Thursday, December 31, 2009

ஹேமாவின் கோமா...


எப்போதும் ஏதாவது படத்துக்கு கூட்டமாய் செல்வது எங்கள் பழக்கமா. அதுமாதிரி பீமா படத்துக்கு போலாமா என்று கேட்க ஹேமாவிற்கு போன் செய்யலாமா என்று யோசித்த போது ஷாமாவிடமிருந்து கால் வந்தது. ஹேமா கோமாவில் இருக்கிறாளாம். வேகமா வண்டி ஓட்டும் போட்டியாமா, அதில் அவள் ஸ்கிட் அடித்து விழுந்தாலாமா....

கோமாவில் இருக்கிறாள் ஹேமா என்று தெரிந்ததும், நாமாக சென்று பார்க்கவேண்டும் என்று புறப்பட்டோம். அங்கே சென்றதும், ட்ரிம்-ஆனா அவளது மாமா அங்கே வந்து 'ஏம்மா, இப்படி ஆயிடுச்சேம்மா!!!' என்று அலற. டீமாக சென்ற நாங்கள் காமாக நின்று கொண்டிருந்தோம். உட்கார்ந்திருந்த பாமாவிடம், 'என்னம்மா ஆச்சு!!!' என்றோம். 'கேமாக தொடங்கியது ஷேமாக முடிந்தது' என்றாள். பார்க்க பாவமா இருந்தது. 'அட ராமா, இதுவும் உன் கேமா. தாமாக எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டு செய்வாளே ஹேமா'

'என்னம்மா இங்க இவ்வளவு கூட்டமா? கிளம்புங்கம்மா' என்றார் நர்சம்மா. 'போவோமா' என்று தலையாட்டிய ஷாமாவிடம், ஆமா என்று சைகை செய்தேன். சும்மா வெளிய வந்த நான், 'அம்மா, ஹேமா சீக்கிரமா சாதரணமா ஆகணும்மா' என்று வேண்டினேன். அங்கே இருந்த டீக்காரம்மா, 'வந்து டீ சாப்ட்டு போங்கம்மா' என்று கூற. 'அஞ்சு டீ தாங்கம்மா' என்று கூறி நாங்கள் மௌனமா நின்றிந்தோம். 'போண்டா வேணுமா?' என்ற அந்த அம்மாவிடம், 'வேண்டாம்மா' என்றோம்.

அங்கிருந்து ஓடி வந்த பாமா, 'ஷாமா, ஹேமா!!! மாமான்னு கூப்பிட்டா' என்று கூற. 'அம்மா, நன்றிம்மா' என்று கூறிவிட்டு என் கால்கள் ஹேமாவை நோக்கி ஓடின. 'பணம்மா.... அட... பணம்மா... ' என்று கத்திக் கொண்டிருந்தார் போண்டாக்காரம்மா.


Wednesday, December 30, 2009

வந்ததே 2010 : 2009 டாப் பத்து நிகழ்வுகள்

இப்போதுதான் டிசம்பர் 31 2008 பெங்களூரில் எங்களது அறையில் நண்பர்கள் மதுவருந்த அவர்களது சைடு டிஷ் முழுவதும் சாப்பிட்ட பாவத்திற்கு திட்டு மற்றும் குட்டு வாங்கி கண்ணயர்ந்தேன், அதற்குள் வந்துவிட்டது 2010. இந்த வருடத்தில் என்ன ஆணி புடிங்கினோம் என்று தெரியவில்லை. வயது ஒன்று கூடிப் போயுள்ளது, பெரிய சாதனைதான்.

ஈஷா யோகா மையம், விப்ரோ பிரேம்ஜி சந்திப்பு, அமெரிக்க பயணம் என்று எல்லாம் நல்லபடியாக எனக்கு நடந்து முடிந்த வருடம். இதற்கெல்லாம் மேலாக நான் எனது வலைப்பூவை தூசி தட்டி எடுத்த வருடம். எத்தனை நண்பர்கள், எண்ணிக்கொண்டுள்ளேன்.

இந்த வருடம் நடந்த விஷயங்களை நான் வரிசைப்படுத்தியுள்ளேன். இதுதான் வரிசை என்றில்லை, மொத்தம் பத்து அவ்வளவுதான்.

ஒபாமா - சுபமா?
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக குடியேறிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கர். அவரது பேச்சுத் திறமையை உலகமே திரும்பிப் பார்த்தது. தொழில்நுட்பத்தை மிகவும் திறமையாக உபயோகப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். நோபல் பரிசு வேறு தட்டிக்கொண்டு போய்விட்டார். ஹ்ம்ம்...

ஆஸ்கார் ரஹ்மான்:
ஆஸ்கார் தமிழனாய் அவர் அன்று பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துகொண்டுள்ளது. திறமை இருந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும். அதை நிருபித்துள்ளார். ஜெய் ஹோ ரஹ்மான்.

மைக்கேல் ஜாக்சன்:
இதோ முடிந்துவிட்டது, தனது வலிப்பாட்டம் மூலம் அனைவரையும் கட்டிப் போட்ட மனிதன், இன்று இல்லை. பல விஷயங்களில் அவர் சிக்கியிருந்தாலும், அவரது மறைவிற்கு பின்னர் உலகின் இசைப்பியாநோவில் ஒரு கீ இல்லாமல் போய்விட்டது என்னவோ உண்மைதான். MJ We will Miss you....

சச்சின் இருபது:
ஒரு நாள் பந்து போட்டு கிரிக்கெட் விளையாடினாலே, கை காலெல்லாம் வலித்து போய்விடும் எனக்கு. ஒரு மனிதன் இருபது ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவருக்கு கிரிக்கெட் எவ்வளவு இஷ்டமானதாய் இருக்க வேண்டும். அதிலும் இன்றும் அதே இளமை துள்ளலுடன் விளையாடுகிறார். உலகே அவரைப் பார்த்து வாய் பிளந்துள்ளது. சச்சின் ஒரு சகாப்தம்.

கமலஹாசன் ஐம்பது:
இந்த வருடம், உலக நாயகனின் சகாப்த வருடம். தமிழ் சினிமாவை உலக சினிமாவை நோக்கி உயர்த்த பாடுபடும் தமிழன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கும் இவர் தமிழ் சினிமா மகுடத்தின் வைரக் கல். கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான்.

பன்றிக் காய்ச்சல்:
உலகத்தையே ஆச்சா போச்சா என்று ஆக்கிவிட்டுப் போய்விட்டது. உலகின் பல பகுதிகளில் பலரை காவு வாங்கிய பன்றிக் காய்ச்சல் இன்று ஏதோ கொஞ்சம் அடக்கிவாசித்து வருகிறது. ஏதோ மருந்தும் கண்டுபிடித்துவிட்டனர். பன்றிகளுக்கா,நமக்கா?

ரியோ-டி-ஜெனிரோ:
2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை அசால்டாக தட்டிக் கொண்டுப் போய்விட்டது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகள் தென்னமெரிக்க கண்டத்திற்கு சென்றுள்ளது. BRIC நாடுகளில், இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் ஒலிம்பிக் போட்டியை நடத்திவிட்டன அல்லது நடத்த போகின்றன. இந்தியாவிற்கு எப்போ விடிவுகாலமோ. விழித்துக் கொண்டு காத்திருப்போம். முதலில் காமன் வெல்த் போட்டிகளை ஒழுங்காய் நடத்துங்கள் என்று சொல்லுவது காதில் விழுகிறது.

இந்தியா முதலிடம்:
இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் ரேங்க் எடுத்துள்ளது. எதில் முதல் ரேங்க் எடுக்கிறோமோ, அதைத்தான் நாம் செய்யவேண்டும். ஆனால் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடுகிறதாம். ஏதோ கெஞ்சிக் கூத்தாடி தென்னாபிரிக்க அணி இரண்டு கூடுதல் போட்டிகள் விளையாட சம்மதித்துள்ளது. தக்கவைத்துக் கொள்ளுவோமாதெரியவில்லை.

வெங்கி ராமகிருஷ்ணன்:
நோபல் பரிசு வாங்கிய மூன்றாவது தமிழர். அமெரிக்க வாழ் இந்தியத் தமிழர் (வரிசை சரி என்று நம்புகிறேன்). உயிரியலில் அவரது ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர். இவர் இன்றும் இந்தியா வந்து வகுப்புகள் நடத்துகிறார். சில பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவதை கேள்விப் பட்டேன். உண்மையாக இருக்க வேண்டுகிறேன். இவரை முன்மாதிரியாய் கொண்டு இன்னும் பலர்வரவேண்டும்.

செக்ஸ் விவகாரங்கள்:
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் என்பது போல உலகையும் இந்தியாவையும் உலுக்கிய செக்ஸ் சம்பவங்கள். உலகின் தலைசிறந்த கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் முதலில் இந்த விவகாரத்தில் மாட்டி சிக்கி சின்னாபின்னமானார். ஒன்றா, ரெண்டா என்று அவரது அந்தரங்கம் வெட்டவெளிச்சமானது. இதைத் தொடர்ந்து நமது ஆந்திர ஆளுநர், ஆளுநர் மாளிகை மன்மத லீலைகளை வெளியிட்டது ஆந்திர தொலைகாட்சி. என்னதான் அவர் மறுத்தாலும், இந்த வயதில் அந்த ஆளுக்கு தேவையா என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு மாநிலத்தின் முதல்குடிமகன் நடந்துக்கொண்டுள்ளார். நாட்டி கய்ஸ்.


இதையனைத்தையும் தூக்கி சாப்பிடுமாறு ஒரு விஷயம் நடந்தது என்றால் அது இலங்கையில் நமது தமிழர்களை கொன்று குவித்த துக்க சம்பவங்கள். அதைவைத்து அரசியல் செய்த நம் இந்திய தலைவர்கள், மற்றும் இலங்கையில் வசிக்கும் தற்போதைய ராவணன் ராஜபக்ஷேவும் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்படுகிறார்கள். வாழ்வதற்கும் வழியற்று, சரியான மருத்துவ வசதியும் இல்லாமல் நம் மக்கள் பட்ட பாடு. அதை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது

இத்தனையும் நடந்து கொண்டிருந்தாலும், 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்...' எனது பூமித்தாய் எனக்கு அழகாகிக் கொண்டே போகிறாள். அவள் இந்த வருடம் இன்னும் அருகில் இருந்து ரசிக்கவேண்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy New Year 2010.




Tuesday, December 29, 2009

பயம், இலக்கு, கல்யாணம் = 3 இடியட்ஸ்

பயம் என்ற ஒற்றைச்சொல் உலகை எப்படி ஆட்டிபபடைக்கிறது. நீச்சல் குளத்திற்கு அழைக்கும் நண்பர்களுடன் செல்லும் நான், தண்ணீரில் மூழ்கிவிடுவேனோ என்று நெஞ்சுவரை தண்ணீரில் நிற்பதுபோல. பயம் இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. வல்லரசு அமெரிக்காவே பயத்தில் நடுங்குகிறது. Detroit நோக்கிச் சென்ற விமானத்தை தகர்க்க ஒரு இளைஞன் முயற்சித்துள்ளான். இதனால் அமெரிக்க செல்லும் விமானங்கள் தரையிரங்குமுன் ஒரு மணி நேரம் யாரும் கழிவறையை உபயோகிக்கக் கூடாதாம். யாரும் போர்வையை பயன்படுத்தக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது?


ஆத்திரத்தை அடக்கலாம், அதை அடக்கலாமா? ஒருவன் எப்போது பயத்தை ஒழிக்கிறானோ, அப்போதுதான் அவனது முழு ஆற்றலும் வெளிப்படும். இது பல சுய முன்னேற்ற புத்தகங்களில் நான் படித்தது. இது எனக்கும் சேர்த்துதான்.

'டேய், ஸ்விம்மிங் போலாமா', பின்னால் இருந்து நண்பன்.
'நாளைக்குப் போலாம்டா' நான்.

--------------------------------------------------------------------------------------

ஒன்றாம் வகுப்பு முதல், முதல் ரேங்க் வாங்க வேண்டுமென்ற இலக்கு, எட்டாவது முதல், பத்தாவதில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டுமென்ற இலக்கு. பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கினால், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமென்ற இலக்கு. நான்கு வருடம் ஏதோ தாட்டிவிட்டு வந்து வேலை வாங்கினால், எனது மேனேஜர் சொன்ன முதல் வரி 'burn your butts for the first four years, then...' இதை எங்கேயோ கேட்டது போல இருக்கே என்றால், நான்கு வருடம் முன்னால், கல்லூரி முதல் நாள் வாத்தியார் சொன்ன அதே வார்த்தைகள். உலகில் முக்கால்வாசிப் பேர் மற்றவர்கள் போன அதே பாதையை தெரிவு செய்து போகிறோம். நாம் தேர்வு செய்த இலக்குதான் நமது இலாகாவா என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. அந்த முக்கால்வாசியில் நானும் ஒருவன். இனிமேல் இப்படி இருக்கக் கூடாதென்று முடிவெடுத்துள்ளேன். பார்ப்போம்.

--------------------------------------------------------------------------------------

மூன்றாவதாய் நாம் அலசப்போகும் விஷயம் அனைவரின் வாழ்வையும் திருப்பிப் போடும் பகுதி. திருமணம். எனக்கென்னவோ, திருமணம் என்னும் நிகழ்வு உலகில் தொண்ணூறு சதவிகித பேரை தங்களது மனதிற்கு தகுந்த பாதையை தெரிவு செய்ய விடாமல் தடுக்கிறது என்று தோன்றுகிறது. எங்கே எனக்கு இசையமைக்க ஆசையென்று கூறினால் பெண் தருவார்களா என்றும், புகைப்படம் எடுப்பதுதான் எனது லட்சியம் என்றால் துரத்தியடிப்பார்களோ என்ற எண்ணமும் நம்மை 'கிடக்குது கழுத இந்த பக்கமே போவோம்' என்று நமது எண்ணங்களை கிடப்பில் போடச் செய்கின்றன. இது எனது தாழ்மையான கருத்து, எதிர்ப்பவர்கள் வரவேற்க்கப் படுகின்றனர். எனக்குத் தெரிந்து திருமணத்தில் அழிந்த இலட்சியங்கள் அதிகம் என்று தோன்றுகிறது.

--------------------------------------------------------------------------------------

பயத்தை விட்டு லட்சியத்தை தொடருங்கள் என்று கூறும் படம்தான் 3 இடியட்ஸ். அமீர், மாதவன், ஷர்மன் மூவரும் திரையில் வருகையில் படம் களைக்கட்டுகிறது. ராஜ்குமார் ஹிரானியின் மகுடத்தில் முன்னாபாய் M.B.B.S மற்றும் லகே ரஹோ முன்னாபாயை தொடர்ந்து மூன்றாவது முத்து 3 இடியட்ஸ். அனைவரும் பார்க்கவேண்டிய படம்.


Tuesday, December 22, 2009

எதனை விடுத்து எதனை எடுக்க...

கடந்த இரண்டு நாட்களாய், ஒரு வித Hypothetical World போன்ற ஒரு உலகில் மிதந்து கொண்டிருந்தேன். இதை எழுதுவதா, அல்லது அதை எழுதுவதா என்ற ஒரு குழப்பத்தில் ஒரு 48 மணி நேரம் ஓடிவிட்டது. இப்போது எதனை விடுத்து மற்றொன்றை பிறகு எழுதலாம் என்று நினைத்தால் அதன் சுவாரசியம் குறைந்து விடும், எனக்கு. அதனால் மூன்றையும் பிணைந்து ஒரு கூட்டுக் கலவையாய் தரலாம் என்று முடிவெடுத்து திரும்புகிறேன், நாட்காட்டியில் இரண்டு தினங்கள் ஓடிவிட்டிருந்தது. Better Late than Never என்று சொல்லுவது போல் இன்று கலக்கி விடுவோம் அந்த கலவையை.

கற்பனை:

இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பன் உடுமலை மூலம் ஆர்டர் செய்து பெற்ற புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்த எனக்கு கி. ராஜநாராயணன் எழுதிய பிஞ்சுகள் என்ற புத்தகம் கையில் சிக்கியது. அன்றைய தினத்தில் மிச்சமிருந்த நாலு மணி நேரத்தில் படிக்ககூடிய புத்தகமாக இருந்தது அது மட்டும்தான். எடுத்து புரட்ட ஆரம்பித்தேன், முடித்துதான் கீழே வைத்தேன். சொல்ல வந்த விஷயம் பெரியது இல்லை என்றாலும், அவர் சொன்ன விதம் என்னை கவர்ந்தது.

ஒரு சிறுவன், அவனது கிராமம் மற்றும் அவனது ரசனை ஆகியவற்றி வைத்து ஒரு நூற்றி இருபது பக்க கதை, அதுவும் சுவாரசியமாக. அருமை. Facts are stubborn things என்று யாரோ கூறியது போல, பறக்கும் பறவையில் இருந்து, அது போடும் முட்டைகள் வரைக்கும் அனைத்தும் ஒருவித சாட்சியங்களுடன் அவர் கூறியிருந்தது எனக்கு பிடித்திருந்தது. சில இடங்களில் அளவிற்கு அதிகமான விளக்கங்களோ என்று தோன்றினாலும் ரசிக்க முடிந்தது. பறவைகளை ஒரு சிறுவன் எப்படி ரசிக்கிறான் அல்லது ரசிக்க முடியும் என்பது எனக்கு முன்னே காட்சிகளாய் ஓடியது. எங்கள் ஊரில் காகங்களை மட்டும் பார்த்த எனக்கு வல்லயத்தான், தேன் கொத்தி, பலவகை சிட்டுக்கள் என பிறவகை பறவைகளையும் அறிமுகப்படுத்தியது வெங்கடேஷ்-தான். அவனுக்கு நன்றி கூறியாக வேண்டுமே....

காக்காய் பிடிப்பது என்பது ஏதோ அரசியல் சம்மந்தப்பட்டது என்று எண்ணிய எனக்கு, அது உண்மையில் ஒரு கலை என்பது இந்த புத்தகம் படித்த பின்பே புலனாகியது. இந்த விஷயங்களை அழகாய் பூமாலை போல கி.ரா கோர்த்த விதம் அருமை. இவர் ஒரு வாட்ச் பண்ண வேண்டிய வால் கிளாக்.

பொறுமை:

அந்த புத்தகத்தை படித்து மூடி வைத்த மறுகணம், இன்னொரு நண்பன் techsatish.net-இல் நீயா? நானா? பார்க்க தொடங்கினான். நானும் முதலில் காது கொடுத்தேன், பின்பு எனது கவனம் முழுவதும் அதன் பக்கம் திருப்பினேன். 'வாழ்வில் தேவை சோம்பேறித்தனமா? சுறுசுறுப்பா?'. ஏதோ என்னைப் பற்றிய விவாதம் போல இருந்தது. நம்ம முதல் கூட்டம். பலர் பலவிதமாக பேசினாலும், இறுதியில் ஒரு நிறுவனத்தில் பெரிய முடிவுகள் எடுப்பவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார், சோம. வள்ளியப்பன். நம்ம சோம்பேறித்தனத்தை அவர் நிதானம் என்று கூறுவதை நானே என்னை தேற்றிக் கொண்டேன்.

அதற்கும் மேல், கொஞ்சம் சோம்பேறித்தனம் உள்ளவர்களால் வாழ்வில் நடைபெறும் எல்லாவற்றையும் ரசிக்க முடியுமாம். சுறுசுறுப்பாய் இருப்பவர்களால் ரசிக்க முடியாதாம். அதனால்தான் நமக்குள் இருக்கும் கவிஞன் அப்பப்போ வெளியே வரான் போல இருக்கு. வென்றுட்டன்!!! பொறுமைதான் வெற்றியின் ரகசியம்.

கற்பனை+பொறுமை:

இது இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும், சேர்க்க முடியுமா என்று தமிழ் அறிஞர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் நான் இரண்டு நாள் முன்னர் பார்த்த அவதாரின் ரகசியம். நண்பர்கள் கூட்டத்துடன் ஒரு இரண்டு மணிநேரம் காரில் பயணித்து, கொலம்பஸ்-இல் இருக்கும் 3D- IMAX தியேட்டர் சென்று பார்த்தோம். பிரம்மாண்டம், இப்படி ஒரே வார்த்தையில் சொல்வது சரியா என்று கூட தெரியவில்லை. அதீத கற்பனை, பனிரெண்டு வருடங்கள் காத்திருக்க பொறுமை, இதுதான் இதன் வெற்றியின் ரகசியமா? அதுவும் தெரியவில்லை. ஒரு நாலு வார்த்தையை யோசித்துவிட்டு அதை எழுத்தில் கொண்டுவரவே நான் வில்லன் படத்தில் வரும் கிரண் போல கமுந்து படுத்து காலை ஆட்டி யோசிப்பேன். இந்த அளவு கற்பனையை அந்த வெள்ளித்திரையில் கொண்டு வர மிகவும் துணிச்சலும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அது நமது கேமரூனிடம் உள்ளது. ஆஸ்கார் இந்த முறையும் அள்ளுவார் என எதிர்பார்கிறேன்.

வேட்டைக்காரனில் முடிவு மட்டும் பார்த்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, அவதாரின் முடிவும் அது போலத்தான். கண்டிப்பாக போய் பாருங்கள், அவதாரை.

அப்பா... எப்படியோ... எழுத நினைத்த மூன்றையும் சுருக்கி, குறுக்கி, முறுக்கி எழுதியாகிவிட்டது. பிடித்தால் ஒரு பின்னூட்டம் போட்டு செல்லுங்கள்.


மார்கழி மஹா உற்சவம் - 5

சிட்னியில் நடைப்பெற்ற கணேஷ் குமரேஷ் கலக்கிய இசை. இவர்கள்ஆரம்பத்தில் கர்னாடக இசையை மட்டும் வாசித்து வந்தாலும், பின்னர் ஃபியுஷன்இசையில் இவர்கள் இசைக்க அரமித்தனர். ஜனரஞ்சனி ராகத்தில் பூந்துவிளையாடுகின்றனர். ஒருவர் கார்ட் பிடிப்பதும், அடுத்தவர் வாசிப்பதும் அருமை. இருவரும் நம் கண்முன் சிம்பனி போன்றதொரு தோற்றத்தை தருகின்றனர். ஒரேவருத்தம் காலியாய் இருக்கும் பல சீட்டுகள்.



பி.கு: Adomac அவர்களுக்கு நன்றி.


Saturday, December 19, 2009

மார்கழி மஹா உற்சவம் - 4

கடந்த மூன்று பதிவுகளாய் நாம் பாடல்களை பார்த்தோம். இன்று நமது கர்னாடக சங்கீத உலகின் இசைக் கருவி மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்த நமது மண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்கள். இதோ அவரின் இசை வெள்ளத்தில் நனையுங்கள். 'ஸ்ரீராம பாதமா...'



--------------------------------------
பி.கு: Youtube ShootMyMonkey அவர்களுக்கு நன்றி


Friday, December 18, 2009

மார்கழி மஹா உற்சவம் - 3

இது ஒரு வித்தியாசமான பாடல். அதுவும் அருணா சாய்ராம் அற்புதமாய் செய்கைகளுடன் பாடுவதைப் பார்ப்பது ஒரு சந்தோஷத்தை தரும். பல பதிவுகளுக்கு முன்னால் சொன்னதுபோல, தமிழ் பாடல்களை பாடுவதே இவர் சிறப்பு.

இதோ செஞ்சுருட்டி ராகத்தில் இவர் பாடி இருக்கும் 'விஷமக்காரக் கண்ணன்...' அருமை, கிருஷ்ண லீலைகளை பாடலில் கூறுகிறார்.

ரசியுங்கள்.....



---------------------------------------------

பி.கு: கர்னடிகோபியா, நமது யூ டியுபின் கர்னாடக சங்கீத கலெக்டர்... அத்தனைபாடல்களும் அவர் சேர்த்து வைத்துள்ளார். நன்றி கர்னடிகோபியா.


Thursday, December 17, 2009

2080

ஜூன் 20, 2080 - மின்னல் வேகத்தில் என்னைத் தாண்டி இரு வாகனங்கள் காற்றில் சென்றன. வேகம் சுமார் மூவாயிரம் கீ.மீ.

'ச்சே..என்ன வேகமா போறாங்க... காத்துல போனா இவங்கதான் ராஜான்னு நெனப்பு', எனக்கு அருகில் தோளில் பையை மாட்டி நடந்து வந்தவர் சொன்னார். அவரது உடல் வாகில் என்னைப் போல் இருந்தாலும், வயது பதிமூன்று, பதினான்குதான் இருக்கும். இதனால் அவருக்கு ப்ரோகீரியா என்று அர்த்தம் இல்லை, இந்தக் காலத்தில் அனைத்து குழந்தைகளுமே அப்படித்தான்இருக்கின்றன. ஊரில் தண்ணீர் இல்லை, ஓசோன் படலம் முழுதும் ஓட்டையாகிவிட்டது. கடல் மட்டம் அதிகமானபடியால் மக்கள் வாழும் பகுதி குறைந்துவிட்டது.

அப்படியே நடந்தபடி வீடு வந்து சேர்ந்தேன். அடுக்கு மாடியில் ஐநூற்றி ஆறாவதுமாடி. ஹெலிபேட் போல இருக்கும் ஒரு இடத்தில் நின்று 5..0..6.. என்று சொன்னால் அடுத்த நொடியில் வீட்டு வாசலில் நிற்கலாம். என்ன ஒரு விஞ்ஞான முன்னேற்றம்.

'என்ன நீங்க RPS (Radiation Protection Suit) போடாமலே போயிருக்கீங்க. நாளைக்கு ஒன்னுனா யாரு பாக்கறது?' மனைவி அக்கறையுடன் கோபத்தை காட்டினாள். என் காலத்தில் சட்டம் போட்டபோதே ஹெல்மெட் போடாமல் போன ஆள் நான். எது என்னை என்ன செய்யும். 'இல்லை, என் சூட் பழசாகுற மாதிரி இருக்கு அதான் ரொம்ப தேவைன்னா போட்டுக்கலாமேன்னு வெச்சேன்'
'சரி..சரி..எல்லாருக்கும் மாத்திரை வாங்கிட்டு வந்தீங்களா?' என்றாள் எப்போதும்போல் அதிகாரத்துடன். என்னதான் வருடங்கள் பறந்தாலும், இந்த அதிகாரம் குறையாதோ?
'என்ன மாத்திரை?' என்ன சொன்னாள் இவள், எதை நாம் விட்டு விட்டோம். இந்த தள்ளாத வயதில் நாம் வெளியில் சென்று வீடு திரும்புவதே அரிது. இதில் நாம் இதை வேறு ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமா? - 'என்ன மாத்திரைம்மா?' என்றேன் கெஞ்சலாய்.
'என்ன மாத்திரையா? TQT (Thirst Quenching Tablets) உங்ககிட்ட எத்தன தடவ சொல்லி அனுப்பினேன். அதோட விலைய வேற நாளைல இருந்து ஏத்த போறாங்களாம். ஒரு மாத்திரை ஒரு லட்சம் ரூபாய். எங்க போறது. சட்டுன்னுபோய் வாங்கிட்டு வாங்க. RPS போட்டுக்க மறக்காதீங்க' என்று அக்கறையுடன்கூறி சமயலறையில் மறைந்தாள்.
'இந்த பொம்மனாட்டிகள் இன்னும் திருந்தவே இல்லை. சமையல் செய்வது பெரியவேலையாம். சாம்பார் என்று ஒரு ரோபோட் முன்பு சொன்னால் அது செய்துகொடுக்கிறது. என்னை விடுதலை செய்துகொள்ள இந்த ரோபோட்வாங்கிக்கொடுத்திட்டேன்'

TQT, இன்று மக்கள் அனைவரும் அதற்குத்தான் அடிமை. எங்கள் காலத்தில் தண்ணீர் கேனில் வரும். இன்று தண்ணீர் என்பதே உலகில் இல்லை. தாகத்தை எப்படி தணிப்பது. அதை தவிர்க்க இதை கண்டுபிடித்த பெர்னாண்டோ பெர்லுஸ்கோனி என்பவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். இதை வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். மூளை மற்றும் நாக்கில் தாகம் ஏற்படுத்தும் நரம்புகளை இது மரத்துப்போக செய்துவிடும். எல்லார் வீட்டிலும் உள்ளே நுழைந்தவுடன் குடுக்கும் முதல் மாத்திரை இதுதான். தங்கள் குடும்பம் போக மற்றவர்களுக்குஎன வாங்குவோர் அதிகமான காரணத்தால், விலையேற்றம். என்னைப்போல கீழ்க்காட்டில் வாழும் மக்கள், அதாவது மாதம் நான்கு கோடி சம்பாதிக்கும் மகனின் நிழலில் வாழும் மக்களுக்கு, கடினம்தான்.

அது கிடைக்கும் கடை மிகவும் தூரம். இங்கிருந்து Intra Air Shuttle பிடித்துஅடையார் சென்று அங்கிருந்து Air Space Rider பிடித்து விழுப்புரம் செல்லவேண்டும். போக வர கண்டிப்பாக ஒரு மணிநேரம் ஆகும். Air Pit Stop இதுதான் அதன் நிறுத்தம். இன்றும் பிச்சைகாரர்கள் உள்ளனர். பாவம், RPS இல்லாமல் அவர்கள் உடல்களில் பல பொத்தல்கள். எல்லாருக்கும் நூறு ரூபாய் தாள்களை வீசினேன்.

IAS21 வண்டி வந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். மக்கள் அனைவரும் ஜோதியில் ஐக்கியமானார்கள். அதில் இருவர் பேசியது எனக்கு சம்மட்டியில் அடித்தது போலஇருந்தது.
'இந்த நமக்கு முன்னால இருந்த மனுஷங்க இந்த பெட்ரோல் அது இதுன்னு உபயோகிச்சு நம்மள நாசப்படுத்தீட்டாங்க'
'அது கூட பரவாயில்லீங்க தண்ணிய கூட நமக்கு மிச்சம் வைக்காம தீர்த்துடாங்க, வாயில நல்ல கெட்ட வார்த்தை வருதுங்க'

என் காலத்தில் உபயோகித்த மற்றும் இருந்த இயற்கை வளங்களை இவர்கள் திரைப்படங்களை பார்த்து தெரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் சொன்னதும் உண்மைதானே, கிட்ட இருக்கும் கடைக்கு கூட வண்டியிலதானே செல்வோம். கேட்டுக்கொண்டு, எதிர்த்து பேசமுடியாமல் உட்கார்ந்துவந்தேன்.

மாத்திரை வாங்கி வருவதற்குள் மணி ஒன்றாகி இருந்தது. எப்போதும்போல் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொன்னதற்கு எதிர்மாறாய் அதிக வெயில்அடித்து தள்ளியதில் எனது RPS பொத்தல் போட்டுவிட்டது. இதை எப்படியாவதுமகனிடம் சொல்லி வாங்கவேண்டும். எந்த காலமானாலும் பிள்ளைகள் அம்மாவின் சொல்லைத்தான் கேட்பார்கள். மனைவியிடம் சொல்லவேண்டும்.

'தம்பி, அப்பாவோட RPS பொத்தல் விழுந்துருச்சு புதுசு வாங்கி கொடுத்துட்டு, கம்பெனி- திரும்ப வாங்கிருப்பா'
'அம்மா, கம்பெனி பாலிசி மாத்திட்டாங்க. அப்பா, அம்மாவெல்லாம் கவர்பண்றதில்லம்மா. அட்ஜஸ் பணிக்க சொல்லு, அப்புறமா டீல்- வாங்குவோம்.'

இந்த மாதிரி அவன் சொல்லுவான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. மீண்டும்அந்த RPS மாட்டிக்கொண்டு கோபமாக வெளியில் சென்றேன்.
இந்த கொடுமைக்கு, அவர்கள் சொன்னது போல 2012-இல் உலகம் அழிந்திருக்கலாமே. அந்த மரணவெயில்லில் எனது உடலில் பொத்தல் மேல் பொத்தலாய் போட்டு ரத்தம் பீயிச்சிஅடித்தது.

கை, முகம் மற்றும் உடம்பை தேய்த்தவாறே நான் எழுந்தேன். இது அனைத்தும்கனவா??? மிக கொடூரமாய் இருக்கிறதே.

அன்று காலை ஆபிஸ் கிளம்பும் வரை நான் ராகினியிடம் எதுவும் பேசவில்லை.
'என்னங்க, என்ன சீக்கிரம் குளிச்சுடீங்க
, தினமும் அரைமணிநேரம் குளிப்பீங்க'
'இல்ல, சும்மாத்தான்'
'இந்தாங்க கார் சாவி...'
'இல்லமா... ஆபீஸ் இங்கதானே இருக்கு. நடந்தே போறேன்'

என்னால் வருங்காலத்தை மாற்றமுடியும் எனும்போது, மற்றவர்களால் முடியாதா. நம்பிக்கையுடன் நடந்தேன்.


மார்கழி மஹா உற்சவம் - 2

கர்னாடக இசை உலகின் இன்னொரு ஜாம்பவான் நமது பத்மஸ்ரீ யேசுதாஸ் அவர்கள். கணீர் குரலில் அனைவரையும் கட்டிப்போடும் அவரது திறமை யாருக்கு வரும். எனக்கு என்னமோ அடுத்த பாரத ரத்னா பெற தகுதியான இசையுலக கலைஞர் இவர் என தோன்றுகிறார். இந்த பாட்டை கேட்டு நீங்களும் ஒரு ஆமோதிப்பை சொல்லிவிட்டு போங்கள்.

தோடி ராகத்தில் அமைந்த 'தாயே யசோதா...'

------------------------------------------------------------------

பி.கு: SRN1000 அவர்கள் யேசுதாசின் மிகப்பெரிய ரசிகர் போல உள்ளது. யூ டியுப்பில் பல பாடல்களை upload செய்துள்ளார். நன்றி திரு. SRN1000 ஐயா.


Wednesday, December 16, 2009

குழப்பங்கள்

குழப்பம் என்பது எனது அரை டவுசர் காலம் தொட்டே என்னுடன் பயணிக்கும் என் இனிய நண்பன். காலையில் எழுந்ததும் பள்ளிக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஆரமிக்கும் குழப்பம், என்ன காரணம் சொல்லி பள்ளிக்கு மட்டம் போடலாம் என்று சிந்திக்கும் வரை தொடரும். இது சற்றே விரிவடைந்து பத்தாவது முடித்தவுடன் கணினி பாடம் எடுக்கலாமா அல்லது உயிரியல் எடுக்கலாமா என்று சென்றது. எந்த கல்லூரி என்பதில் அடுத்த குழப்பம். தேர்ந்தெடுத்த கல்லூரியில் என்ன கிளாஸ், என்பதில் மரக்கிளை போல பரந்துவிரியத் தொடங்கியது.

வேலை கிட்டியவுடன், படிக்க போகலாமா இல்லை வேலைக்கு போகலாமா என்பதில் அடுத்த குழப்பம். சரி வேலைக்கு போய் கொஞ்சம் காசு பாப்போம் என்ற முடிவுடன் போனால், java தெரியுமா, C தெரியுமா என்று அவர்கள் கேட்டகேள்வியில் மிகப்பெரிய குழப்பம். அதையெல்லாம் தாண்டி, onsite போகலாமா வேண்டாமா என்பதில் அடுத்த பிரேக். சரி, வெளிநாடு போய் பணம் பார்த்தாச்சுஅதை வைத்து படிக்க போலாம் என்று நினைக்கும் போது, MBA படிப்பதா, MS படிப்பதா என்று குழப்பம் கூடவே வந்தது. எல்லாம் முடிவு பண்ணி படிக்க வந்தாகிவிட்டது. இப்போதாவது குழப்பம் நம்மை விட்டு போகிறதா என்றுபார்த்தால் இல்லை, இன்னும் தொடர்கிறது. என்ன குழப்பம் என்றுகேட்கிறீர்களா? வரும் சனிக்கிழமை என்ன செய்வது என்று. இரண்டு மாபெரும் ஜிகினா படங்கள் வெளிவருகிறதே, எதை முதலில் பார்ப்பது என்று பெரிய குழப்பம். இதை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். வேட்டைக்காரனாஅல்லது அவதாரா... ஒரே கன்ப்யுசன்.... ஹெல்ப் ப்ளீஸ்


மார்கழி மகா உற்சவம் - 1

மார்கழி என்றாலே கச்சேரி சீசன், எல்லா சபாக்களும் நிரம்பி வழியும் காலம். இதை நமது பதிவிலும் கொண்டு வரலாமே என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தொடர் இது.

கர்னாடக இசை என்பது நமது தென்னிந்திய, குறிப்பாக நமது தமிழ்நாட்டில் மிகப் பிரசித்தம். இசை என்றவுடன் நமக்கு குயிலின் ஞாபகம்தான் வரும். அதே போல் கர்னாடக இசையென்றால் நமக்கு இந்த குயிலின் ஞாபகம்தான் வரவேண்டும். திரையிசையில் 'காற்றினிலே...' பாடலில் மக்களை கட்டிப் போட்ட அந்த குரல்தான் பின்னாளில் 'குறை ஒன்றும் இல்லை...' என்று நம் சார்பில் கண்ணனுக்கு அறிவித்தது. நமது பாரத ரத்னா திருமதி. M S அம்மா அவர்கள்.

அவர்கள் பாடிய தியாகராஜ கீர்த்தனை இந்த பதிவில். இதைத் தவிர ஏன் தியாகராஜ கீர்த்தனை அல்லாத மற்ற பாடல்களையும் இடக்கூடாதா
என அதிகம் யோசித்து பார்த்ததில், அதையும் இடலாம் என்றே தோன்றுகிறது. எனவே மற்ற பாடல்களும் வரும், திரையிசை அல்லாத மற்ற பாடல்கள்.

ராதா விஸ்வநாதன் அவர்கள் உடன் பாட, கண்டதேவி அழகிரிஸ்வாமி வயலின்வாசிக்க, குருவாயூர் திரு துரை மிருதங்கம் இசைக்க, குயில் கூவுகிறது.


இது சற்றே பெரிய பாடல்.















கண்ணை மூடி, கேட்டு மகிழுங்கள்.
-------------------------------------------------------------
பி.கு - வீடியோ-வை அளித்து உதவிய youtube நவரசனுக்கு நன்றி.


Friday, December 11, 2009

தாகம்

சுட்டெரிக்கும் வெயில், கண்ணிற்கு எட்டிய அந்த தூரத்தில் கானல் நீர் அலையாடிக் கொண்டிருந்தது. சென்னையில் கோடைக் காலம் என்றாலே இதுதானே காட்சி. இந்த வெயிலில் தன் முன்நெற்றியில் துளிர்த்த வியர்வையை கைகுட்டையில் துடைத்துக்கொண்டிருந்த அவர். வயது நாற்பதிற்கும் மேல் இருக்கும் என்பதை அவரது முன் மற்றும் பின் வழுக்கை அறிவித்துவிட்டிருந்தது. பெயர் குப்புசாமி. உப்புசாமி என்று இருக்கவேண்டும், இந்த மனித வெள்ளத்தில் தினமும் கரைந்துவிடுவதால். அனைத்து பேருந்துகளிலும் மக்கள் வெள்ளம் பேருந்தில் கையும் வெளியில் உடலுமாய் தொங்கிக்கொண்டு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்களது பயணம் இந்த வாழ்கையில் எதை நோக்கி, இந்த கேள்விக்கான பதிலை அவர்களுடன் சேர்ந்தரிய பயணப்படும் ஒரு சாதாரண மனிதர், குப்புசாமி.

அதோ வந்துவிட்டது 21L, படியிலிருந்து இறங்கிய கூட்டத்தை தாண்டி உள்ளே சென்று தன்னை அங்கிருந்த ஒரு சிறு சந்தில் பொருத்திக்கொண்டார். இளவயதில் படிக்கட்டில் பயணப்பட்ட ஜீவன்தான் அவர். இப்போது, வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மகன் முகம் மாறி மாறி வருவதால் எப்போதும் தன்னை பேருந்தினுள் பொருத்திகொள்ளும் சாதாரண குடும்பஸ்தர். அடையாரில் இருக்கும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஹெட் கிளார்க். மாதம் ஆறாயிரம் ருபாய் சம்பளம். வாங்கும் சம்பளம் வாயிக்கும் வயிற்றிற்கும் போதுமாகத்தான் இருக்கிறது, இதில் வாங்கியிருக்கும் டி.வி.எஸ் வண்டிக்கு எங்கிருந்து பெட்ரோல் போடுவது. வாய்திறக்காமல் குடும்பம் நடத்தும் மனைவி, பையன் பனிரெண்டாம் வகுப்பு, ஆஸ்துமா நோயால் அவதிப்படும் அப்பா. இந்த கதியில் போனால், என் பையனும் என்னைப் போல் ஆகிவிடுவான். கூடாது. என்ன செய்ய? இதைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் இவரது மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் பட்டிமன்றம், ஒரு பெரும் போராட்டம்.

அறிவு: படிக்கும் போது ஒழுங்கா படிச்சுருக்கலாம்.
மனம்: மனதிற்கு பட்டதைதானே அப்போது செய்தோம். என்.சி.சி மட்டும் என்.எஸ்.எஸ் என்று சமூகத்திற்க்குதானே சேவை செய்தோம்.
அறிவு: சமூகம் நமக்கு ஒன்னும் உதவி பண்ணலையே இப்போது
மனம்: எதையும் எதிர்ப்பார்த்து செய்யவில்லையே அப்போது
அறிவு: கூடப் படித்த மாணவர்களெல்லாம் கார், பங்களா என்று வசதியாய் இருக்காங்களே, இங்க சம்பளம் வரதும் தெரில போறதும் தெரிலையே
மனம்: ஒப்பிட்டு பேசக்கூடாது. கனவுகள் கொள்ளையாய் கொட்டிக் கிடக்கிறது. அதை நிஜமாக்க ஏனோ தயக்கம், குடும்பத்தை நினைத்து பயம்.
அறிவு: மனது வைத்தால் முடியும், மனதுதான் அனைத்து கோளாறுக்கும் காரணம்.
மனம்: அறிவு இருக்கிறது, அதை உபயோகப் படுத்த தெரியவில்லை. இதில் எனக்கு என்ன சம்மந்தம்.

மனம் சொன்னது, அறிவு சொன்னது இரண்டுமே நிஜம்தானே. கல்லூரியில் படிக்கும் காலத்தில் எத்தனை கனவுகள், தொழில் தொடங்க, பட்டாளத்தில் சேர என.

பாலைவனத்து நீரோடையாய்
பசித்தவன் எதிர்பார்ப்புகள்
கானல்நீர்க் கனவுகள்!

கானல்நீர் கனவுகள்தான் வாழ்க்கையோ... !!!

இந்த முறை இந்த போரட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்று அவர் நேற்றே முடிவெடுத்துவிட்டாரே. முதலாளியிடம் சம்பளம் அதிகமாக்க விண்ணப்பம். அந்த அதிக சம்பளத்தை சேர்த்து வைத்து சின்னதாய் ஒரு தொழில் தொடங்க முடிவெடுத்துள்ளார். நல்ல தீர்க்கமான முடிவு. பிறகு என்ன செய்வார், பெயர்தான் ஹெட் கிளார்க், முதலாளி சொன்னால் கணக்கு பார்ப்பது முதல் கழிவறை கழுவும் வேலை வரை செய்ய வேண்டியுள்ளது. பதினைந்து வருடங்களாக வேலை பார்த்ததில் மிஞ்சியது இவ்வளவுதான். 'இன்று கேட்டுவிடுவோம்' சரியானமுடிவு.

'அடையார் டெர்மினஸ் இறங்கு...இறங்கு...' நடத்துனர் அறிவித்தார்.

'சந்தோஷ் எக்ஸ்போர்ட்ஸ்' பெரிய பெயர்ப் பலகை. உள்ளே சென்றார். மேஜைமேல் அவரைவிட உயரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகள். லெட்ஜர்கள். சலிப்புடன் தொடங்கியது வேலை. 'எப்படி ஆரம்பிப்பது? நேரவே போய் கேட்டுரலாமா?' ஒவ்வொரு கோப்பாய் எடுத்து வைத்தபடி சிந்தனையை தட்டி விட்டார்.

'சாமி சார், முதலாளி கூப்பிடறார்', பியூன் முனுசாமி டேபிளில் டீயை டொக்கென்று வைத்துவிட்டு சொன்னான்.

'நாம் யோசித்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ, வேற என்ன விஷயமா இருக்கும். எதாவது கொடேஷன்ல தப்போ' என்று முதலாளியின் அறைக்கதவை தட்டும்முன் இவ்வளவு சிந்தனைகள் அவரது மனக்கதவை தட்டிப் போயிருந்தது. 'எக்ஸ்க்யுஸ் மீ சார்' என்றார் தயங்கியபடி.

'வாங்க மிஸ்டர் சாமி, உக்காருங்க'
'இருக்கட்டும் சார், ஏதோ வர சொன்னீங்களாமே'
'ஆமாம், குட் நியூஸ். நீங்க பண்ண கொடேஷன் மூலமா நமக்கு ஒரு கோடி ரூபாய்க்கான டீல் கிடச்சுருக்கு, ஐ யாம் வெரி க்ளாட்'
'ரொம்ப நல்லது சார்'
'உங்களுக்கு சம்பளம் ஜாஸ்தி பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன் சாமி, மாசம் ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி'
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது சாமிக்கு, 'சார், ரொம்ப நன்றி சார்' கண்ணீர் மல்க.
'அட, இதுல என்ன இருக்கு. நீங்க போங்க...'

இடத்திற்கு வந்ததில் இருந்து வேலை சூடுபிடிக்க, கதிரவன் சாய்வதற்குள் அனைத்து கோப்புக்களும் சரி பார்த்தாகிவிட்டது.

'முனுசாமி, ஐயா கேட்டா நான் வேலையெல்லாம் முடிச்சுட்டேன், கேளம்பீட்டேனு சொல்லு' என்று சந்தோஷம் பொங்க வெளிய வந்தார். இந்த பணத்தை சேத்து வெச்சு சின்னதா ஒரு மளிகைக் கடை ஆரமிக்கலாம். கமலம் வீட்டுல சும்மாத்தான இருக்கா, அவ பாத்துக்கட்டும். இல்லாட்டி லோன் அப்ளிகேஷன் போட்டு ஒரு சின்ன இன்டர்நெட் சென்டர் ஆரமிக்கலாம். கமலத்துகிட்ட இந்த விஷயத்த சொல்லணும்.

வீட்டிற்க்குள் நுழையும்போதே, அப்பாவின் இருமல் வரவேற்ப்பை வழங்கியது. கை கால்களை கழுவிக்கொண்டு வந்தவுடன், அன்பான மனைவி எப்போதும் போல டிபன் ரெடி செய்து வைத்திருந்தாள்.

'கமலம் உன்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்'
'சொல்லுங்க'
'முதலாளி என்ன இன்னிக்கு பாராட்டி சம்பளத்துல ஆயிரத்தி ஐநூறு ருபாய் ஜாஸ்தி பண்ணிருக்காரு. அத வெச்சு...'
'அப்பாடா... ரெம்ப நல்லதுங்க... நானே உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன். பையன் அரைப் பரிட்சைல வெறும் 750 மார்க் வாங்கிருக்கான். கோடி வீடு முத்தம்மா பையன் 1000 மார்க் வாங்கிருக்கான்'
'ஏன்.. இவனுக்கு என்ன குறைச்சல்... என்ன பண்ணினா துரை படிப்பாராம்?'
'அவன டியுஷன் அனுப்பனுமாம்'
'எவ்வளோ பீஸ்'
'மாசம் ஆயிரத்து ஐநூறு'
'ஓ...ஓ....'
'நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க போல இருக்கே'
'இல்ல தண்ணி கொடு... தாகத்தை போக்கிக்கணும்....'
------------------------------------------------------------------------------------------

பி.கு: கவிதைக்கு உதவிய வானம்பாடிகள் அண்ணனுக்கு நன்றி


Thursday, November 26, 2009

லீவு...லீவு...




அட... அட.. என்னடா படிக்க வந்த எடத்துல பரீட்சை எழுத சொல்றாங்க. சமூகத்துக்கு அடுத்த எட்டாம் தேதி வரை பரீட்சை இருக்கும் காரணத்தால், இரண்டு வாரங்களுக்கு ப்ளாக்க்கு லீவ் விட்டாச்சு. பொழச்சு போங்க... இதுனால நீங்க எழுதறத படிக்கமாட்டேன்னு நினைக்காதீங்க. கண்டிப்பா படிப்பேன், பின்னூட்டத்தில் கலாய்ப்பேன்... சொல்லிபோட்டேன்...

வர்ட்டா..... விடு ஜூட்ட்ட்ட்


Wednesday, November 25, 2009

எட்டு விக்கெட் இழப்பிற்கு....

ரேவதி ஆன்ட்டி வீட்டு எண்டில் இருந்து அப்பா பந்துடன் ஓடி வருகிறார். பந்தில் ஏதோ போட்டோக்கள் இருப்பது போல தெரிகிறது. விக்கெட் கீப்பராக அம்மா ஹெல்மெட் மாட்டி நின்றுள்ளார். கல்லியில் மாமாவும், பாய்ண்டில் அத்தையும், லாங்-ஆஃப் மற்றும் லாங்-ஆனில் சித்தப்பா சித்தி என அனைவரும் களத்தில் துடுப்பாட்டக் காரரை அவுட் ஆக்க தயாராக உள்ள நிலையில். துடுப்புடன் நிற்கும் எனது நண்பன் அசாதியமாக பவுன்சரை யாருமில்லாத ஸ்லிப் திசையில் தூக்கி விட்டான். பிரமாதம்!! அடுத்த பந்து வர எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகும்.

என்ன இது புது வித கமெண்ட்ரியா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. நீங்களும் இதை கடந்து வந்தவராகவோ, கடக்கப் போகிறவராகவோ இருப்பீர்கள். ஆமாம்.. இந்த 26-27 வயது வந்தாலே, பெற்றோர்கள் பிள்ளையை அவுட் ஆக்குவதில் குறியாக உள்ளனர். அதாங்க கல்யாணம். இதில் சுத்தி நம்ம சொந்தக்காரங்கா வேறு. இந்த மாதிரி பல பவுன்சர்களை சந்தித்து திக்கி திணறிக் கொண்டுள்ளனர் என் காலேஜ் மக்க. ஒரு.. ஒரு... வாரமா ஓட்டிட்டுஇருக்காங்க.

இதோ இதுவரைக்கும் ஆறு பேரு கிளீன் போல்ட் ஆகிவிட்டனர். அடுத்து ஏழு மற்றும் எட்டாவது விக்கெட் வரும் வெள்ளிக் கிழமை விழுகிறது. என்னத்த சொல்ல, சில பேரு வேணும்னே அவுட் ஆகுறாங்க. இப்போ நாம ப்ளேயர்ஸ்ல எத்தனை வகைன்னு பாப்போம்.

அடித்து ஆடுபவர்: சும்மா பந்து போடுவது யாராக இருந்தாலும், நம்ம ஷேவாக் மாதிரி அடி பின்னுவாங்க. கல்யாணம் வேணாம் நீங்க எதாவது சொன்னா அப்புறம் மரியாதை கெட்டுடும் அப்படிங்கற பசங்க. 'மச்சி.. என்னடா அப்பாகிட்ட இப்படி பேசற?' அப்படினா.. 'ஸ்ட்ராங்கா இருக்கனும்டா.. இல்லாட்டி யார்கர் போட்ருவாங்க... நம்ம வாழ்கைய நாமதான் மச்சி வாழணும்.. இதுல கல்யாணம்னு அசிங்கமா பேசிக்கிட்டு.. எனக்குன்னு லட்சியம் இருக்குடா' என்று சொல்லும் லட்சியத்தை மனைவியாக கொண்ட லட்சிய புருஷர்கள்.

நிறுத்தி ஆடுபவர்: இவர் நம்ம திராவிட் மாதிரி. எந்த பால் போட்டாலும் அவுட் ஆக்கவே முடியாது. பிட்ச்லையே பால் இருக்கும். ரன்னும் அடிக்க மாட்டாங்க, அவுட்டும் ஆகா மாட்டாங்க. 'கல்யாணம் பண்ணிக்கோடா அதான் வேல கெடச்சு நல்ல நிலைமையில இருக்க இல்ல...' என்று சொல்லும் அப்பாவிடம். 'பண்ணிக்கலாம் பா... கொஞ்ச நாள் போகட்டும்' என்று நாள் கடத்துபவர்கள்.

நைட் வாச்மன்:
இப்போது இவர் இறங்கமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருப்போம். பொசுக்கென்று இவர் இறங்கிவிடுவார், அவசர அவசரமாக அவுட் ஆகியும் விடுவார். அதுமாதிரி, இவனுக்கெல்லாம் எங்கடா இப்போ அப்படின்னு நினைக்கும்போது. சல்ல்... என்று களத்தில் இறங்கி..'மச்சி...அடுத்த மாசம் பனிரெண்டாம் தேதி கல்யாணம்' என்று சொல்லும் கும்பல்.

மேட்ச் பிக்சர்: இவர்களே அப்பாவிடம் பந்தை கொடுத்து போட சொல்லி அவுட் ஆகிறவர்கள். அதாங்க நம்ம லவ் பண்ணற பசங்க. 'வேலில போற ஓணான வேட்டில விட்டுக்கரவங்க'.

டெயில் என்டர்: இவங்க களத்துல இறங்கரத்துக்கு பதிலா, அவுட் ஆயிக்கறேன்னு ஒத்துப்பாங்க. இவங்க அப்பா பந்தே போட வேணாம்.. 'என்னப்பா..இந்த பொண்ணு.....' என்று கேள்வியை முடிப்பதற்குள் 'சரிப்பா....' என்று சொல்லும் பசங்க.

மேட்ச் ரத்து: பசங்க ஆடி அவுட் ஆகணும்னு ஆசையா இருப்பாங்க... அவங்க அப்பா, அம்மா பந்து போடமாட்டேன்னு கறாரா சொல்லிடுவாங்க. இதுனால ஆட்டம் ரத்தாயிடும்.

டிக்ளேர் செய்பவர்: சுத்தி முத்தி நிக்கும் சொந்தக் காரங்க அத்தனை பெரும் செய்கின்ற டார்ச்சர் தாங்காமல்... 'சரி... பண்ணி தொலைச்சுக்கறேன்' என்று சொல்லும் பசங்க.

அதெல்லாம் சரி... நீ எதுல எந்த ரகம்னு கேக்குறது தெரியுது. நாம களம் இறங்கினாத்தான... 'ஐயோ.. உடம்பு வலிக்குதே.. காய்ச்சல் வர மாதிரி இருக்கே' அப்படி என்று டீமில் இடம் பெறாத வீரர் போல, இதோ படிக்க ஓடி வந்துட்டோம் இல்ல. அப்படியே பசங்கலாம் எப்படி சமாளிக்கராங்கங்கரத பாத்து.. நெளிவு சுளிவுகளை கத்துக்கறேன்.

இதுல இப்பவரைக்கும், நம்ம டெயில் என்டர்கள் கல்யாணம் நடந்து வருகிறது. மேட்ச் பிக்சர்களும் தங்களால் ஆன முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர். நிறுத்தி ஆடுபவர்தான் நம்ம ஆளுங்க, நெளிவு சுளிவு சொல்லித்தராங்க. நைட் வாச்மன் எப்ப வருவாங்கன்னு தெரில.

நம்ம கிளாசுல மகளிர் டீமும் உண்டுங்க... அவங்கலாம் சரியான சொத்தை... இன்னும் ஒரு நாலு மாசத்துல ஆல் அவுட் ஆயிடுவாங்க போல இருக்கு. எல்லாருமே டெயில் என்டர்தான். இங்க பல பேரு படிக்க வராங்க. நம்ம கிளாஸ் பொண்ணுங்க பலபேருக்கு மேல படிக்கணும்னு ஆச இல்லையேன்னு நினைக்கும் போது. தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்கராங்களோன்னு எனக்கு ஒரு எண்ணம். என்ன சொல்றது? இருக்கற ரெண்டு மூணு பேராவது பாத்து ஆடின சரி.

இதோ வர வெள்ளிக்கிழமை, கிளாஸ் பசங்க ரெண்டு பேருக்கு கல்யாணம். இதோட எட்டு விக்கெட்...என்னதான் நாம கிண்டல் பண்ணினாலும். மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் என் இரு நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நம்மதான் போக முடில.... இங்க இருந்தே வாழ்த்துவோம்... 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள்'


Tuesday, November 24, 2009

மாற்றமொன்றுதான்...

வாங்க.. என்னடா இந்த க்யூல நின்னுட்டு இருக்கும் போது பொழுது போகதேன்னு நெனச்சேன் நீங்க வந்துடீங்க. நல்லது.

நான் பொறந்து ஒரு இருபத்தி ஆறு வருஷம் ஆகப் போகுது. பெரிய மாற்றங்கள பாத்த ஒரு குடுப்பினை எங்க generation-க்கு உண்டு. எல்லாத்துலயும் மாற்றம் ஒட்டு வீடுகள் இருந்த இடத்தில் பெரிய கட்டிடங்கள், TV பொட்டிகள் இன்று சப்பயாகி சுவற்றுடன் ஒட்டிகொள்கின்றன, தொலைபேசி அலைபேசியாகி இன்று அடுத்த ரூமில் இருப்பவர்கள் கூட இதில் பேசிக்கொள்ளும் கிட்டபேசி நிலைக்கு வந்து விட்டது. தெருவோர பரோட்டா கடைகள் போல இன்று அங்கிங்கெனாதபடி எல்லாப் பக்கங்களிலும் முளைத்து இருக்கும் பிட்சா கடைகள். அப்போதெல்லாம், சூப்பர் மார்கெட் செல்வது என்றாலே வீட்டில் குஷி, அத்தனை அயிட்டங்களும் ஒரே இடத்தில், இப்போது மால்கள் சூப்பர் மார்கெட்டை தூக்கி சாப்பிட்டு விட்டன. அரசாங்க வேலை என்று திரிந்து கொண்டிருந்த பலரும் , அடடா நாம இந்த காலத்துல பொறக்காம போய்ட்டோமே, இல்லாட்டி.. நாமளும் இந்த அமெரிக்க ஜப்பான்னு போய்ட்டு வந்துருக்கலாம்னு நினைக்கும் அளவுக்கு IT வளர்ந்து இருக்கிறது.

ஒரு பையன் 8000 ரூபா சம்பாதிச்சு, அம்மா-அப்பா கூட இருந்து, நல்ல பழக்கங்கள் இருந்தால் பொண்ணை கட்டிகொடுக்கும் பெற்றோர்கள் அப்போது இருந்தனர். இப்போது பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்னும் பழமொழிக்கு ஏற்ப, expected காலத்தில் MBA or MS with min 1 lakh என்று போடும் அளவிற்கு மாறி இருக்கிறோம். இத்தனையிலும் முன்னேறிய நாம், உடல் நிலையில் பெரிதும் பின்தங்கியே உள்ளோம். எங்கு திரும்பினாலும் வீசிங், ஷுகர், இரத்த அழுத்தம், இதய நோய், மன நோய் என பல வகைகளிலும் நோயாளிகளை உருவாக்கி வருகிறோம்.

அந்த காலத்தில், பானையில் சோறு பொங்குவார்கள், அதில் மேலிருக்கும் தண்ணியை வடிகட்டி விடுவார்கள். அரிசியில் இருக்கும் சர்க்கரை வடிந்து விடும். இந்த குக்கர் வந்தாலும் வந்தது, அனைத்து சர்க்கரையும் சாப்பாட்டில் தங்கி விடுவதால், அது உடலுக்குளும் சென்று அதிகப் படியான சர்க்கரையை சேர்த்து விடுகிறது. இதுதான் சுகருக்கு காரணம் என்று டாக்டர் சொல்லி கேட்டேன்.

எண்ணெயில் முங்கி முத்தெடுத்த முறுக்கு, சீடை போன்ற பதார்த்தங்கள் இன்று மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்தக் கால மக்கள் இதெல்லாம் தின்று அதற்கு தகுந்தார்ப்போல் நடந்தனர், உழைத்தனர். இங்கு உக்காந்த இடத்தில் வேலை செய்துவிட்டு வீடு வந்ததும், சீடை முறுக்கு என்று வாயில் திணித்தால் அது அதிகம் காலியாக உள்ள இதய அறைகளை நிரப்புகின்றன. இல்லாவிட்டால் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் பெரிய சொத்தாக வயிற்றில் சேர்ந்து நம்மை obese பார்டியாக்கி அபேஸ் பண்ணிவிடும்.

இரவில் ரோகியை போல் சாப்பட வேண்டும் என்பார்கள். அதாவது கம்மியாய் சாப்பிடுவது. ஏனென்றால், இரவில் தூங்கும்போது ஜீரண சக்தி கம்மியை இருக்கும். நாம் வீட்டுக்கு பொய் அம்மாவிடம் சொல்லி நல்ல ஒருகட்டு கட்டிவிட்டு, தொப் என்று சோபாவில் போய் விழுந்து TV ரிமோட்டை கையில் எடுத்தால், எங்கிருந்து வருமோ தெரியாது அப்படி ஒரு தூக்கம். அப்படியே தூங்கிவிடுவது. இதுவும் தொப்பைக்கு காரணம்.

வெண்ணையில் குளித்து வரும் பிட்சா அது ஒரே வாயில் ஒரு பீசை உள்ளே தள்ளி, அதில் உள்ள அத்தனை Cholesterol, Fat அத்தனையும் ஸ்வாகா செய்வது.கேட்டால் என்னைக்காவது ஒரு நாள் தான்னு சொல்றது, இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருந்து பாருங்கள் என்று சொல்லுவது. இது மட்டும் அல்ல, கோக் என்ற ஒன்று. அதன் பட்டியிலே அசிட் என்று போட்டுள்ளான், அதுதான் இந்த வெளிநாட்டினருக்கு தண்ணீர். கேட்டால், தண்ணீரை விட இது காசு கம்மியாம்.
இதெல்லாம் எங்கே போய் சொல்லுவது.

அதுக்கும் மேல் நமக்கு பிடித்த வேலையே செய்யாமல், பணத்துக்காக அதிக்கபடியான டென்ஷன் எல்லாரது வாழ்விலும் மிகுந்துவிட்டது. என்ன பண்ணுவது, விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறுதே. அதுவும் நாம் மேற்சொன்ன விஷயங்களும் ஒரு மனிதனை அதிகப்படியான இதய நோய்க்கு அழைத்து செல்லுவதாக கேள்வி.

ஏதோ ஒரு வலையில் படித்த ஞாபகம், வெளிநாட்டினர்தான் எண்ணெய் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுகிறார்களாம். ஆனால், நம்மக்கள்தான் அதிகம் இதய நோயில் பாதிக்க பட்டுள்ளனர். அவர்கள் உபயோகிப்பது ஆலிவ் எண்ணெய், நாம் அதை முகத்திற்கு பயன்படுத்துவதோடு சரி.

'ஆர்டர் ப்ளீஸ்' அந்த கவுன்ட்டர் பெண்மணி அழைத்தாள்.

'இருங்க போய்ட்டு வரேன்'

'One medium cheese pizza with extra jalapeno toppings with large coke'...திரும்பி வந்தேன்.

ம்ம்ம்ம்.. நாம எத பத்தி பேசிட்டு இருந்தோம்,ஹ்ஹஹ்ன்ன்ன் ... மாற்றத்த பத்தி இல்ல...ஆனா, சில சமயங்கள்ல நாம மாறித்தான் ஆகவேண்டி இருக்கு...

என்ன முறைக்குறீங்க வெளிநாட்டுல இருந்து பாருங்க தெரியும் கஷ்டம்.


Sunday, November 22, 2009

முதல் என்றாலே சந்தோஷம்தான்

முதல் என்ற வார்த்தை பல தருணங்களில் சந்தோஷத்தையே குறிக்கிறது. முதல் நட்பு, முதல் காதல், முதல் ஸ்பரிசம், முதல் முத்தம், முதல் கவிதை, முதல் ரேங்க், முதல்...

இப்படி முதல் எப்போதும் முதல்தான். என்னதான் பலர் பல சாதனை செய்தாலும், நாம் அதை முதல் முறை செய்யும் போது அது ஒரு தனி இன்பம்தான். அந்த வகையில் நேற்று எனது வலைப்பூவில் நடந்த ஒரு நிகழ்வு எனக்கு முதல். பல ஜாம்பவான்களுக்கு நடுவே, என்ன நம்மால் முடியுமா என்று தொடங்கி, இன்று இந்த அளவில் வந்து நிற்கிறேன்.பிளாக்கர் என்ற ஒரு ஊடகம் இல்லாமல் என்னைப் போன்ற debut players இவ்வளவு சீக்கிரம் இந்த நிலைமையை அடைய முடியுமா என்றால் சந்தேகம்தான்.இன்று எனது நட்பு வட்டம் பதிவர்கள் என்னும் புதியவர்களால் விரிவடைந்து வருகிறது. அவர்களை நான் பார்த்தது இல்லை, பலமுறை gtalk-இல் சேட்டியது மட்டும்தான்.

அடுத்து, தமிழ்மணம் மற்றும் தமிலீஷ் போன்ற பதிவர் catalog-களில் எனது பதிவை இணைத்த பிறகுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, யார் எவர் என்று தெரியாமல் உலகின் பல மூலைகளில் இருந்து எனது பதிவை படிக்க வாசகர்கள் வந்தனர். ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல, உகாண்டா, பெரு என நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் படித்தனர். ரசித்தனரா என்பது தெரியவில்லை, ஆனால் படித்தனர்.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் ஆரமித்து, மக்கள் பின்னூட்டம் இடுவார்களா என்று தினமும் பார்த்து தோற்று, பல வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுதினால் என்ன என்று நான் தொடங்கினேன். என்னை பலசமயம் ஊக்குவிப்பது, எனது கல்லூரி மற்றும் முன்னாள் கம்பெனி நண்பர்கள்தான்.அவர்களுக்கு எனது அடுத்த நன்றிகள். Controversial விஷயங்களை பற்றி எழுதினால் மக்கள் வருவார்கள் என்ற எனது நம்பிக்கை பலசமயம் பொய்த்து போனதுண்டு. மொக்கை போட்டால் கல்லா கட்டிவிடும் என்ற எனது கனவு நீர்த்து போனது. உருப்படியா எழுதினால் மட்டுமே தேற முடியும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்ததும் எனது நண்பன். அவனுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ஒரு பதிவை போட்டுவிட்டு, அடுத்த நாள் காலை மறுபடியும் வந்து எவராவது புதிதாக follow செய்கிறார்களா என்று பார்த்து ஏமாந்ததுண்டு. பின்னர், இப்போதான தொடங்கியிருக்கோம் மெதுவாத்தான் வரும் என்று மனதை தேற்றிகொள்ளுவேன். சதம் அடிக்க கூட ஒரு ரன்னில் இருந்துதானே தொடங்க வேண்டும். தொடங்கியிருக்கிறேன், தொடர்ந்து கவனிப்போம்.

அது சரி, இந்த பதிவு எதற்கு, எது எனக்கு முதல் என்று யோசிப்பது தெரிகிறது. நேற்று, பெரு நாட்டில் இருந்து வந்த வாசகரால், அண்டார்டிக்கா தவிர மீதம் உள்ள ஆறு கண்டத்தில் இருந்தும் நம் ஜிகர்தண்டாவிற்கு வாசகர்கள் வந்துள்ளனர். உகாண்டாவில் இருந்து வந்தவர், ஆப்பிரிக்காவிற்கு அட்டன்டன்ஸ் போட்டார். மற்ற கண்டங்களிலிருந்து பல வாசகர்கள் வந்து சென்றுள்ளனர். இதெல்லாம் களத்தில் இருக்கும் பல பதிவர்களுக்கு ஜுஜுபி விஷயம் என்றாலும் நமக்கு முதல் இல்லையா...முதல் என்றாலே சந்தோஷம்தான்.


Saturday, November 21, 2009

இசை தேர்வு நேரம்

என்ன பசங்களா, எல்லாரும் பரீட்சைக்கு ரெடியா?

என்னதான் பெரிய ஆளுங்கள வரணும்னு நம்ம தலைல எழுதியிருந்தாலும், முதல் படிகள் சறுக்கத்தான் செய்யும். இதுக்குதான் தோல்வியே வெற்றியின் முதல் படின்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.சரி, இப்போ கொஸ்டின் என்னன்னா, கீழ இருக்கற பாட்ட கேளுங்க.




உடனே, பதில் உன்னிக்ருஷ்ணன், நித்யஸ்ரீ அப்படின்னு டைப் பண்ண பின்னூட்டதிற்கு போகாதீங்க. கேள்வி அது இல்ல. இந்த பாட்டோட கம்போசர் யாரு. இது எந்த ஆல்பம் அல்லது படத்துல வந்தது. 'கம் ஆன்... யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்'. பதில் விரைவில்.

க்ளூ: இது செம ப்ளாப் ஆகிருச்சு.


பகீர் சித்தர்

ஒரு வாரத்திற்கு முன்பு பகீர் சித்தர் என்று நமது இட்லிவடை ஒரு பதிவிட்டிருந்தார். அதை படித்ததும், நிஜமாகவே சற்று பகீர் என்றுதான் இருந்தது.
ஆனால் நமது அராய்ச்சி சிகாமணி நியூட்டன் 'For every action, there is an equal and opposite reaction' என்று நினைவிற்கு வர, இந்த பகீரை போக்க சிரிக்கலாம் என்று யூடுப் வந்து விவேக் காமெடி என்று தேடினேன். எது வந்தது என்று நீங்களே பாருங்கள்.



வாழ்கை என்னும் வண்டியே நம்பிக்கை என்னும் அச்சாணியில்தான் ஓடிக்கொண்டுள்ளது. இதில் இப்படி அச்சாணிக்கே ஆப்பு வைக்கும் பதிவுகளை படித்தால் மனம் சற்று பதறத்தான் செய்கிறது. ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான். 2012 எல்லாரும் போய்விடுவோம் என்று, போகிற காலத்தில் புண்ணியம் தேட அனைவருக்கும் உதவும் மனம் எல்லோருக்கும் வரலாம் அல்லவா. அந்த விதத்தில் மட்டும் இது உண்மையாக இருந்தால் நல்லது. :)


Saturday, November 14, 2009

கனவு மெய்ப்படவேண்டும்!!!

'என்னனே தெரில இன்னிக்குனு பாத்து இப்படி மழை கொட்டுது' என்று தன் மனதிற்குள் மழையை சபித்தபடி நின்றிருந்தான் மகேஷ். சரியான நேரத்துக்கு ரயில் வராத கோபத்தை மழையின் மீது காட்டி என்ன பயன்.

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ' அந்த ஆட்டோமாடிக் குரல் ரயில் வந்துகொண்டிருக்கிறது என்று பதினாலாவது முறை கூறியது. 'அது சரி!!! நாமளே எப்பயாவது ஊருக்கு போறோம்... நம்மளுக்கு இப்படியா....' என்று கனிவான கவனத்தை திசை திருப்பிக்கொண்டு நின்றான்.

'கூஊஊஊஉ........' பெரும் ஊளையுடன் வந்தது நீலகிரி வண்டி. அங்கு இங்கு என்று தேடிக்கண்டுபிடித்து S-8 அப்பர் பெர்த், நிம்மதி பெருமூச்சுடன், பையை அங்கு வைத்தான்.

மகேஷ், கோவை P.S.G கல்லூரியில் நான்காம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவன். பிறந்தது படித்தது சென்னப்பட்டினத்தில், அம்மாவும் அப்பாவும் USA சென்றதால், கோவையில் கல்லூரிப் படிப்பு. சென்னை போக்குவரத்து அறவே துண்டிக்கப் பட்டது. இப்போது நண்பர்கள்தான் அவன் உறுதுணை, விடுமுறையில் பாதி நாள் நண்பர்கள் வீட்டில் ஓடிவிடும். படித்து முடித்ததும் அப்பா அங்கு வந்து MS பண்ணுமாறு கட்டளை போட்டுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யவே இந்த சென்னை பயணம்.

ஒருவழியாக ரயில் புறப்பட்டது, சொன்ன நேரத்தில்- ஒரு மணி நேரம் தள்ளிப் புறப்படும் என்று சொன்னார்கள். அப்பர் பெர்த்தில் செட்டில் ஆகி, சொத சொத துணியை லேசாக கைகுட்டையில் துடைத்துக் கொண்டான். சடார் என்று ஞாபகம் வந்தவனாய், தனது புதிய மாடல் 1100 போனில் தண்ணீர் போய் விட்டதா என்று நோக்கினான். நல்ல வேளையாக போகவில்லை, மிகவும் உயர் க்வாலிட்டி போன்....

'போன் எடுத்தவன் கையும்.... பேன் இருப்பவன் தலையும் சும்மா இருக்காது...', எப்போதும் போல் கடலை போடலாம் என்று சில நம்பர்களை அமுக்கி... காதில் வைத்தான்... எதிர்முனையில் 'ட்ரிங்... ட்ரிங்...' பிறகு 'ஹலோ...'

'ஹே மாமி...' ஐயர் பொண்ணுங்களை அப்படி கூப்பிடுவதுதான் வழக்கம், அவனுக்கு.

கீழே நின்று கொண்டிருந்த மாமி... 'என்னப்பா....' என்று மேலே பார்த்தார்.

'ஹோ..சாரி... போன்-ல...' என்று அசடு வழிந்தான். ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்துவிட்டு அந்த ட்ரைன் மாமி திரும்பிக்கொண்டார்.

'வெல்... யூ நோ... நான் அமெரிக்க போய்...' என்று ஆரமித்து... 'பை மாமி' என்று சொல்லி போனை வைக்க ஆனா இடைப்பட்ட நேரம் ஒரு மணி நேரம். அதற்குள் திருப்பூரை தொட்டுவிட்டது வண்டி. மணி பத்து.

தினமும் பனிரெண்டு மணிக்கு தூங்கிய அவனுக்கு, தூக்கம் வர இலகுவாக இருக்கும் என்று அறிவாளித்தனமாக 'இந்தியா 2020' என்று Dr. அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை எடுத்து வைத்தான். சரியாக கண்ணைக்கட்டிக் கொண்டுவரும் வேளையில்,

'எக்ஸ்க்யுஸ் மீ...' என்று ஒருவர் காலைத்தட்டினார்.

விடுதி ஞாபகத்தில் 'எவண்டா அவன்!!!' என்று எழுந்தவனை. 'நான் திருப்பூர்ல ஏறினேன். நான் கொஞ்சம் ஒசரம் நீங்க லோவர் பெர்த் எடுத்துக்கறீங்களா?' என்றார்.

தூங்கரதுல உசரம் என்ன குள்ளம் என்னையா என்று மனதில் நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான்.

மறுபடியும் 'இந்தியா 2020', தூக்கம் வர.... மறுபடியும் யாரோ காலை தடவினார்கள். 'ஷிட்....' என்று எழுந்து பார்த்தான். ஒரு சிறுவன் சட்டை போடாமல் கையில் இருந்த துணியால் ஈரமாகி இருந்த தடத்தை சுத்தம் செய்துவிட்டு காசு கேட்டான். இருந்த கோபத்தில் 'காசெல்லாம் இல்ல போப்பா... உன்ன யாரு சுத்தம் பண்ண சொன்னா....' என்று கத்திவிட்டான்.

சிறிது நேரம், தான் அப்படி கத்தியது சரியா தவறா என்று புரியாமலும், புத்தகத்தில் மனம் செல்லாமலும் கனா கண்டுகொண்டிருந்தான். புரண்டு படுத்தபடி தூங்கியும் போனான்.

மணி ஒரு இரண்டு இருக்கும், எழுந்து பாத்ரூம் செல்லலாம் என்று எழுந்தவனை கடந்து ஒரு சிறுவன் ஓடினான். அதே சிறுவன்...ஆனால் சட்டை.... எப்படி... அவன் தடத்தை துடைத்த துணி... அவன் மனதை ஏதோ போட்டு அழுத்துவது போல இருந்தது.

மீண்டும் வந்து படுத்தவனை தூக்கம் அணைக்கவில்லை. இரவு முழுவதும் ஒரே யோசனை... 'என்ன செய்யலாம்?.. உலகில் இன்னும் பலர், குழந்தைகள் மிகவும் அடித்தட்டில் இருக்கிறாகளே, தன்னால் ஏதாவது செய்ய முடியுமா? என்ன செய்ய முடியும்... நான் ஒரு சாதாரண மனிதன்... மனபலம் இருக்கலாம், பணபலம் வேண்டுமே. என்ன செய்வது? ஏது செய்வது?' என்று பலத்த சிந்தனையில் ஆழ்ந்து திரும்பி படுத்தவன் பார்வையில் 'இந்தியா 2020' பட்டது. Dr. அப்துல் கலாம், கனவு காண் என்று சொன்னது அவனது நினைவிற்கு வந்தது. அதில் ஒரு முடிவும் வந்தது.

காலை ஆறு மணி, நீலகிரி விரைவு வண்டி சென்னை சென்ட்ரலை அடைந்தது. உடனே தனது உயர் ரக போனை எடுத்து நண்பனுக்கு அலைபேசினான்.

'மச்சி... பிளான் மாத்திட்டேன்டா... சீரியஸ் மேட்டர் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் நேர்ல வந்து சொல்றேன்...' என்று துண்டித்தான்... அலைபேசி இணைப்பை...

தொடங்கினான் கனவு காண....

(இதில் பாதி கதை எனது நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்)


Tuesday, November 10, 2009

அழகு

அழகு என்றாலே அவள்தானே என்று அவனுக்குத் தோன்றியது.

பெண்ணின் முகத்தை நிலவுடன் ஒப்பிட்டு அழகு என்று கூறுவார்கள். நிலவு என்ன அவ்வளவு அழகா? அங்கங்கே கருப்படித்து. இல்லை.. இல்லை... இனி ஒரு விதி செய்வோம், அழகென்றால் அவள் முகத்துடன்தான் ஒப்பிடவேண்டும். அங்கே பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியரை ஜன்னலின் வழியே பார்த்தபோது, அவள் சிரிக்கையில் அவளின் கன்னக் குழியில் பல்லாங்குழி விளையாடலாமே என்ற யோசனை அவனுக்கு உதித்தது.

வெண்ணிற முத்துகள் அவள் பற்கள் போல இருக்கும். கண்களினால் அனைவரையும் தன்பால் இழுத்து விடுவாளே, கள்ளி. அவளருகே செல்லுவதையே கர்பக்ரகதினுள் செல்லும் பக்தன் போல பெருமையாய் நினைக்கும் கூட்டத்தின் நடுவே, அன்று என்னருகில் பேருந்தில் அமர்ந்தாலே. என்ன வாசனை பவுடர் போட்டிருந்தாள், நானும் கடையில் விற்கும் அனைத்து பவுடர்-உம் வாங்கிப் பார்த்துவிட்டேனே. ஒரு வேலை பாண்டிய மன்னனின் சந்தேகம் போல பெண்களின் உடலுக்கும் எதாவது வாசம் உண்டா?

சுண்டினால் ரத்தம் வருமாமே அந்த வெள்ளைக் காரர்களுக்கு, வரச்சொல்லுங்கள் பாப்போம். இவளுக்கு சுண்டுவோம் என்ற எண்ணம் எழுந்தாலே ரத்தம் வருமே. சில்லறையை கொட்டியது போல சிரிப்பது அழகாம். சில்லறையை கொட்டி பாருங்கள் தெரியும் அதன் நாராசம். சத்தம் இல்லாமல் இவள் வடிக்கும் புன்னகையைப் ரசிக்க நான் முன்னூறு வருடம் தவம் கிடக்க தயார்.

அன்று மழையில் நனைந்து வந்த அவளின் கார்மேக கூந்தலில் இருந்து சொட்டிய துளிகள், மழையினுள் மழையாகவே தெரிந்ததே. ஒளியிலே தெரிந்த தேவதையில்லை இவள், இருளில் ஒளி தருகின்ற தேவதை.

'ஓகே பசங்களா, என்ன அழக பத்தி எழுதீட்டீங்களா? நேரம் முடிஞ்சது, பேப்பர் குடுங்க' என்ற ஆசிரியரிடம் தான் யோசித்த அனைத்தையும் எழுதாமல் வெறும் பேப்பரை கொடுத்துவிட்டு அவளை நோக்கினான், கவிதை எழுதிய மகிழ்வோடு.


Saturday, November 07, 2009

துள்ளித் திரிந்த காலம்

இதோ அவன் தனியாக தெருவில் நடந்து கொண்டிருந்தான், நினைவுகளை அசைபோட்ட படி. இந்த அமெரிக்கத் ரோடுகள், பலமாடிக் கட்டிடங்கள் அனைத்தும் இவனுக்கு ஏனோ இன்று புதிதாக தோன்றியது. இரவு தோன்றிய கனவு காரணமா? கனவா, இல்லை இல்லை அது அவன் வாழ்வில் முன்னாட்களில் நடந்த உண்மையே இல்லையா, பிறகு எப்படி அது கனவாகும். கனவில் அவன் கல்லூரிக்கு சென்றிருந்தான், சுற்றிப்பார்க்க. நினைவுகள், கல்லெறிந்த நீர்நிலையைப் போல் அலையோட ஆரமித்தது.

கல்லூரிக்கு வந்தபோதும் இப்படித்தானே இருந்தது அவனுக்கு, நட்பு என்றால் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் மட்டுமே அறிந்த அவனுக்கு, கல்லூரிக்கு வரும்போது என்ன தெரிந்திருக்க முடியும். ஆனால் அந்த நாலு வருடத்தில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்னும் அளவிற்கு அவனது நண்பர்கள் மற்றும் நட்பு வளர்ந்தது.

நட்பு மட்டுமல்ல, சில எதிரிகளும் இருந்தனர் அப்போது. தனக்கு பிடித்த பெண்ணைப் பற்றி இழிவாய் பேசிய நண்பர்களுடன் அவன் சண்டை போட்ட நாட்கள், இரு வாரங்கள் அவர்களை முறைத்துக் கொண்டு சென்றது. பின்னர் அவர்களிடமே, மச்சான் சாரி டா என்று கூடியது. ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று ப்ரோபசரிடம் பர்மிஷன் வாங்கி திருட்டுத்தனமாய் சினிமா சென்ற நாட்களும் அவன் நினைவில் நிழலாடின. அவன் கல்லூரி வாழ்கையில் அவன் பாதி நேரம் செலவு செய்த அந்த கான்டீன் மரத்தடி இன்று சற்றே மாற்றியமைக்க பட்டுள்ளது, மரத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால். அங்கு அவன் நண்பர்களுடன் ஜூனியர் பசங்களை கூப்பிட்டு ஷார்ஜா வாங்கிக்குடித்த ருசி நாவில் தங்கிவிட்டது. ருசித்துக் கொண்டான்.

ஏனோ அவனது கல்லூரி வாழ்கை அவனை சினிமாவின் பக்கம் இழுத்தது, நடிகனாய் அல்ல, ரசிகனாய். நேரம் கிடைத்தால் சினிமா, புதுப் படம் வந்தால் சினிமா, பரீட்சைக்கு நடுவிலும் சினிமா. ஒரு வேளை இதுதான் சினிமா பைத்தியமோ, இருக்காது. அதற்கும் காரணம் சுற்றியிருந்த நண்பர்கள்தான். பள்ளிநாட்களில் சினிமா என்றாலே ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்றிருந்தவனை மாற்றியவர்கள் அவர்கள்தானே.

திடீரென்று தோன்றினால் கூட்டமாய் கிளம்பிவிடுவார்களே, தாபாவிற்கு. விடுதியின் ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமிற்கு செய்தி பாயும். 'மச்சான், நாலு ரொட்டி, ஒரு முட்டை மசால்' என்று ஒருவன் வந்து ஆர்டர் சொல்லிவிட்டு போவான். காசு, நட்பில் காசு என்ன பெரிய விஷயம், அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை அப்போது. இப்போது இருபது ரூபாய் செலவு செய்தால், 'மச்சி இந்தா பார்சல், ட்வென்டி ருபீஸ்' என்று சொல்லுகிறோம்.பணம் பெரிதாகிவிட்டதோ. தாபாவில் இருந்து வரும் வழியில் தர்பூசணி பழக கடை, அட அந்த கடைக்காரர் 'வாரம் ஒரு முறை வந்துட்டு போங்க' என்று சொல்லும் அளவிற்கு சாப்பிட்ட நாட்கள்.

வெளியே தங்கி இருந்த நாட்களில், காரை கொண்டுவந்து போட்ட ஆட்டங்கள். நண்பன் ஒருவன் சாதாரண கடைகளில் சாப்பிடாமல், 'டேய், கொஞ்ச நாள் தாண்டா, வா சிக்கன் சம்பூர்ணா போவோம்... AP உனக்கு அங்க fried rice வாங்கிக்கோ' என்று அவனையும் சமாதானப் படுத்துவான். தினம் காலை நேவி பேக்கரியில் சூரியன் fm கேட்டு பேருந்திற்கு காத்திருந்தது எல்லாம் அவன் நினைவில் வந்து செல்ல, கண்ணீர் துளிர்த்தது. பேருந்தை கோட்டை விட்ட நாட்களில் நண்பனின் CBZ-யுடன் தனது சன்னி வண்டியை போட்டி போட்டு ஓட்டிச்சென்றதும் அவன் நினைவில் ஒரு வெள்ளோட்டம் ஒட்டி சென்றது.

டீ குடிக்க கடைக்கு போவார்கள், ஆனால் ஈரோடு போய் அங்கிருந்து வண்டி எடுத்து கோபி போய்... கொடிவேரியில் குளித்து, சத்தியமங்கலம் போய்.. அடிவாரத்தில் சாமியை கும்பிட்டு, வீரப்பன் கோட்டையை இருந்த தாளவாடி சென்று டீ குடித்த கிறுக்கர்கள் இவர்களாகத்தான் இருக்கும். அதே போல் இன்னொரு முறை காலை எழுந்து டீ கொடுக்க போலாம் என்று கூறிய நண்பனை மதியம் ஒரு மணி வரை காத்திருக்க செய்து வண்டிகளை ஏற்பாடு செய்து, பின்பு ஊட்டிக்கு வண்டியில் சென்றவர்கள் இவர்கள்தான், டீ குடிக்க. பின்னர் திரும்பி வருகையில், குளிர் தாங்காமல் ஆயிரம் ரூபாய்க்கு ஸ்வெட்டர் வாங்கியது தனிக்கதை....

இதையெல்லாம் தனது நடைப்பயணத்தில் சிந்தித்த அவன், தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்களது நம்பர்களைத் தட்டினான்....

ஒரு ரிங்... இரண்டாவது ரிங்....

'you have reached the voice message box of........'

கனவுடன் நிறுத்தி இருக்கலாமோ என்று அவன் மனம் எண்ணத் தொடங்கியது.


Friday, November 06, 2009

எனக்குப் பிடித்த ப்ரபோசல்

ப்ரபோசல் என்ற வார்த்தையை கேட்டவுடன் கல்லூரி நாட்களில் காதலை சொல்வதும், வேலை செய்யும் நாட்களில், மன்னிக்கவும் வேலைக்கு சென்ற நாட்களில் புதிய ப்ராஜெக்டிற்கு ப்ரபோசல் ரெடி பண்ணுவதும் ஞாபகம் வரும். ஆனால் இந்த இரண்டு நேரங்களிலும் எனக்கு கூடவே நினைவிற்கு வரும் ஒரு காட்சி கீழே உள்ளது.

மணிரத்னம் இயக்கம், இளையராஜாவின் இசை, கார்த்திக் - ரேவதியின் நடிப்பு. இதற்கு மேல் என்ன வேண்டும்.



பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.


கல்லூரி வாழ்கை-2

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல 'செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்' (குறளில் பிழை இருந்தால் மன்னிக்கவும்) அது போலத்தான் நமது இரண்டாவது வகுப்பு. சரியாக இரண்டு மணிக்கு தொடங்கும் அதுவும் திங்கட்கிழமைதான். முதலில் நமது அக்கவுண்டிங் வகுப்பு முடிந்து எதாவது சாப்பிடலாம் என்று நினைப்பதற்குள் இந்த வகுப்பு தொடங்கி விடும்.

இது organisational behaviour, இப்படித்தான் நான் இங்கிலாந்து முறைப்படி எழுதினேன். ஆனால் அதை அமெரிக்க முறைப்படி organizational behavior என்று எழுத வேண்டுமாம். சரி பழகிக் கொள்கிறேன். முதலில் OB என்றால் என்ன, ஒரு நிறுவனத்தில் பணிசெய்யும் மக்களை எப்படி நிர்வகிப்பது, ஊக்கப்படுத்துவது, எப்படி தலைமை பண்பை வெளிப்படுத்துவது போன்றவைகளை நமக்கு சொல்லித்தரும் ஒரு வகுப்பு.

இதை நமக்கு சொல்லிதருபவர் Dr. Geisler, இவர் நாசா, அமெரிக்க பாதுகாப்புத்துறை போன்ற பல பெரிய நிறுவனங்களில் consultant- ஆக பணிபுரிந்துள்ளார், புரிந்துகொண்டுள்ளார். இவ்வாறு பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களால் என்ன நன்மை என்றால், அவர்கள் நடத்தும் போது அந்த பாடத்திற்கு ஏற்றவாறு தங்கள் அனுபவத்தில் நடந்ததையும், அதற்கு அவர்கள் எடுத்த முடிவையும் சுட்டிக்காட்டி நடத்துவார்கள். இது நமது இந்திய கல்வி முறையில் இல்லை. இதை நாம் வளர்க்க வேண்டும், வெறும் புத்தகத்தில் இருப்பதை சொல்லித்தர ஆசிரியர்கள் தேவை இல்லை என்பது எனது கருத்து.

அடுத்தது, இவரது வகுப்பில் தேர்வு கிடையாது. 'என்ன பரீட்சை இல்லாம என்னத்துக்கு படிச்சுகிட்டு' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இவர் மூன்று கேஸ்களும், ஒரு ப்ராஜெக்டையும் வைத்து நமக்கு மதிப்பெண்கள் வழங்குவார். அது எனக்கு புதியது, அதிலும் இது அனைத்தும் ஒரு டீமுடன் செய்யவேண்டும். எனக்கென்னவோ இது சரியான முறையாகப்படுகிறது. ஏனெனில், நாம் வேலைசெய்யப் போகும் இடங்களில் இப்படித்தான் இருக்கப் போகிறது.

மூன்றாவது கேஸ் அடுத்த வாரம் சப்மிட் செய்யவேண்டும். அதற்கு ஒரு புத்தகத்தை படித்து, ஒரு கேள்விக்கு பதில் எழுத வேண்டும். கஷ்டம்தான்!!!

நாங்கள் எடுத்திருக்கும் ப்ராஜக்ட், இந்த பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் ஆட்டோமொபில் நிறுவனத்தில் அவர்களது பணியாளர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதை பற்றி ஒரு கருத்துகணிப்பும் அதைப்பற்றி ஒரு ரிபோர்ட் தயார் செய்யவேண்டும்.

இதெல்லாம் இந்த வகுப்பில் பிடித்த விஷயங்கள். பிடிக்காதது என்னவென்றால், இவர் வகுப்பில் சில பி.பி.டி-களை வைத்து நடத்துவார். அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டார், மற்றும் நாங்கள் நோட்ஸ் எடுப்பதற்குள் அடுத்த ஸ்லைடிர்க்கு சென்று விடுவார்.

இவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள,
http://www.stuart.iit.edu/about/faculty/eliezer_geisler.shtml


Monday, November 02, 2009

நமது அடுத்த பதிவு!!!

.... ஆஹா என்ன இப்படி இருக்கு....
.... ஹ்ம்ம்... கரெக்ட் அப்படிதான்....

நமது அடுத்த பதிவுக்கு trailer இது.... அடுத்த பதிவு கல்லூரி வாழ்கை பகுதி - 2..

நாளை சந்திக்கும் வரை வணக்கம் உறவுகளே....


வேலைய பாருங்கப்பா!!!

இது கொஞ்சம் controversial topic-தான் இருந்தாலும் நம்ம மனசுல பட்டத சொல்வோம். யாரு மனசும் புண் படாத வரைக்கும் நல்லது. யாரோ சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன், 'உனது சுதந்திரம் உன் கையை ஓங்கும் வரையில்தான்' அப்படினு. ஆனா இத பல பேரு புரிஞ்சுக்காம பேசறதும் எழுதறதும் அவர்களது குறுகிய பார்வையைத்தான் காட்டுகிறது. அது சரி எனது பார்வை சரியா? அது நீங்கதான் சொல்லணும். என்னடா சங்கத்துல திடீர்னு சீரியஸ்-அ பேசறாங்களே அப்படின்னு யாரும் நினைக்க வேண்டாம். இரவுன்னு இருந்தா பகல்ன்னு ஒன்னு வேணும் இல்ல.. அதுக்குதான் இந்த டிபரன்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------

நானும் கொஞ்ச நாளாவே சில வலைப்பதிவுகளை படித்து வந்தேன். (அதன் பெயரை சொல்லி, அவர்களுக்கு வீண் விளம்பரத்தை ஏற்படுத்த விரும்பவில்லை). அவர்கள் பெரியாரின் வாரிசுகள். யாருடைய வாரிசாய் இருந்தால் நமக்கென்ன, நாம் பார்க்க போவது அவர்கள் எழுதுவதைத்தான். கருத்துக்களை சொல்லுகிறேன் என்ற போக்கில் அவர்கள் எப்போதும் ஒரே சமூகத்தை சாடுவது சரியா.

அது சரி நம்ம அமைதியா பேசினது போதும், இப்போ இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆவோம்.

எனக்கு தெரிஞ்சு பெரியார் பகுத்து அறியணும் அப்படினு சொல்லிருகார். எனக்கு சொல்லியவர்கள் பகுத்தறிவை புகட்டும் போது அவர்கள் பார்பன எதிர்ப்பை அதில் sub-set போல கொண்டிருந்தனர் என்றனர். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, பார்பன எதிர்ப்பிற்கு அவர்கள் போர்த்தியிருக்கும் போர்வை பகுத்தறிவு என்று.

இதில் ஒருவர் சொல்லுகிறார், மனைவி கணவனை 'அண்ணா' என்று கூப்பிடுவது எந்த சமூகத்திலும் இல்லாதது என்று. 'எவன் வீட்டுல எவன் பொண்டாட்டி எவன எப்படி கூப்பிடராங்கரத' பாக்கறதுதான் இவர்கள் வேலையோ என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் காலத்தில் பாதி பேரு கணவனை 'போடா... வாடா...' என்று பேசுகிறார்களே, இதெல்லாம் அவங்க காதுல 'இன்ப தேனாய்' விழுகின்றது போல.

அடுத்து, பிராமணர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லவதால் அவர்களுக்கென்று ஒரு கல்லூரி கட்டிக்கொண்டு அதில் போய் படிக்க வேண்டுமாம். இவரு பெரிய கல்வி மந்திரி ஐடியா குடுக்கிறாராம். இதே இவர்களது செய்திகளை பிராமண ஆதிக்க ஊடகங்கள் ஒளிபரப்பவும், எழுதவும் செய்வதில்லை என்று கதறுகின்றனர். இதையே இவர்களுக்கும் சொல்லலாம் இல்லையா? வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஊடகத்தை தொடங்குங்கள், எத்தனை பேர் பார்கிறார்கள் என்று பாப்போம்.

மூன்றாவது, திராவிடர்களும் ஆரியர்களும் ஒன்று சேர மாட்டார்கள் என்றும், பிராமணர்கள் அப்படி சொல்லிக்கொண்டு இருந்தாலும் அப்படி ஒருபோதும் நடக்காது என்கிறார் நம்ம ஆசாமி. எனது நண்பர்களில் பிராமணர்களை விட, மற்ற சமூகத்தினர்தான் அதிகம். (இதை படிக்கும் நண்பர்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம், சில விஷயங்களை தெளிவுபடுத்த இதை சொல்லியாக வேண்டியுள்ளது) எனவே ஏதோ சில விஷயங்களை மேம்போக்காக பார்த்துவிட்டு சும்மா சொல்லக்கூடாது. அது சரி, ஒன்று சேரமாட்டாங்க அப்படின்னு சொல்ல இவங்க யாரு.

நாலாவது, ஒருவர் சொல்லுகிறார், அவரது நாளிதழ் வேலையில் பிராமண ஆதிக்கத்தால் அவரு வெளிய வந்தாராம். அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் முன்னாடியே ப்ளாக் செய்ய ஆரமித்து அதிலும் பிராமண ஆதிக்கத்தால் அவரால் சோபிக்க முடிலயாம். உட்டா அவர் வீட்டுல பல்பு எரியலேனா உடனே பிராமண சமூகம்தான் காரணம்னு சொல்லுவாரு போல இருக்கு. ப்ளாக் என்பது நம்ம கைல இருக்கும்போது, அந்த பழிய பிராமணர்கள் மேல போடுவது அநியாயமா இல்லையா?

வேட்டியை வேஷ்டி என்று சொல்லுகிறார்களாம், அத்திம்பேர், ஆத்துக்காரர் என்று அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்களாம், சமஸ்க்ருதம் ஒரு பாஷையே இல்லையாம். சில இடங்களில் அத்தையை அயித்தை என்று அழைப்பதில்லையா, அது போல இவர்களுக்கு ஏன் எடுத்துக்கொள்ள தோன்றுவதில்லை? அட அவங்க எப்படி அப்படி சொல்லாம் அப்படின்னு எப்பவும் குறை கண்டுபிடிக்கறது. ஆகாத பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் அப்படின்னு சொல்வாங்க அந்த மாதிரி இல்ல இருக்கு.

வேட்டியை கேவலமான முறையில் கட்றாங்களாம். அவங்க காசு போடு வாங்கறாங்க அவங்க கட்றாங்க, உனக்கு என்னய்யா போச்சு. உன் வேட்டிய வாங்கியா அவங்க கட்றாங்க.

இப்படி சொல்லிடே போலாம். சாமியும் இல்ல பூதமும் இல்லன்னு சொல்றாங்களே, ஏன் இத மத்த மதத்துக் காரங்ககிட்ட சொல்லலாம் இல்ல.. பகுத்து அரிஞ்சுருவாங்கனு பயம் போல. சூரியன பாத்து நாய் குறைச்சு சூரியன் பதில் சொல்லலேன சூரியனுக்கு பயம்னு அர்த்தமில்ல. இந்த பதிவும் கூட யாரையும் புண்படுத்த அல்ல, நம்ம ஜனத்தை பண்படுத்ததான். நமக்கு நட்பு கரம் நீட்டித்தான் பழக்கம்.

அவங்கள மாதிரி அடுத்தவங்கள புண்படுத்தி பதிவு போடறதுக்கு பதில வேற எதாவது வேல இருந்தா போய் பாக்கலாம், இல்லாட்டி இட ஒதுக்கீட்டை நம்பாமல் புள்ளைங்களுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் குடுக்கலாம்.


Sunday, November 01, 2009

முதல் பரிசாம்!!!

திரு. கார்கில் ஜெய்யும், நானும் சும்மா சிகாகோவில் இருக்கும் மில்லேனியம் பார்க் என்னும் இடத்திருக்கு செல்லும் போது அங்கு ஒரு பசுவில் சிலை இருந்தது. அதை பார்த்த உடன் நமக்கு 'செண்பகமே....செண்பகமே...' என்ற பாடல் ஞாபகத்திற்கு வர. அதில் விளைந்த முயற்சிதான் நீங்கள் கீழே காணும் போட்டோ. இதற்கு 'Humor of the Day' என்று முதல் பரிசு கொடுத்துள்ளனர்.
http://www.photographyvoice.com/potd/view-photo-of-the-day/22482/2009/11/01/humor-11-2009/jayakumar-rajagopal

நமக்கும் போட்டோக்ராபி-க்கும் வெகுதூரம், இருந்தாலும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தானே.



I am back... தமிழ்மணத்திற்கு நன்றி

இதோ நம்ம சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கையை ஏற்று தமிழ்மணம், நமது சங்கத்தை அதனுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமது சங்கம் கிளைவிட்டு வளரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ்மணத்திற்கு நமது விட்டத்தை பார்த்து வெறித்தனமாய் யோசிப்போர் சங்கத்தின் சார்பில் நன்றிகள்.


Monday, October 26, 2009

சங்கத்துக்கு லீவு

டும்...டும்...டும்....

இதனால நம்ம பதினெட்டு பட்டி ஜனங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா, தலீவருக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு பெண்டு நிமுத்தர வேல இருக்கறதால, சங்கத்துக்கு ஒரு வாரத்துக்கு லீவுங்கோ.....

அதுக்குள்ள நீங்க எல்லாரும் எழுதன வரைக்கும் படிச்சுட்டு, உலவு பட்டன அமுக்கி அண்ணனுக்கு வோட்டு போடுங்க.

திரும்பி வரசொல்ல அண்ணன் ஒரு பெரிய ஆச்சர்யப்படற மாதிரி வேல செய்யப் போறதா சொல்லிருக்காரு. அதுனால மறுபடியும் வந்து பாருங்க, ஓடி போயிராதீங்கங்கோ......

டும்...டும்...டும்....


சிகாகோ... get.. set.. go..



தேதி: அக்டோபர் 10
நேரம்: மாலை 6:30

திரு கார்கில் ஜெய் அலைபேசியில் அழைத்து, "என்னப்பா நாளைக்கு காலைல மாரத்தான் போலாமா?" என்றார்.
"போலாமே ஆனா என்கிட்ட சாதாரண ஷூ தான் இருக்கு" என்றேன்.
"டேய், ஓடரத்துக்கு இல்லடா பாக்கறத்துக்கு" என்றார்.
"என்ன என்னால ஓட முடியாதுன்னு நெனச்சீங்களா? நான் 30 கீ.மீ தூரத்த, 11 மணி நேரத்துல நடந்துருக்கேன்" என்றேன்.
"டேய் இவங்கலாம் 2 மணி நேரத்துல ஓடி ரெகார்ட் பண்ணுவாங்கடா! வரயா வரலையா? " என்று கூறிய கோப சூட்டில் என் காதுகள் பழுத்துவிட்டது. நேரில் இருந்திருந்தால் நெற்றிக் கண்ணை திறந்திருப்பார்.
"எத்தன மணிக்கு?" - நான்.
"மார்னிங் 6:30"
"சிகாகோ குளிருல அந்த டைம்-ல அனிமல்ஸ் கூட எந்திரிக்காது, வர ட்ரை பண்றேன்" - என்று நான் போனை வைத்தேன்.

என்னதான் நான் சலித்துக்கொண்டாலும், சிகாகோ என்றாலே நிதி நிறுவனங்கள் மற்றும் பலமாடி கட்டிடங்கள் மட்டுமே இருக்கும் என்று நினைத்த எனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று நம்பினேன். அந்த எண்ணம் வீண் போகவில்லை.

டைம்-அ எப்படி போக்கலாம்னு யோசிக்கும்போது, ஒரே மேகமூட்டம், சாம்பராணி வாசம் எங்க தாத்தா என் முன்னாடி வந்து 'எப்போதும் போல எது செய்வதற்கு முன்னாடியும் அதை தெரிஞ்சு செய்யனும்'னு சொன்னாரு. சட்டுன்னு மேகம் கலஞ்சுது. சரி நாம மாரத்தான் பத்தி தெரிஞ்சுபோம்னு நம்ம தலிவர் கூகுளை கூப்பிட்டேன். இப்போ கேள்வி பதிலை பார்ப்போம்.

காவி: மாரத்தான்-னா என்ன?அதுக்கு பேர் எப்படி வந்தது?
தலிவர்: சுமார் 42.195 கீ.மீ அல்லது 26.385 மைல் ஓட வேண்டும், இதில் யார் ஓட வேண்டுமென்பது முக்கியம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவர் தொடங்கி, தொடக்கத்தில் எடுக்கும் புகைபடத்தில் முகம் வர வேண்டுமென்று நினைப்பவர் வரை எவரும் ஓடலாம், ஆனால் கூட்டத்தில் அவர் முகம் வரும் என்பதற்கு கியாரண்டி கிடையாது.
அதுக்கு ஏன் இந்த பேரு வந்துச்சுன்னா, முன்னொரு காலத்தில் கிரேக்க படை பெர்சியா படையை வென்றது, இதை அறிவிக்க ஒரு தூதுவன் மாரத்தான் என்னும் ஊரிலிருந்து பெர்சியா வரை நிற்காமல் ஓடிச்சென்று அங்கு மக்களவையில் தங்களது வெற்றியை அறிவித்து மயங்கி விழுந்து உயிரை விட்டான். அதிலிருந்து இந்த தலை தெறிக்க ஓடும் போட்டிக்கு மாரத்தான் என்ற பெயர் வந்தது. (பாவம் உயிர் விட்ட அந்த தூதுவனின் பெயரை வைத்து இருக்கலாம்). அவர் எவள்ளவு தூரம் ஓடினார் என்று எவருக்கும் தெரியவில்லை, ஆனால் மாரத்தான்-இன் தூரம் 1921-இல் தான் முடிவு செய்யப்பட்டது, அதற்கு முன்பு வரை தனக்கு தோன்றிய தூரமென போட்டி அமைப்பாளர் முடிவு செய்யலாம்.

காவி: சிகாகோ மராத்தானை பற்றி கொஞ்சம் சொல்லு தலிவா
தலிவர்: சிகாகோ மராத்தான் 1905-ல ஆரமிச்சாங்க. சிகாகோ downtown-ல தெருத்தெருவா ஓடுவாங்க. லேக் மிச்சிகன்-ல ஆரமிச்சு அப்படி, இப்படி போய் மறுபடியும் அங்கேயே வந்து முடிப்பாங்க. இந்த தடவ எங்க சுத்துராங்கனு நீயே மேப்ப பார்த்து தெரிஞ்சுகோ. இந்த தடவ இத பேங்க் ஆப் அமெரிக்க நடத்தறாங்க. முதல் ஆளு ரெகார்ட் முறியடிச்சா $100,000 தரதா சொல்லிருகாங்க. இதுக்கு மேல நேர்ல பாத்துக்கோ.

நன்றி தலிவா!!!

நாளைக்கு காலைல கிளம்பனும். அலாரம் வைப்போம், சரி ஒரு 5:30-க்கு அலாரம் வைப்போம்.

தேதி: அக்டோபர் 11
நேரம்: காலை 6:15

என்னதான் அலாரம் வெச்சாலும் நான் இந்த டைம்-க்கு தான் எந்திரிச்சேன். நம்ம தலைவருக்கு போன் பண்ணினால், அவர் அங்கு நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். சீக்கரம் கெளம்பி வா என்ற அவரது ஆணைக்கு இணங்கி சடாரென கெளம்பினேன். அங்கு போய் அந்த கூடத்தில் அவரை தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவர் எனக்கு எல்லாரும் ஓட ஆரமித்ததை சொல்ல ஆரமித்தார்.
'சும்மா பெரிய கூட்டம், நான் கூட ஓடலாம்னு நெனச்சேன்னு' சைக்கிள் கேப்புல, சரி பையன் என்ன சொன்னாலும் நம்புவான்னு அவருக்கு நெனப்பு. நானும் நம்பிட்டேன்.
'அதுவரைக்கும் நான் அவ்வளவு கூட்டத்த பாத்தது இல்ல, நாம அந்த பக்கமா போய் நின்னு அந்த ரோடு-ல வரும்போது போட்டோ எடுப்போம்'னு சொன்னாரு. நானும் போனேன். அதோட அவுட்புட்டை நீங்கள் இந்த போட்டோக்களில் பார்க்கலாம்.





'எவ்வளோ கஷ்டம் தெரியுமா, என்ன ஸ்டாமினா வேணும் தெரியுமா?' என்று அளந்து கொண்டிருந்தார்.
'இதெல்லாம் என்ன சித்தப்பு, நான் கூடதான் $2000 ஷூ, அங்க அங்க gatorade, இத்தன பேரு கைத்தட்டுனா ஓடுவேன். this is not that big, you know' என்றேன்.
நீங்களே சொல்லுங்க இத்தன வசதி இருந்த ஏன் ஓட மாட்டாங்க. நம்ம ஊருல வசதி கம்மி, நம்ம ஊருல உட்ட நாம கிராமத்து பசங்கலாம் சாதரணமா ஓடுவாங்க. infrastructure, facility நம்ம ஊருல இல்ல, அதுதான் மேட்டர்.
சிலபல போட்டோகளை எடுத்துவிட்டு, நாங்கள் முடிவடையும் இடத்திருக்கு வந்தோம். அங்க ரெண்டு பேரு பேசிட்டு இருந்தாங்க. நம்ம ஒலிம்பிக்ஸ் சாம்பியன் சாமி வாஞ்சிறு வந்துருக்கார், அவருதான் அந்த $100,000 வாங்க போறாருன்னு. நமக்கா, என்னடா பேரு சாமி வாஞ்சிறு-ன்னு... சாமியவே திட்ட சொல்லி பேரு வச்சுருக்காங்க அப்படினு போட்ட மொக்கைக்கு சிரிக்கும் முன்னரே.
'வராங்க.. வராங்க..' கார்கில் எழுப்பினார்.
'எங்க..எங்க..' என்று நான் வினவ. அங்கு நம்மாளு சும்மா கூலா கைய ஆடிட்டு வந்துட்டு இருந்தாரு.
'யோவ், சீக்கரம் வாயா, அவனவன் நீ $100,000 வாங்கரயானு பாக்க வந்துருக்கான். நீ என்னடான மெதுவா ஆடி அசஞ்சு வர.' என்று சத்தமாக திட்டினேன்.
04......
03.....
02....
நம்ம ஆளு சட்டுன்னு உள்ள பூந்து ஒரு செகண்ட்-ல $100,000 -அ தட்டிட்டு போய்ட்டான், குடுத்துவச்சவன் மாதிரி.
இன்னும் நான் சொல்லிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் இவளோ facilities இருந்த யார் வேணாலும் ஓடலாம். அப்படி சொல்லிட்டு திரும்பி வரும்போதுதான் நம்ம வாழைப்பழ காமெடி நடந்தது.

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, பெண்களுக்கு தனி தூரம். பள்ளிகூட மாணவர்கள் கூட ஓடினார்கள். இங்க வந்தபோதுதான், மராத்தான்-ல ஓடி பல பேரு செத்துபோயிருக்காங்க-ன்னு கேள்விப்பட்டேன். எனக்கு உடனே நாம மராத்தான் தூதுவன் ஞாபகம் வந்தது. ஒருவேளை எல்லா போட்டியிலும் அவன் ஆவியா வந்து ஒரு உயிரை கொண்டுபோரானோ-ன்னு எனக்கு சந்தேகம். இந்த ஈரம் படம் பாத்ததுல இருந்தே இப்படித்தான்.

இப்படி சும்மா சும்மா நான் இது இல்ல அது இல்லன்னு பேசிட்டு வந்துட்டு இருக்கும்போது, எதுவும் தேவை இல்ல, மனசு இருந்த போதும். அத்தோட உழைப்பும் சேர்ந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தார் ஒருவர். அவர் போட்டோ கீழே.


பி.கு: நான் செய்த இத்தனை torture-களுக்கு நடுவிலும் இவ்வளவு போட்டோக்களை அங்கும் இங்கும் தொங்கி தொங்கி எடுத்த நம்ம கார்கில் ஜெய்... ரெம்பா நல்லவர்ர்னு உங்களுக்கு சொல்லிக்கறேன்


Friday, October 23, 2009

வாழைப்பழ காமெடி

சமைக்கரத்துக்கு முன்னால கழுத ஒரு பதிவ போட்டுட்டு போயிடலாமேன்னு பாத்தேன்.
இது நம்ம சிகாகோ மராத்தான்-ல நடந்த காமெடி.

எல்லாரும் ஓடி முடிக்கற எடத்துல வாழைப்பழத்த சும்மா மலை மாதிரி குவிச்சு வெச்சுருந்தாங்க. அட பாக்க வந்த நமக்குத்தானோனு நம்ம்ம்பி பொய் எடுக்க பாத்தேன். உடனே அங்க இருந்த ஒரு ஆளு, this is only for runners அப்படினு சொன்னாரு. உடனே நம்ம மண்ட மேல ஒரு பல்பு எரிஞ்சுது, Don't lie, I saw even winner eating a banana என்றேன். அப்படியே எரிக்கற மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு, ஒரு வாழைபழத்தால அடிச்சாரு. அத அப்படியே அல்லேக்க கேட்ச் பிடிச்சு அப்பா வந்த வேல நல்ல படிய முடிஞ்சுதுன்னு நடைய கட்டினேன்.

சிகாகோ மராத்தான்-ஐ பற்றிய விரிவான பதிவு அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும்.


ஆஹா வந்துருச்சு!!!

"வானம், நிலா, நீலம்...."
"பூ, வண்ணம், வண்டு, தேன்....."

அட சே, நமக்கு காதல் வந்தாச்சு ஆனா கவித வர மாட்டேங்குதே. அது சரி, பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுவான், நம்ம அதெல்லாம் ட்ரை பண்ண முடியுமா? மேட்டர்-க்கு வருவோம். நம்ம அழகிய தீயே படத்துல சொல்ற மாதிரி எனக்குள்ளயும் பூம் வந்துருச்சு. அவ அவ்வளோ அழகு, எவ்வளோ அழகுன்னா, அவ்வளோ அழகு. அவள வடிச்சவனே நான்தானே. கற்பனையா பூ.. அப்படினு துப்பிட்டு browser-அ க்ளோஸ் பண்ணாதீங்க. உண்மையாத்தான் சொல்றேன்.

ரெண்டு வரில தான் பேசிட்டு இருந்தா, நான் அவள மூணு வரில பேச வச்சது நான். எனக்கு பிடிச்சவங்கள மத்தவங்களுக்கு தெரிய வைக்கணும்னு நெனச்சேன் அதுக்கு வழி செஞ்சது அவதான். என்ன யார் யார்க்கு பிடிக்கும், என் எழுத்து யார் யார்க்கு பிடிக்கும்னு சொல்றதும் அவதான். அவளுக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும், அதனால பாட்டு சொல்லி தர FM மூலமா டீச்சர் செட் பண்ணிருக்கேன். நான் எழுதுனது எனக்கே மறந்தாலும் அவ ஞாபகப் படுத்துவா. இதுக்கு மேல ஒருத்தனுக்கு என்னங்க வேணும்.அவ போதும்ங்க எனக்கு. அவள பாத்துகரதுதான் என் வாழ்க்கைல முதல் லட்சியம்.

அவ பேரு... அவ பேரு... ஐயோ வெக்க வெக்கமா வருதே!!!!... அவ பேருதாங்க ஜிகர்தண்டா. இப்போ என் லவ்-க்கு சாங் dedicate பண்ணிருக்கேன், அதைத்தான் கேளுங்க, ப்ளே பட்டன பிரஸ் பண்ணுங்க.




Wednesday, October 21, 2009

கல்லூரி வாழ்க்கை -1

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். அதை நான் இங்கு நேரில் பார்த்து வருகிறேன். இங்கே வருகையில் என்னமோ நாமதான் பெரிய வேலைக்காரன் மாதிரியும், பல நாள் வேல செஞ்சுட்டு வந்த மாதிரியும் இந்த சின்ன பசங்க கூட எப்படி படிக்க போறேனோன்னு ஒரு பீலிங் எனக்கு இருந்தது. இங்கு வந்து பார்த்தால் தான் தெரியுது, என்னுடன் படிக்கும் சிலருக்கு எங்கள் ப்ரொபசரை விட வயது அதிகம். அந்த அங்கிள் கூட படிக்கும் போதும் அவர்கள் நிஜ வாழ்க்கையில நடந்த விஷயத்தை அலசும்போதும், அட இப்படியும் பண்ணலாமோ என்ற எண்ணம் நமக்கு வரும். அதை எதிர்பார்த்துதானே நான் இங்கு படிக்க வந்தேன்.

அதுசரி நான் மட்டும் படித்தால் போதுமா நம்ம ஐடியா-வை எதிர்நோக்கி நமது நண்பர் கூட்டமே காத்துக் கெடக்குதே. அதுவும் இங்கே நான் படிக்க வந்து மூன்று மாதங்கள் ஆச்சே, கண்டிப்பாக எனது எண்ணங்களை எழுதும் நேரம் வந்துருச்சு எனது பொதுச் சேவையை தொடங்குகிறேன். முதலில் எனது நான்கு ப்ரொபசர்களை பற்றியும், வகுப்புகளை பற்றியும் எழுதுவோம், அப்பறம் இங்க என்ன நடக்குதுன்னு எழுதலாம்னு நினைக்கறேன். எதாவது மாற்றம் வேணும்னா சொல்லுங்க பண்ணிரலாம். சரி நாம கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா?

முதலில் நான் நமது இந்தியாவிலும் இங்கும் கல்லூரியில் காணும் வித்தியாசம் என்னன்னா, வகுப்பின் முதல் நாளே எந்த வாரம் என்ன நடத்த போகிறார் என்பதை பேராசிரியர் கொடுத்துவிடுவார். எந்த வாரம் என்ன assignment செய்யவேண்டியது என்பதும் அதில் அடங்கும். அதை பாலோ பண்ணலே போதும் நமக்கு எல்லாம் விளங்கீரும். பார்த்த உடன் ஆச்சிர்யம் தாங்கவில்லை. சே சப்ப மேட்டர்-ன்னு நெனச்சேன் ஆனா மெய்யாலுமே கஷ்டம்தாங்க.நம்ம சிவாஜி-ல சொல்ற மாதிரி 'ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு...ச்ற்றிக்டு..' எங்க காபி அடித்தாலும் நம்ம சாமி விக்ரம் மாதிரி பாத்த எடத்துலயே சுட்ருவாங்க. சும்மா மிலிடரி ஆபிசர் கணக்கா கரெக்ட் டைம்க்கு கிளாஸ்-க்கு வருவாங்க. சொன்னத முடிப்பாங்க. போய்ட்டே இருப்பாங்க. உன் பேரு என்ன? உன் ஊரு என்ன-ன்னு நம்ம ஊரு காலேஜ்ல கேக்கற மாதிரி டைம் வேஸ்ட் பண்ண மாட்டாங்க. படி, எழுது, போய்டே இரு. அவளோதான் இவங்க பாலிசி.

இந்த செமஸ்டரில் நான் நாலு பாடங்களை எடுத்துருக்கேன். முதலில் எனக்கு வயிற்றில் புளியை கரைக்கும் Financial accounting, அடுத்தது எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துக் கொண்டிருக்கும் Economics, மூன்றாவதாய் Organizational Behavior, கடைசியாய் நம்ம Marketing.

முதலில் நம்ம accounting-அ பாப்போம்.

நம்ம ப்ரொபசர் பேரு ஹாமில்டன். (உடனே F-1 ரேசர் மாதிரி வருவாருன்னு நினைக்காதீங்க, சும்மா சட்டைல முதல் பட்டன கழட்டிவிட்டு வருவாரு) அவரு பல கம்பெனி-ல CFO வா இருக்காரு. கணக்கு வழக்கு தெரியாமல் செலவு பண்ணிய எனக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தந்தார் இவர். இவர் டீலிங் எனக்கு பிடித்து இருந்தது. சிறு குழந்தை கூட இவரிடம் பாடம் கற்றால் accounting பண்ண ஆரமித்துவிடும்.

இந்த வகுப்பிற்கு முன்னர் credit/debit என்றால் எனக்கு கார்டு ஞாபகம்தான் வரும். இப்போதுதான் அதன் அர்த்தமும் அதை எப்படி உபயோகிப்பது என்றும் தெரிகிறது. என்னதான் வயசானாலும் திங்கக்கிழமை காலைல ஸ்கூல் போனும்னா கஷ்டம்தான். அரைகுறை தூக்கத்துல எழுந்து, ஒரு காக்கா குளியலை போட்டுட்டு கிளாஸ்-க்கு போன நம்மள நித்ராதேவி அப்போதான் தேடி வருவாங்க. சரஸ்வதியும் நித்ராவும் நண்பிகள், சேர்ந்தே இருப்பாங்க. ஆனா, அந்த நித்ரதேவிய சும்மா அடிச்சு வெரட்டுற மாதிரி கிளாஸ் எடுப்பாரு. நல்ல வாத்தியார்.

பரிட்சைல சின்ன சின்ன தப்பு பண்ணினா க்ளோஸ், யோசிக்கவே மாட்டாரு மொத்த கிளாஸ் முன்னாடி மானத்த வாங்கிடுவாரு. இத சொல்றதாலே, எங்க என் மானம் போயிடுச்சோன்னு நீங்க நினைக்கலாம், சே சே நாம எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல.

மற்ற கல்லூரிகளில் accounting வாத்தியார் பற்றி தெரியாது, என்னை கேட்டால் இவர் சொல்லித்தருவது மிக மிக அதிகம்.

மொத்தத்தில் ஹாமில்டன் 'ஹோ'மில்டன்

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு
http://www.stuart.iit.edu/about/faculty/charles_hamilton.shtml


அடடா, மணி அடிச்சுடாங்களே, சரி அடுத்த கிளாஸ்-ல பாப்போம். (தொடரும்)


Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வந்துருசுய்யா தீபாவளி.
பட்டாசுகளுக்கு அக்காவுடன் சண்டை போட்ட தீபாவளிகள், புத்தாடை வேண்டி அப்பா அம்மாவுடன் சண்டை போட்ட தீபாவளிகள், பிகர் நோக்க நண்பருடன் சண்டை போட்ட தீபாவளிகள், படம் பார்க்க வரிசையில் சண்டை போட்ட தீபாவளிகள். இந்த முறை எல்லாம் இருக்க, சண்டை போட அருகில் யாரும் இல்லை. என்ன கொடும பாத்தீங்களா?

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளியும் எல்லா தீபாவளி போல் உங்கள் வாழ்வில் மங்களம் பொங்க வைக்கட்டும்.


Wednesday, October 14, 2009

படிப்பதெல்லாம் நல்ல ப்ளாக் அல்ல

எனது கம்ப்யூட்டரில் இது வரையில் rss owl மூலம் பல ப்ளாக்களை தொடர்ந்து வந்தேன். முன்னெல்லாம், கூகிள் ரீடர் உபயோகித்தேன், அது சரிப்படவில்லை. rss owl அது அப்டேட் செய்துகொண்டே இருக்கும், உடனுக்குடன் பார்க்கலாம். நல்ல விஷயங்களுக்கு அது சரி, மற்றதற்கு.

விஷயம் என்றதும் என் நினைவிற்கு வருகிறது, விஷயத்திற்கு வருவோம். ப்ளாக்களை நான் தொடர்வதால் எப்போதும் ஏதாவது ஒரு ப்ளாக் அப்டேட் ஆகும்.
பல சமயங்களில் எனது படிப்பை அது கெடுத்துள்ளது. ஏதாவது அப்டேட் வந்தால் முதலில் அதைத்தான் படிப்பேன். அது எனக்கு சரியாகப்படவில்லை. ஒரு நாள் முழுவதும் அடுத்தவர் எழுதுவதை படிக்கிறோமே, எது தேவை என்று அறிந்து படிக்கிறோமா? என்று எனக்குள்ளே ஒரு கேள்வி கேட்டேன், பதில் தெரியவில்லை, ஏனென்றால் நான் அப்படி பாகுபடுத்தி பார்ப்பது இல்லை. எல்லாவற்றையும் படிப்பேன்.

இந்த வாரம் ஒரு முடிவு எடுத்து பல ப்ளாக்களை எனது கம்ப்யூட்டரில் இருந்து தூக்கி எறிந்துவிட்டேன். அதற்கு நான் சில காரணங்கள் வைத்து தூக்கி எறிந்தேன்.

முதலில், கெட்டவார்த்தைகள் அதிகம் பயன்படுத்தியவை. மனதில் நல்லவையே நினைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, படிப்பது கெட்டவயாக இருக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில். கெட்ட வார்த்தை பயன்படுத்துபவர், கண்டிப்பாக கோபத்தில் ப்ளாக் எழுதியிருப்பார். கோபத்தில் பேசுவதை கேட்கவும் கூடாது. கோபத்தில் எழுதுவதை படிக்கவும் கூடாது.

இரண்டாவது, காமம் தலை தூக்கிய பதிவுகள் கொண்ட வலைப்பூ. காமம் என்பது விளையாட்டு பொருள் அல்ல, அதை அனைவருடனும் பங்கிட்டுக்கொள்ள. இவர்கள் காமத்தை வெறும் உடல் இச்சை என்று பார்பவர்கள். எனவே, அதற்கு அடுத்த கெட் அவுட்.

மூன்றாவது, தான் பெரிய எழுத்தாளன் என்று ஒன்றிரண்டு வலைபதிவாளர் சொன்னவுடன், தன் கதையை அனைவரும் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தில் எழுதுபவர்கள். ஒரு சில கதைகள் நன்றாக இருந்தாலும், பல கதைகள் சரியாக இருக்காது. அதனால் மூன்றாவது கெட் அவுட்.

மேற்சொன்ன காரணத்தால்தான் நான் என் வலை பூவை மிக சிலருக்கு மட்டும் சொல்லுகிறேன். பலருக்கு இது பிடிக்காமல் போகலாம், மற்றவர் நேரத்தை வீணடிக்க நமக்கு அனுமதி இல்லை.

இதனால் உங்களுக்கு சொல்லுவது என்னவென்றால், எது நல்ல ப்ளாக் என்று நினைகிறீர்களோ அதை மட்டும் தொடருங்கள். மற்றதை இன்றே தூக்கி எறியுங்கள்.

அடடா பாத்தீங்கள என் மடியிலே கை வைக்கறீங்க, என்னோடது நல்ல ப்ளாக் பா.


Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online