கடந்த இரண்டு நாட்களாய், ஒரு வித Hypothetical World போன்ற ஒரு உலகில் மிதந்து கொண்டிருந்தேன். இதை எழுதுவதா, அல்லது அதை எழுதுவதா என்ற ஒரு குழப்பத்தில் ஒரு 48 மணி நேரம் ஓடிவிட்டது. இப்போது எதனை விடுத்து மற்றொன்றை பிறகு எழுதலாம் என்று நினைத்தால் அதன் சுவாரசியம் குறைந்து விடும், எனக்கு. அதனால் மூன்றையும் பிணைந்து ஒரு கூட்டுக் கலவையாய் தரலாம் என்று முடிவெடுத்து திரும்புகிறேன், நாட்காட்டியில் இரண்டு தினங்கள் ஓடிவிட்டிருந்தது. Better Late than Never என்று சொல்லுவது போல் இன்று கலக்கி விடுவோம் அந்த கலவையை.
கற்பனை:
இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பன் உடுமலை மூலம் ஆர்டர் செய்து பெற்ற புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த எனக்கு கி. ராஜநாராயணன் எழுதிய பிஞ்சுகள் என்ற புத்தகம் கையில் சிக்கியது. அன்றைய தினத்தில் மிச்சமிருந்த நாலு மணி நேரத்தில் படிக்ககூடிய புத்தகமாக இருந்தது அது மட்டும்தான். எடுத்து புரட்ட ஆரம்பித்தேன், முடித்துதான் கீழே வைத்தேன். சொல்ல வந்த விஷயம் பெரியது இல்லை என்றாலும், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது.
ஒரு சிறுவன், அவனது கிராமம் மற்றும் அவனது ரசனை ஆகியவற்றி வைத்து ஒரு நூற்றி இருபது பக்க கதை, அதுவும் சுவாரசியமாக. அருமை. Facts are stubborn things என்று யாரோ கூறியது போல, பறக்கும் பறவையில் இருந்து, அது போடும் முட்டைகள் வரைக்கும் அனைத்தும் ஒருவித சாட்சியங்களுடன் அவர் கூறியிருந்தது எனக்கு பிடித்திருந்தது. சில இடங்களில் அளவிற்கு அதிகமான விளக்கங்களோ என்று தோன்றினாலும் ரசிக்க முடிந்தது. பறவைகளை ஒரு சிறுவன் எப்படி ரசிக்கிறான் அல்லது ரசிக்க முடியும் என்பது எனக்கு முன்னே காட்சிகளாய் ஓடியது. எங்கள் ஊரில் காகங்களை மட்டும் பார்த்த எனக்கு வல்லயத்தான், தேன் கொத்தி, பலவகை சிட்டுக்கள் என பிறவகை பறவைகளையும் அறிமுகப்படுத்தியது வெங்கடேஷ்-தான். அவனுக்கு நன்றி கூறியாக வேண்டுமே....
காக்காய் பிடிப்பது என்பது ஏதோ அரசியல் சம்மந்தப்பட்டது என்று எண்ணிய எனக்கு, அது உண்மையில் ஒரு கலை என்பது இந்த புத்தகம் படித்த பின்பே புலனாகியது. இந்த விஷயங்களை அழகாய் பூமாலை போல கி.ரா கோர்த்த விதம் அருமை. இவர் ஒரு வாட்ச் பண்ண வேண்டிய வால் கிளாக்.
பொறுமை:
அந்த புத்தகத்தை படித்து மூடி வைத்த மறுகணம், இன்னொரு நண்பன் techsatish.net-இல் நீயா? நானா? பார்க்க தொடங்கினான். நானும் முதலில் காது கொடுத்தேன், பின்பு எனது கவனம் முழுவதும் அதன் பக்கம் திருப்பினேன். 'வாழ்வில் தேவை சோம்பேறித்தனமா? சுறுசுறுப்பா?'. ஏதோ என்னைப் பற்றிய விவாதம் போல இருந்தது. நம்ம முதல் கூட்டம். பலர் பலவிதமாக பேசினாலும், இறுதியில் ஒரு நிறுவனத்தில் பெரிய முடிவுகள் எடுப்பவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார், சோம. வள்ளியப்பன். நம்ம சோம்பேறித்தனத்தை அவர் நிதானம் என்று கூறுவதை நானே என்னை தேற்றிக் கொண்டேன்.
அதற்கும் மேல், கொஞ்சம் சோம்பேறித்தனம் உள்ளவர்களால் வாழ்வில் நடைபெறும் எல்லாவற்றையும் ரசிக்க முடியுமாம். சுறுசுறுப்பாய் இருப்பவர்களால் ரசிக்க முடியாதாம். அதனால்தான் நமக்குள் இருக்கும் கவிஞன் அப்பப்போ வெளியே வரான் போல இருக்கு. வென்றுட்டன்!!! பொறுமைதான் வெற்றியின் ரகசியம்.
கற்பனை+பொறுமை:
இது இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும், சேர்க்க முடியுமா என்று தமிழ் அறிஞர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் நான் இரண்டு நாள் முன்னர் பார்த்த அவதாரின் ரகசியம். நண்பர்கள் கூட்டத்துடன் ஒரு இரண்டு மணிநேரம் காரில் பயணித்து, கொலம்பஸ்-இல் இருக்கும் 3D- IMAX தியேட்டர் சென்று பார்த்தோம். பிரம்மாண்டம், இப்படி ஒரே வார்த்தையில் சொல்வது சரியா என்று கூட தெரியவில்லை. அதீத கற்பனை, பனிரெண்டு வருடங்கள் காத்திருக்க பொறுமை, இதுதான் இதன் வெற்றியின் ரகசியமா? அதுவும் தெரியவில்லை. ஒரு நாலு வார்த்தையை யோசித்துவிட்டு அதை எழுத்தில் கொண்டுவரவே நான் வில்லன் படத்தில் வரும் கிரண் போல கமுந்து படுத்து காலை ஆட்டி யோசிப்பேன். இந்த அளவு கற்பனையை அந்த வெள்ளித்திரையில் கொண்டு வர மிகவும் துணிச்சலும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அது நமது கேமரூனிடம் உள்ளது. ஆஸ்கார் இந்த முறையும் அள்ளுவார் என எதிர்பார்கிறேன்.
வேட்டைக்காரனில் முடிவு மட்டும் பார்த்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, அவதாரின் முடிவும் அது போலத்தான். கண்டிப்பாக போய் பாருங்கள், அவதாரை.
அப்பா... எப்படியோ... எழுத நினைத்த மூன்றையும் சுருக்கி, குறுக்கி, முறுக்கி எழுதியாகிவிட்டது. பிடித்தால் ஒரு பின்னூட்டம் போட்டு செல்லுங்கள்.
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
1 month ago
7 Comments:
ம்ம் நடக்கட்டும்.... நல்லதாய்.
நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
:)
வேட்டைக்காரன் படம் ஃபுல்லா பாத்துட்டு சொல்லுங்க. அவதார் மாதிரியே இருக்கானு. அப்புறம் நாங்க போயி பாக்கறோம் ;)))
நன்றி அன்புடன் மணிகண்டன்.
@இம்சை-அரசி - அந்த கொடுமையும் நேத்து நடந்தது. படம் பார்த்துட்டேன்.
ஒரே வித்தியாசம், அவதார்ல அடுத்து என்ன நடக்கும்னு சில இடங்கள்ள சொல்ல முடியாது,
வேட்டைகாரன்ல எல்லாமே சொல்லிடலாம். ஒருவேளை எனக்குள்ள ஒரு பெரிய இயக்குனர்
இருக்காரோ என்னவோ.
கி.ரா. படிக்கத் தோணிச்சா. அப்ப நல்லா வருவ கார்த்திக். ஒன்னு விடாம படி.
Kee.Raa vin karisal kattu ezhuthalumayai purinthu kolvathu konjam kadinam...:-( irunthalum padikka padikka antha thalathil irunthu varum ezhuthu nammai mei markkacheithu vidum....All the best karthi...!!
Post a Comment