பயம் என்ற ஒற்றைச்சொல் உலகை எப்படி ஆட்டிபபடைக்கிறது. நீச்சல் குளத்திற்கு அழைக்கும் நண்பர்களுடன் செல்லும் நான், தண்ணீரில் மூழ்கிவிடுவேனோ என்று நெஞ்சுவரை தண்ணீரில் நிற்பதுபோல. பயம் இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. வல்லரசு அமெரிக்காவே பயத்தில் நடுங்குகிறது. Detroit நோக்கிச் சென்ற விமானத்தை தகர்க்க ஒரு இளைஞன் முயற்சித்துள்ளான். இதனால் அமெரிக்க செல்லும் விமானங்கள் தரையிரங்குமுன் ஒரு மணி நேரம் யாரும் கழிவறையை உபயோகிக்கக் கூடாதாம். யாரும் போர்வையை பயன்படுத்தக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது?
ஆத்திரத்தை அடக்கலாம், அதை அடக்கலாமா? ஒருவன் எப்போது பயத்தை ஒழிக்கிறானோ, அப்போதுதான் அவனது முழு ஆற்றலும் வெளிப்படும். இது பல சுய முன்னேற்ற புத்தகங்களில் நான் படித்தது. இது எனக்கும் சேர்த்துதான்.
'டேய், ஸ்விம்மிங் போலாமா', பின்னால் இருந்து நண்பன்.
'நாளைக்குப் போலாம்டா' நான்.
--------------------------------------------------------------------------------------
ஒன்றாம் வகுப்பு முதல், முதல் ரேங்க் வாங்க வேண்டுமென்ற இலக்கு, எட்டாவது முதல், பத்தாவதில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டுமென்ற இலக்கு. பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கினால், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமென்ற இலக்கு. நான்கு வருடம் ஏதோ தாட்டிவிட்டு வந்து வேலை வாங்கினால், எனது மேனேஜர் சொன்ன முதல் வரி 'burn your butts for the first four years, then...' இதை எங்கேயோ கேட்டது போல இருக்கே என்றால், நான்கு வருடம் முன்னால், கல்லூரி முதல் நாள் வாத்தியார் சொன்ன அதே வார்த்தைகள். உலகில் முக்கால்வாசிப் பேர் மற்றவர்கள் போன அதே பாதையை தெரிவு செய்து போகிறோம். நாம் தேர்வு செய்த இலக்குதான் நமது இலாகாவா என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. அந்த முக்கால்வாசியில் நானும் ஒருவன். இனிமேல் இப்படி இருக்கக் கூடாதென்று முடிவெடுத்துள்ளேன். பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------------
மூன்றாவதாய் நாம் அலசப்போகும் விஷயம் அனைவரின் வாழ்வையும் திருப்பிப் போடும் பகுதி. திருமணம். எனக்கென்னவோ, திருமணம் என்னும் நிகழ்வு உலகில் தொண்ணூறு சதவிகித பேரை தங்களது மனதிற்கு தகுந்த பாதையை தெரிவு செய்ய விடாமல் தடுக்கிறது என்று தோன்றுகிறது. எங்கே எனக்கு இசையமைக்க ஆசையென்று கூறினால் பெண் தருவார்களா என்றும், புகைப்படம் எடுப்பதுதான் எனது லட்சியம் என்றால் துரத்தியடிப்பார்களோ என்ற எண்ணமும் நம்மை 'கிடக்குது கழுத இந்த பக்கமே போவோம்' என்று நமது எண்ணங்களை கிடப்பில் போடச் செய்கின்றன. இது எனது தாழ்மையான கருத்து, எதிர்ப்பவர்கள் வரவேற்க்கப் படுகின்றனர். எனக்குத் தெரிந்து திருமணத்தில் அழிந்த இலட்சியங்கள் அதிகம் என்று தோன்றுகிறது.
--------------------------------------------------------------------------------------
பயத்தை விட்டு லட்சியத்தை தொடருங்கள் என்று கூறும் படம்தான் 3 இடியட்ஸ். அமீர், மாதவன், ஷர்மன் மூவரும் திரையில் வருகையில் படம் களைக்கட்டுகிறது. ராஜ்குமார் ஹிரானியின் மகுடத்தில் முன்னாபாய் M.B.B.S மற்றும் லகே ரஹோ முன்னாபாயை தொடர்ந்து மூன்றாவது முத்து 3 இடியட்ஸ். அனைவரும் பார்க்கவேண்டிய படம்.
3 Comments:
உன் களத்துக்கு திரும்பினியா ராசா. நல்லது. :)).
3 idiots பார்த்தேன்...உங்களின் மனோ நிலை தான் எனக்கும்...கல்லூரி முடிந்து 5 வருடத்துக்கு மேல் ஆகியும் சரியான பாதையைத் தான் தேர்ந்தெடுத்தோமா என்ற சந்தேகம் இன்றும் உண்டு (!!!!) ...
இந்தி தெரியாததால் (புரியாததால்), முழுமையாக வசனங்களை அனுபவிக்க முடியவில்லை படத்தில்...:-(
வாங்க ஜிகர்.. நலம்தானே??::))
Post a Comment