மார்கழி என்றாலே கச்சேரி சீசன், எல்லா சபாக்களும் நிரம்பி வழியும் காலம். இதை நமது பதிவிலும் கொண்டு வரலாமே என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தொடர் இது.
கர்னாடக இசை என்பது நமது தென்னிந்திய, குறிப்பாக நமது தமிழ்நாட்டில் மிகப் பிரசித்தம். இசை என்றவுடன் நமக்கு குயிலின் ஞாபகம்தான் வரும். அதே போல் கர்னாடக இசையென்றால் நமக்கு இந்த குயிலின் ஞாபகம்தான் வரவேண்டும். திரையிசையில் 'காற்றினிலே...' பாடலில் மக்களை கட்டிப் போட்ட அந்த குரல்தான் பின்னாளில் 'குறை ஒன்றும் இல்லை...' என்று நம் சார்பில் கண்ணனுக்கு அறிவித்தது. நமது பாரத ரத்னா திருமதி. M S அம்மா அவர்கள்.அவர்கள் பாடிய தியாகராஜ கீர்த்தனை இந்த பதிவில். இதைத் தவிர ஏன் தியாகராஜ கீர்த்தனை அல்லாத மற்ற பாடல்களையும் இடக்கூடாதா என அதிகம் யோசித்து பார்த்ததில், அதையும் இடலாம் என்றே தோன்றுகிறது. எனவே மற்ற பாடல்களும் வரும், திரையிசை அல்லாத மற்ற பாடல்கள்.
ராதா விஸ்வநாதன் அவர்கள் உடன் பாட, கண்டதேவி அழகிரிஸ்வாமி வயலின்வாசிக்க, குருவாயூர் திரு துரை மிருதங்கம் இசைக்க, குயில் கூவுகிறது.
இது சற்றே பெரிய பாடல்.
கண்ணை மூடி, கேட்டு மகிழுங்கள்.
-------------------------------------------------------------
பி.கு - வீடியோ-வை அளித்து உதவிய youtube நவரசனுக்கு நன்றி.
2 Comments:
நல்ல ஆரம்பம். கூடிய வரையில் யூ டியூபில் யார் பங்களிப்புச் செய்தார்களோ அவர்களுக்கு நன்றியும் சொல்லிவிடுங்கள் கார்த்திக்.
கண்டிப்பாக அண்ணே,
மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கேன் அவங்க வீடியோ -வை.
அடுத்த பதிவுல நன்றிய பெருசா போட்டுறலாம்
Post a Comment