வாங்க.. என்னடா இந்த க்யூல நின்னுட்டு இருக்கும் போது பொழுது போகதேன்னு நெனச்சேன் நீங்க வந்துடீங்க. நல்லது.
நான் பொறந்து ஒரு இருபத்தி ஆறு வருஷம் ஆகப் போகுது. பெரிய மாற்றங்கள பாத்த ஒரு குடுப்பினை எங்க generation-க்கு உண்டு. எல்லாத்துலயும் மாற்றம் ஒட்டு வீடுகள் இருந்த இடத்தில் பெரிய கட்டிடங்கள், TV பொட்டிகள் இன்று சப்பயாகி சுவற்றுடன் ஒட்டிகொள்கின்றன, தொலைபேசி அலைபேசியாகி இன்று அடுத்த ரூமில் இருப்பவர்கள் கூட இதில் பேசிக்கொள்ளும் கிட்டபேசி நிலைக்கு வந்து விட்டது. தெருவோர பரோட்டா கடைகள் போல இன்று அங்கிங்கெனாதபடி எல்லாப் பக்கங்களிலும் முளைத்து இருக்கும் பிட்சா கடைகள். அப்போதெல்லாம், சூப்பர் மார்கெட் செல்வது என்றாலே வீட்டில் குஷி, அத்தனை அயிட்டங்களும் ஒரே இடத்தில், இப்போது மால்கள் சூப்பர் மார்கெட்டை தூக்கி சாப்பிட்டு விட்டன. அரசாங்க வேலை என்று திரிந்து கொண்டிருந்த பலரும் , அடடா நாம இந்த காலத்துல பொறக்காம போய்ட்டோமே, இல்லாட்டி.. நாமளும் இந்த அமெரிக்க ஜப்பான்னு போய்ட்டு வந்துருக்கலாம்னு நினைக்கும் அளவுக்கு IT வளர்ந்து இருக்கிறது.
ஒரு பையன் 8000 ரூபா சம்பாதிச்சு, அம்மா-அப்பா கூட இருந்து, நல்ல பழக்கங்கள் இருந்தால் பொண்ணை கட்டிகொடுக்கும் பெற்றோர்கள் அப்போது இருந்தனர். இப்போது பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்னும் பழமொழிக்கு ஏற்ப, expected காலத்தில் MBA or MS with min 1 lakh என்று போடும் அளவிற்கு மாறி இருக்கிறோம். இத்தனையிலும் முன்னேறிய நாம், உடல் நிலையில் பெரிதும் பின்தங்கியே உள்ளோம். எங்கு திரும்பினாலும் வீசிங், ஷுகர், இரத்த அழுத்தம், இதய நோய், மன நோய் என பல வகைகளிலும் நோயாளிகளை உருவாக்கி வருகிறோம்.
அந்த காலத்தில், பானையில் சோறு பொங்குவார்கள், அதில் மேலிருக்கும் தண்ணியை வடிகட்டி விடுவார்கள். அரிசியில் இருக்கும் சர்க்கரை வடிந்து விடும். இந்த குக்கர் வந்தாலும் வந்தது, அனைத்து சர்க்கரையும் சாப்பாட்டில் தங்கி விடுவதால், அது உடலுக்குளும் சென்று அதிகப் படியான சர்க்கரையை சேர்த்து விடுகிறது. இதுதான் சுகருக்கு காரணம் என்று டாக்டர் சொல்லி கேட்டேன்.
எண்ணெயில் முங்கி முத்தெடுத்த முறுக்கு, சீடை போன்ற பதார்த்தங்கள் இன்று மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்தக் கால மக்கள் இதெல்லாம் தின்று அதற்கு தகுந்தார்ப்போல் நடந்தனர், உழைத்தனர். இங்கு உக்காந்த இடத்தில் வேலை செய்துவிட்டு வீடு வந்ததும், சீடை முறுக்கு என்று வாயில் திணித்தால் அது அதிகம் காலியாக உள்ள இதய அறைகளை நிரப்புகின்றன. இல்லாவிட்டால் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் பெரிய சொத்தாக வயிற்றில் சேர்ந்து நம்மை obese பார்டியாக்கி அபேஸ் பண்ணிவிடும்.
இரவில் ரோகியை போல் சாப்பட வேண்டும் என்பார்கள். அதாவது கம்மியாய் சாப்பிடுவது. ஏனென்றால், இரவில் தூங்கும்போது ஜீரண சக்தி கம்மியை இருக்கும். நாம் வீட்டுக்கு பொய் அம்மாவிடம் சொல்லி நல்ல ஒருகட்டு கட்டிவிட்டு, தொப் என்று சோபாவில் போய் விழுந்து TV ரிமோட்டை கையில் எடுத்தால், எங்கிருந்து வருமோ தெரியாது அப்படி ஒரு தூக்கம். அப்படியே தூங்கிவிடுவது. இதுவும் தொப்பைக்கு காரணம்.
வெண்ணையில் குளித்து வரும் பிட்சா அது ஒரே வாயில் ஒரு பீசை உள்ளே தள்ளி, அதில் உள்ள அத்தனை Cholesterol, Fat அத்தனையும் ஸ்வாகா செய்வது.கேட்டால் என்னைக்காவது ஒரு நாள் தான்னு சொல்றது, இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருந்து பாருங்கள் என்று சொல்லுவது. இது மட்டும் அல்ல, கோக் என்ற ஒன்று. அதன் பட்டியிலே அசிட் என்று போட்டுள்ளான், அதுதான் இந்த வெளிநாட்டினருக்கு தண்ணீர். கேட்டால், தண்ணீரை விட இது காசு கம்மியாம்.
இதெல்லாம் எங்கே போய் சொல்லுவது.
அதுக்கும் மேல் நமக்கு பிடித்த வேலையே செய்யாமல், பணத்துக்காக அதிக்கபடியான டென்ஷன் எல்லாரது வாழ்விலும் மிகுந்துவிட்டது. என்ன பண்ணுவது, விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறுதே. அதுவும் நாம் மேற்சொன்ன விஷயங்களும் ஒரு மனிதனை அதிகப்படியான இதய நோய்க்கு அழைத்து செல்லுவதாக கேள்வி.
ஏதோ ஒரு வலையில் படித்த ஞாபகம், வெளிநாட்டினர்தான் எண்ணெய் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுகிறார்களாம். ஆனால், நம்மக்கள்தான் அதிகம் இதய நோயில் பாதிக்க பட்டுள்ளனர். அவர்கள் உபயோகிப்பது ஆலிவ் எண்ணெய், நாம் அதை முகத்திற்கு பயன்படுத்துவதோடு சரி.
'ஆர்டர் ப்ளீஸ்' அந்த கவுன்ட்டர் பெண்மணி அழைத்தாள்.
'இருங்க போய்ட்டு வரேன்'
'One medium cheese pizza with extra jalapeno toppings with large coke'...திரும்பி வந்தேன்.
ம்ம்ம்ம்.. நாம எத பத்தி பேசிட்டு இருந்தோம்,ஹ்ஹஹ்ன்ன்ன் ... மாற்றத்த பத்தி இல்ல...ஆனா, சில சமயங்கள்ல நாம மாறித்தான் ஆகவேண்டி இருக்கு...
என்ன முறைக்குறீங்க வெளிநாட்டுல இருந்து பாருங்க தெரியும் கஷ்டம்.
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
6 Comments:
கதையோட்டம் மிக அருமை.வாழ்த்துக்கள்
இண்ட்ரஸ்டிங்
கேபிள் சார், நந்து.. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
amazing writing da machan... one of the best that you have written so far.... keep it coming :-)
//TV பொட்டிகள் இன்று சப்பயாகி சுவற்றுடன் ஒட்டிகொள்கின்றன, தொலைபேசி அலைபேசியாகி இன்று அடுத்த ரூமில் இருப்பவர்கள் கூட இதில் பேசிக்கொள்ளும் கிட்டபேசி நிலைக்கு வந்து விட்டது//
என்னுடய பால்யத்தில், கிராமப் பொதுத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலியும்
ஒளியும் பார்க்க வாரம் ஒருமுறை அந்த தொலைக்காட்சிப் பெட்டி அறையைத் திறப்பார்கள். அந்த பொட்டியின் அறைக்கு ஒரு திண்டுக்கல் பூட்டும் உண்டு. அலுவலர் பொட்டியைத் திறந்து பொத்தானை அழுத்துவதற்குள் நின்று கொண்டிருக்கும் பெருசுகளும் சிறுசுகளும் முட்டிக் கொண்டு ஒரு கலவரமே நடக்கும்.
நாட்கள் ஒட, ஓரே ஒரு வீட்டில் வண்ணத் தொலைக்காட்சி வாங்கி சனிக்கிழமை 25 பைசாவுக்கு இந்திப் படமும் ஞாயிறுகளில் 50 பைசாவுக்கு தமிழ் படமும் தூர்தர்ஷனில் காட்டினார்கள். பின்னர் "டெக்கு" என்று விசிஆர் வந்து 1 படத்துக்கு ஆளுக்கு ஒரு ரூபாய் என்று வசுல் செய்தார்கள். புதுப் படம் என்றால் அதற்கு 25 பைசா தனி. பின்னர் சன் தொலைக்காட்சி, ராஜ் என ஒவ்வொரு சானலுக்கும் பைசா வாங்கினார்கள்...
காலம் மாறி மாறி இன்று நீங்கள் சொன்னது போல் //சுவரில் ஒட்டிக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள்// அது தான் ப்ளாஸ்மாவோ புரொடசொவாவோ எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒன்றல்ல பலவாகி விட்டன.
காலம், ஞாலத்தை வெவ்வெறு சாயங்கலால் மாற்றிக்கொண்டே இருக்கிறது.உங்களின் இந்த //சுவரில் ஒட்டிக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள்// என்னைச் சற்றே பழைய நாட்களுக்கு இட்டுச் சென்றது.
நன்றி.
நல்ல ஃப்ளோ. தமிழ்மணம் திரட்டில சேர்த்தா முதல் ஓட்டு நீங்க போடுங்க. இல்லைன்னா லிஸ்ட்ல வராது. அப்புறம் எழுத்துப் பிழை பாருங்க. ஜிகிர்தண்டா ஜோர்.
Post a Comment