Sunday, November 22, 2009

முதல் என்றாலே சந்தோஷம்தான்

முதல் என்ற வார்த்தை பல தருணங்களில் சந்தோஷத்தையே குறிக்கிறது. முதல் நட்பு, முதல் காதல், முதல் ஸ்பரிசம், முதல் முத்தம், முதல் கவிதை, முதல் ரேங்க், முதல்...

இப்படி முதல் எப்போதும் முதல்தான். என்னதான் பலர் பல சாதனை செய்தாலும், நாம் அதை முதல் முறை செய்யும் போது அது ஒரு தனி இன்பம்தான். அந்த வகையில் நேற்று எனது வலைப்பூவில் நடந்த ஒரு நிகழ்வு எனக்கு முதல். பல ஜாம்பவான்களுக்கு நடுவே, என்ன நம்மால் முடியுமா என்று தொடங்கி, இன்று இந்த அளவில் வந்து நிற்கிறேன்.பிளாக்கர் என்ற ஒரு ஊடகம் இல்லாமல் என்னைப் போன்ற debut players இவ்வளவு சீக்கிரம் இந்த நிலைமையை அடைய முடியுமா என்றால் சந்தேகம்தான்.இன்று எனது நட்பு வட்டம் பதிவர்கள் என்னும் புதியவர்களால் விரிவடைந்து வருகிறது. அவர்களை நான் பார்த்தது இல்லை, பலமுறை gtalk-இல் சேட்டியது மட்டும்தான்.

அடுத்து, தமிழ்மணம் மற்றும் தமிலீஷ் போன்ற பதிவர் catalog-களில் எனது பதிவை இணைத்த பிறகுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, யார் எவர் என்று தெரியாமல் உலகின் பல மூலைகளில் இருந்து எனது பதிவை படிக்க வாசகர்கள் வந்தனர். ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல, உகாண்டா, பெரு என நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் படித்தனர். ரசித்தனரா என்பது தெரியவில்லை, ஆனால் படித்தனர்.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் ஆரமித்து, மக்கள் பின்னூட்டம் இடுவார்களா என்று தினமும் பார்த்து தோற்று, பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுதினால் என்ன என்று நான் தொடங்கினேன். என்னை பலசமயம் ஊக்குவிப்பது, எனது கல்லூரி மற்றும் முன்னாள் கம்பெனி நண்பர்கள்தான்.அவர்களுக்கு எனது அடுத்த நன்றிகள். Controversial விஷயங்களை பற்றி எழுதினால் மக்கள் வருவார்கள் என்ற எனது நம்பிக்கை பலசமயம் பொய்த்து போனதுண்டு. மொக்கை போட்டால் கல்லா கட்டிவிடும் என்ற எனது கனவு நீர்த்து போனது. உருப்படியா எழுதினால் மட்டுமே தேற முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்ததும் எனது நண்பன். அவனுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ஒரு பதிவை போட்டுவிட்டு, அடுத்த நாள் காலை மறுபடியும் வந்து எவராவது புதிதாக follow செய்கிறார்களா என்று பார்த்து ஏமாந்ததுண்டு. பின்னர், இப்போதான தொடங்கியிருக்கோம் மெதுவாத்தான் வரும் என்று மனதை தேற்றிகொள்ளுவேன். சதம் அடிக்க கூட ஒரு ரன்னில் இருந்துதானே தொடங்க வேண்டும். தொடங்கியிருக்கிறேன், தொடர்ந்து கவனிப்போம்.

அது சரி, இந்த பதிவு எதற்கு, எது எனக்கு முதல் என்று யோசிப்பது தெரிகிறது. நேற்று, பெரு நாட்டில் இருந்து வந்த வாசகரால், அண்டார்டிக்கா தவிர மீதம் உள்ள ஆறு கண்டத்தில் இருந்தும் நம் ஜிகர்தண்டாவிற்கு வாசகர்கள் வந்துள்ளனர். உகாண்டாவில் இருந்து வந்தவர், ஆப்பிரிக்காவிற்கு அட்டன்டன்ஸ் போட்டார். மற்ற கண்டங்களிலிருந்து பல வாசகர்கள் வந்து சென்றுள்ளனர். இதெல்லாம் களத்தில் இருக்கும் பல பதிவர்களுக்கு ஜுஜுபி விஷயம் என்றாலும் நமக்கு முதல் இல்லையா...முதல் என்றாலே சந்தோஷம்தான்.


6 Comments:

Sivaprakash Panneerselvam said...

Karthi,

Innum Nirambha ezhthungal. Vazhthukkal!!

Regards,
Sivaprakash

வானம்பாடிகள் said...

நல்லா எழுதுறீங்க தம்பி. தொடர்கிறேன். வாழ்த்துகள்.

Nandu said...

Congratz buddy...Keep going...

பா.ராஜாராம் said...

கேபிள் சங்கர் தளத்தில் இருந்த உங்கள் பின்னூட்டம் இங்கு வர வைத்தது.ஒரு சோறு போதுமே..வெந்ததா என பார்க்க!very good கார்த்திக்!

அன்புடன் அருணா said...

உங்க வலைப்பூவில் என் முதல் பின்னூட்டம்! அப்படீன்னா ஸ்பெஷல்தானே!நல்லாருக்கு!

Karthik Viswanathan said...

நன்றி அருணா...
உங்கள் வருகையும், பின்னூட்டமும்... நீங்கள் என்னை தொடர்வதும்...அட இதனை பேர் பாக்குறாங்க ஒழுங்கா எழுதணும்னு ஒரு ஊக்கம் கூடிய பயத்தை கொடுக்குது.
முயற்சி செய்கிறேன்... மிக்க நன்றி..

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online