எப்போதும் ஏதாவது படத்துக்கு கூட்டமாய் செல்வது எங்கள் பழக்கமா. அதுமாதிரி பீமா படத்துக்கு போலாமா என்று கேட்க ஹேமாவிற்கு போன் செய்யலாமா என்று யோசித்த போது ஷாமாவிடமிருந்து கால் வந்தது. ஹேமா கோமாவில் இருக்கிறாளாம். வேகமா வண்டி ஓட்டும் போட்டியாமா, அதில் அவள் ஸ்கிட் அடித்து விழுந்தாலாமா....
கோமாவில் இருக்கிறாள் ஹேமா என்று தெரிந்ததும், நாமாக சென்று பார்க்கவேண்டும் என்று புறப்பட்டோம். அங்கே சென்றதும், ட்ரிம்-ஆனா அவளது மாமா அங்கே வந்து 'ஏம்மா, இப்படி ஆயிடுச்சேம்மா!!!' என்று அலற. டீமாக சென்ற நாங்கள் காமாக நின்று கொண்டிருந்தோம். உட்கார்ந்திருந்த பாமாவிடம், 'என்னம்மா ஆச்சு!!!' என்றோம். 'கேமாக தொடங்கியது ஷேமாக முடிந்தது' என்றாள். பார்க்க பாவமா இருந்தது. 'அட ராமா, இதுவும் உன் கேமா. தாமாக எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டு செய்வாளே ஹேமா'
'என்னம்மா இங்க இவ்வளவு கூட்டமா? கிளம்புங்கம்மா' என்றார் நர்சம்மா. 'போவோமா' என்று தலையாட்டிய ஷாமாவிடம், ஆமா என்று சைகை செய்தேன். சும்மா வெளிய வந்த நான், 'அம்மா, ஹேமா சீக்கிரமா சாதரணமா ஆகணும்மா' என்று வேண்டினேன். அங்கே இருந்த டீக்காரம்மா, 'வந்து டீ சாப்ட்டு போங்கம்மா' என்று கூற. 'அஞ்சு டீ தாங்கம்மா' என்று கூறி நாங்கள் மௌனமா நின்றிந்தோம். 'போண்டா வேணுமா?' என்ற அந்த அம்மாவிடம், 'வேண்டாம்மா' என்றோம்.
அங்கிருந்து ஓடி வந்த பாமா, 'ஷாமா, ஹேமா!!! மாமான்னு கூப்பிட்டா' என்று கூற. 'அம்மா, நன்றிம்மா' என்று கூறிவிட்டு என் கால்கள் ஹேமாவை நோக்கி ஓடின. 'பணம்மா.... அட... பணம்மா... ' என்று கத்திக் கொண்டிருந்தார் போண்டாக்காரம்மா.
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
5 Comments:
=))) இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
நன்றி பிரியா அக்கா..
உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஏஏஏஏன் நல்லாத்தானே போய்க்கிருக்கு. இதென்ன கிறுக்கு:))நல்லாருக்கு.
எல்லாமே மா தான்
:)))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
எப்படிம்மா கார்த்திமா? சிரிச்சு சிரிச்சு முடியலைம்மா. ஹேமா ஆயிட்டாளா க்ஷேமமா?
Post a Comment