குழப்பம் என்பது எனது அரை டவுசர் காலம் தொட்டே என்னுடன் பயணிக்கும் என் இனிய நண்பன். காலையில் எழுந்ததும் பள்ளிக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஆரமிக்கும் குழப்பம், என்ன காரணம் சொல்லி பள்ளிக்கு மட்டம் போடலாம் என்று சிந்திக்கும் வரை தொடரும். இது சற்றே விரிவடைந்து பத்தாவது முடித்தவுடன் கணினி பாடம் எடுக்கலாமா அல்லது உயிரியல் எடுக்கலாமா என்று சென்றது. எந்த கல்லூரி என்பதில் அடுத்த குழப்பம். தேர்ந்தெடுத்த கல்லூரியில் என்ன கிளாஸ், என்பதில் மரக்கிளை போல பரந்துவிரியத் தொடங்கியது.
வேலை கிட்டியவுடன், படிக்க போகலாமா இல்லை வேலைக்கு போகலாமா என்பதில் அடுத்த குழப்பம். சரி வேலைக்கு போய் கொஞ்சம் காசு பாப்போம் என்ற முடிவுடன் போனால், java தெரியுமா, C தெரியுமா என்று அவர்கள் கேட்டகேள்வியில் மிகப்பெரிய குழப்பம். அதையெல்லாம் தாண்டி, onsite போகலாமா வேண்டாமா என்பதில் அடுத்த பிரேக். சரி, வெளிநாடு போய் பணம் பார்த்தாச்சுஅதை வைத்து படிக்க போலாம் என்று நினைக்கும் போது, MBA படிப்பதா, MS படிப்பதா என்று குழப்பம் கூடவே வந்தது. எல்லாம் முடிவு பண்ணி படிக்க வந்தாகிவிட்டது. இப்போதாவது குழப்பம் நம்மை விட்டு போகிறதா என்றுபார்த்தால் இல்லை, இன்னும் தொடர்கிறது. என்ன குழப்பம் என்றுகேட்கிறீர்களா? வரும் சனிக்கிழமை என்ன செய்வது என்று. இரண்டு மாபெரும் ஜிகினா படங்கள் வெளிவருகிறதே, எதை முதலில் பார்ப்பது என்று பெரிய குழப்பம். இதை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். வேட்டைக்காரனாஅல்லது அவதாரா... ஒரே கன்ப்யுசன்.... ஹெல்ப் ப்ளீஸ்
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
1 month ago
4 Comments:
தெனாலிக்கு பயங்கள் - தங்களுக்கு குழப்பங்கள்.
ஹா, ஹா, ஹா.....
பதிவுலக டரியல் படி வேட்டைக்காரனுக்கு அப்புறம் என்னாகும்னு தெரியாது போல. அதனால படம் இருக்கிற வரிசைப்படியே பாக்குறது நல்லது.:))
dei ithu romba over da...ethayum ethayum compare pannara...enna vaytakaran uloor masalana...avatar holywood masala
iniku porom illa avatar...
Post a Comment