன்னு சொல்லுவான், பேசினா லக்கி மேன் கௌண்ட மணி பாம் மென்னு துப்பர மாதிரி பேசுவான். ஆனா பய புள்ள தப்பாதான் பேசறேன்னு ஒத்துப்பான்.
அல்போன்ஸ் ராஜ், மும்பைல இருந்து வந்தவன். தமிழ் பேசணும்னு அவனுக்கு ஆசைன்னு சொன்னான். 'டேய், கார்த்தி பின்னிட்ட ஒருத்தன் நீ பேசறத பாத்துட்டு தமிழ் கத்துக்கணும்னு ஆச படறான்' என்று நான் எனக்கே தோள் தட்டிக்கொள்ளும் போதே, 'Teach me few bad words man' என்றான். தட்டிய கைகள் அப்படியே நின்றன. அது என மாயமோ எனவோ தெரில, வட நாட்டு பசங்க தமிழ் கத்துக்கணும்னா, முதல்ல கெட்ட வார்த்தைதான் கேக்கரனுங்க. சொல்லி தந்தா முதல நம்மலதான் திட்டுவானுங்க. எத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள், மாணவ பருவத்துல இதெல்லாம் சகஜமப்பா.
நம்ம ரூம்லதான் தமிழ் பேச முடியறதில்ல, நாம நட்பின் சிகரங்களுக்கவது போன் பண்ணலாம்னா. பெரிய அறிஞர் அண்ணா ரேஞ்சுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருப்பாங்க. 'டேய் மீடிங்க்ல இருக்கேன் அப்பறம் கூப்பட்றேன்னு' வாய்குள்ள போன விட்டு பேசுவாங்க, இல்லாட்டி அவன் வாய்ஸ் மெசேஜ் கூட பேச வேண்டியதா இருக்கும்.
இதுல வீட்டுக்கு கூப்படலாம்னு என் போன்-ல இருந்து try பண்ணேன். வெள்ளைகாரி ஒருத்தி 'this facility is not available' அப்படினு சொல்றா. ஏதோ english தெரிஞ்சதால, (என்ன சிரிக்கற மாதிரி தெரியுது?) பொழச்சிட்டு இருக்கேன்.
இயக்குனர் சீமான், நீங்க சொன்னதுல தப்பே இல்ல, தமிழன் எங்க போனாலும் அடி வாங்குறான்.
PS: நாளைக்கு பரீட்சை இனிக்கு ப்ளாக் எழுதறேன்னா, எவளோ அடி பட்டிருபெனு நெனச்சு பாருங்க.
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
0 Comments:
Post a Comment